Shyamsundar - Oneindia Tamil : காபுல்: ஆப்கானிஸ்தானில் 20 வருட போருக்கு பின் ஆட்சியை பிடிக்கும் தாலிபான்களுக்கு வருமானம் எப்படி வருகிறது? அதன் வருட வருமானம் எவ்வளவு என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தாலிபான்கள் 1992ல் இருந்தே பெரும்பாலும் அரபு நாடுகளின் நிதி உதவி, ஒசாமா பின் லேடன் தனது அல் கொய்தா மூலம் சர்வதேச அளவில் திரட்டிய நிதி உதவி, போதை பொருட்கள் மூலம் கிடைத்த நிதி ஆகியவற்றை மட்டுமே நம்பி இருந்தது. தொடக்கத்தில் இதன் வருமானம் குறைவாக இருந்தாலும் வருடம் செல்ல செல்ல அதன் வருமானம் அதிகரிக்க தொடங்கியது.
இதற்கு முதல் காரணம் 2001 பிற்பகுதியில் இருந்து தாலிபான்கள் அமெரிக்காவிடம் நேரடியாக மோதியதால் பல்வேறு நாடுகள் மறைமுகமாக தாலிபான்களுக்கு நிதி கொடுத்தது.
அதோடு தாலிபான்கள் தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் தனியாக முறையான திட்டமிடலும் அரசு போல செயல்பட்டு வந்தது. இதுவும் கூட அதன் வருவாயை உயர்த்தியது.
இதன் தளபதிகள் ஹைபதுல்லா அகுண்சாடா, முல்லா முகமது யாகூப், சிராஜுதின் ஹக்கானி, முல்லா அப்துல் காணி பராதார், ஷேர் முகமது பாராதார், அப்துல் ஹக்கீம் ஹக்கானி என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்புகளை தாலிபான் அமைப்பில் கவனித்து வருகிறார்கள்.
உதாரணமாக முல்லா அப்துல் காணி பராதார் தாலிபான்களின் அரசியல் செயல்பாடுகளை கவனித்து வருகிறார்.
ஹைபதுல்லா அகுண்சாடா தாலிபான்களின் தலைமை, நிதி, நிர்வாகம் உள்ளிட்ட பணிகளை கவனிக்கிறார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணிகளை கவனிக்க தனி நீதிமன்றம், விசாரணை குழு, சட்டம் ஒழுங்கு, வருவாய் அமைச்சகம் என்று தனி ஆட்சியையே தாலிபான்கள் நடத்தி வருகிறார்கள்.
இவர்களின் சிறப்பான திட்டமிடல் மற்றும் நிதி மேலாண்மை காரணமாகவே 3 டிரில்லியன் டாலர் செலவு செய்து போர் நடத்திய அமெரிக்காவையே 20 வருடமாக வெற்றிபெற விடாமல் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அரசை விட இவர்களின