நேமிநாத தீர்த்தங்காரர் |
ராதா மனோகர் : திருப்பதி வெங்கடாசலபதி அலைஸ் பாலாஜி என்று அழைக்கப்படும் திருப்பதி கோயில் ஒரு சமண கோயில் என்று ஜெயின் ஆராய்ச்சியாளர்கள் அறுதி இட்டு கூறுகின்றனர்
எட்டாம் நூற்றாண்டளவில் ராமானுஜரும் சங்கராச்சாரியும் ஏராளமான சமண பௌத்த கோயில்களை இந்து கோயில்களாக மாற்றியுள்ளனர்
திருப்பதி வெங்கடாசலபதியின் சிலையை பல தடவைகள் எந்தவித ஆபரணங்களும் இல்லாமல் புகைப்படம் எடுத்துள்ளனர்
அவற்றில் மிக தெளிவாக இந்த உண்மை தெரிகிறது
வெங்கடாசலபதியின் முகத்தை மறைக்கும் அளவுக்கு நாமம் போடுவதன் ரகசியம் இதுதான்
நாமம் முழு முகத்தையும் மறைத்துவிடும் . இதன் காரணமாகவே ஒருவரை ஏமாற்றுவது என்றால் நாமம் போடுவது என்றா சொல்தொடர் உருவாகி இருக்கலாம் .
இந்த கருத்தை மறுப்பது மிகவும் சிரமம் . இதை நம்புவதற்கு போதியளவு முகாந்திரம் உள்ளது
அந்த சிலை சமணர்களின் மூன்றாவது தீர்த்தங்கரர் என்று கருதப்படும் நேமிநாதரின் சிலையாகும் click - link tirupati jain-temple
இந்த உண்மை அங்கு காலம்காலமாக பணிபுரியும் பல பார்ப்பனர்களுக்கும் பல வரலாற்று ஆய்வாளர்களுக்கும் தெரிந்த உண்மைதான்
திருப்பதி வெங்கடாசலபதி என்ற பெயர் ஒரு பிராண்ட் பெயராக பணம் கொழிக்கும் வர்த்தகமாக மாறிவிட்டதால் காரணமாக பலரும் மௌனமாகி விட்டனர்
இந்து மத வரலாற்றில் வெங்கடேஸ்வரர் என்று எந்த ஒரு அவதாரமும் கிடையாது என்பது எல்லோரும் அறிந்ததே ஆனால் இன்று வெங்கடேஸ்வரர் என்றும் அவரது மனைவி பத்மாவதி என்றும் தங்களது கற்பனை வளத்தை கொஞ்சம் கூட குற்ற உணர்வின்றி அவிழ்த்து விட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக