ராதா மனோகர் : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை நம்பிய அந்த 4000 இந்திய வீரர்களுக்கு என்ன நேர்ந்தது?
ஹிட்லரின் நாசிகளோடு கூடி குலாவி பாசிச அரசியலை முன்னெடுத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய வரலாறுகள் ஒவ்வொன்றாக வெளிகொண்டுவர வேண்டிய வரலாற்று தேவை இன்று இருக்கிறது.பிரித்தானிய படைகளிடம் இருந்து ஜெர்மனிய ராணுவம் கைப்பற்றிய ஆயிரக்கணக்கான இந்திய போர்வீரர்கள் உட்பட,
ஜெர்மனியில் இருந்த இந்தியர்களிடம் ஒரு ஹீரோவுக்கு உரிய பிம்பத்தோடு வலம்வந்தார் சுபாஷ் சந்திர போஸ்.
அங்கு இவர் ஆரம்பித்த இந்திய தேசிய ராணுவத்தில் சுமார் 4000 இந்தியர்கள் சேர்ந்தனர்
ஹிட்லரின் ஜெர்மன் படைகளோடு தோளோடு தோளாக நின்று ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்
அதாவது நாசிகளோடு கூட்டாளிகளாக மனித குலவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்
ஹிட்லரின் உதவியோடு இந்திய சுதந்திரம் என்ற போதயை சுபாஷ் சந்திர பாஸ் இவர்களுக்கு வழங்கி இருந்தார் பின்பு ஹிட்லர் சகவாசம் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தராது என்று காலம் கடந்து கண்டு கொண்டார்
தன்னால் உருவாக்கப்பட்ட இந்த நான்காயிரம் இந்தியர்களை பற்றிய எந்த கவலையும் இன்றி ஹிட்லரின் உதவியோடு ஜப்பான் நோக்கி தனது அடுத்த பயணத்தை ஆரம்பித்தார்
அமெரிக்க ரஷியா பிரான்ஸ் பிரித்தானிய படைகளிடம் சிக்குண்ட இந்த 4000 இந்தியர்களுக்கு என்ன நடந்தது?
இது பற்றி சுபாஷ் சந்திர போஸ் எந்த காலத்திலும் எந்த கருத்தையும் தெரிவித்ததாக தெரியவில்லை
அவர்கள் வேட்டையாடப்பட்டார்கள் ..
இன்று வரை இவர்களை பற்றி எவரும் பேசியதாக கூட தெரியவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக