சனி, 29 ஜனவரி, 2022

ஹோலி கிராஸ் பெண்கள் பள்ளி / கல்லூரி இல்லையென்றால் சீதாலட்சுமி பள்ளி/கல்லூரி என்று ஒன்று ....?

May be an image of 2 people, motorcycle and outdoors

சுமதி விஜயகுமார்  :     சென்ற வாரம் வாட்ஸாப்ப் செயலியில் ஒரு காணொளி வந்தது.
 அதில் ஒருவர் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்தியர்கள் எப்படி சுரண்டப்பட்டார்கள் என்று பட்டியலிட்டார். அப்போது ஒன்றை குறிப்பிட்டார்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பொழுது இந்தியர்களின் கல்வி விழுக்காடு வெறும் 19% மட்டுமே இருந்தது என்று குற்றம் சாட்டினார்.
ஆனால் அந்த 19% தில் எவ்வளவு விழுக்காடு பார்ப்பனர்கள் இருந்தார்கள் என்றோ,
 ஆங்கிலேயர்கள் ஆட்சி முன்பு இந்திய பரப்பளவில் எத்தனை விழுக்காடு கல்வி கற்றவர்கள் இருந்தார்கள் என்றோ,
 அப்படி கல்வி கற்றவர்கள் கூட என்ன விதமான கல்வியை கற்றார்கள் என்றோ குறிப்பிடவில்லை.


கடந்த சில நாட்களாக தாங்கள் படித்த பள்ளி ஒரு கிறிஸ்துவ பள்ளி என பலரும் பதிவிட்ருந்தார்கள்.
நான் lkg முதல் கல்லூரி வரை படித்தது ஒரு பார்ப்பன வளாகத்தில். மலைக்கோட்டையில் இருந்து பார்த்தால் எவ்வளவு பெரிய வளாகம் என்று தெரியும்.
LKG முதல் +2 வரை metriculation /cbse  இருபாலர் பயிலும் காமகோடி வித்யாலயா பள்ளி, 6 முதல் +2 வரை ஸ்டேட் போர்டு பெண்கள் பயிலும் சாவித்ரி வித்யாசாலா பள்ளி,  சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரி, பாலிடெக்னிக், ஹாஸ்டல், மைதானம் என்று மிக பெரிய வளாகம். பாலிடெக்னிக் தவிர மற்ற அனைத்திலும் படித்திருக்கிறேன்.

என் நண்பர்களை விடவும் அந்த வளாகத்தில் எனக்கு பற்றுதல் அதிகம். என் இளமை காலம் முழுவதும் அங்கு தான் செலவத்திருக்கிறேன். திரும்பி பார்க்கையில் எனக்கு அங்கு பயின்றது எந்த விதத்திலும் சங்கடத்தை கொடுக்கவில்லை. நாட்களும் ஆசிரியர்களும் இனிமையாகவே இருந்தார்கள்.
காலையில் அசெம்பிலியில் கடவுள் பாடல் ஒன்றை பாட வேண்டும். பிறகு தேசிய கீதமோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தோ பாட வேண்டும். ஒவ்வொரு வெள்ளியும் முதல் வகுப்பு பஜனைக்கு. காமகோடியில் படிக்கும் பொழுது பஜனை prayer hallலில் நிகழும். அங்கு காஞ்சி காமகோடி படம் மிக பெரிதாய் மாட்டியிருக்கும். சாவித்ரி வித்யாசாலாவிலும், கல்லூரியிலும் மாணவர்கள் அதிகம் என்பதால் எப்போதும் போல அசெம்பிளி நடக்கும் இடத்திலேயே நடக்கும். நெருங்கிய கிறிஸ்துவ இஸ்லாமிய நண்பர்கள் இல்லாததால் பஜனையில் அவர்களும் எங்களுடன் சேர்ந்து பாடுவார்களா இல்லையா என்பதை கவனித்ததில்லை. வளாகத்தில் ஒரு சிறிய ராமர் கோவிலும் உண்டு. இவை தவிர அங்கு பார்ப்பன மேலாதிக்கம் இருந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. நான் கல்வி கற்ற சமயம் பெரியாரியல் நான் அறிந்திராத ஒன்று.

4 வருடங்களுக்கு முன்பு தான் பெரியார் ஒருமுறை அங்கு உரை நிகழ்த்தியதாக படிக்க நேர்ந்தது. அப்போது அதன் உரிமையாளரை மிகவும் புகழ்ந்து பெரியார் உரையாற்ற, தோழர்கள் பலர் ' என்ன ஒரு பார்ப்பனரை போய் இப்படி புகழ்ந்திருக்கிறீர்களே ?' என்று கேட்ட பொழுது  பெரியார் 'பார்பனராய் இருந்தால் என்ன? அவர் பள்ளி , கல்லூரியில் எத்தனை பெண்கள் படித்து முன்னேறி இருக்கிறார்கள்! நான் பாடுபடுவதும் அதற்குத்தானே ' என்று பதில் அளித்துள்ளார். 2 வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் கல்லூரிக்கு சென்றேன். அப்போது தாளாளர் திரு பஞ்சாபகேசனை  சந்தித்தோம். எங்களை கண்டு மிகவும் மகிழ்ந்தார்.நிறைய நேரம் ஒதுக்கி பேசிக்கொண்டிருந்தார். எனக்கு அவரிடம் கேட்க ஒரே ஒரு கேள்வி தான் இருந்தது. இந்த பள்ளி , கல்லூரி எப்படி ஆரம்பிக்கபட்டது என்பதுதான்.

அவர் சொன்ன விளக்கம் , அப்பொழுது  கிறிஸ்துவ பள்ளிகள் தான் இருந்தது. இந்துக்கள் சிலர் கூடி என் தந்தையிடம் (திரு ராமசாமி அய்யர்) நம் குழந்தைகள் கிறிஸ்துவ பள்ளிகளில் படிக்கிறார்கள். நாம் ஒரு பள்ளி திறக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்க, ராமசாமியுடன் சேர்ந்து சிலரும் சிறு நிலத்தை வாங்கி பள்ளியை துவங்கினார்கள். முதலில் அது ஆண்கள் பள்ளியாகவே இருந்தது. பின்னர் பெண்களும் பள்ளியில் சேர , பின்பு பெண்கள் மட்டுமே பயிலும் பள்ளியாகியது. மற்றவர்கள் காலப்போக்கில் விலகி கொள்ள , ராமசாமி மட்டும் தொடர்ந்து பள்ளியையும் கல்லூரியையும் விஸ்தரித்தார் என்று விளக்கினார்.
திருச்சியில் மிக பழைய பெண்கள் கல்லூரிகள் என்று எடுத்துக்கொண்டால், ஒன்று சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி மற்றொன்று ஹோலி கிராஸ். இதில் முதலில் எந்த பள்ளி / கல்லூரி திறக்கப்பட்டிருக்கும் என்பதற்கு பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவை இல்லை. எப்படி திருக்கப்பட்டதாயினும் சரி, பல லட்சம் பெண்களுக்கு அந்த பள்ளியும் கல்லூரியும் ஒரு விடிவிளக்காய் இருந்திருக்கிறது. என் அத்தை அங்கு தான் படித்தார்.

பெருமையாக சொல்லிக்கொள்ள முடியவில்லை என்றாலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு தான் படித்தார். காமகோடியை தவிர சாவித்ரி வித்யாசாலா , கல்லூரி மற்றும் பாலிடெக்னிக்ல் கட்டணம் மிக மிக குறைவு. என் வகுப்பில் பல ஏழை மாணவர்கள் பயின்றார்கள். இந்த கடந்த முறை சென்ற பொழுது மத்திய உணவு இடைவெளியில் மிகவும் வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு இலவச உணவும் வழங்கி கொண்டிருந்தார்கள். அதை நான் பார்க்கும் போது அந்த குழந்தைகளுக்கு சங்கடமாக இருந்திருக்கும் என்ற பொழுதிலும், நான் பயின்ற பள்ளியில் இப்படி ஒரு நல்ல திட்டம் இருப்பதை பாராட்டாமல் எப்படி இருப்பது. பெரியார் சும்மா எல்லாம் ராமசாமி அய்யரை பாராட்டிவிடவில்லை.

இப்போது இன்னொரு கேள்வி பிறக்கிறது. ஒருவேளை ஹோலி கிராஸ் என்னும் பெண்கள் பள்ளி / கல்லூரி என்று ஒன்று இல்லையென்றால் சீதாலட்சுமி பள்ளி/கல்லூரி என்று ஒன்று இருந்திருக்குமா என்பதுதான். நான்  கிறிஸ்துவ பள்ளியில் பயிலவிட்டாலும், எனக்கு கல்வி என்பது மறைமுகமாக ஒரு கிறிஸ்துவ பள்ளியினால் தான்

கருத்துகள் இல்லை: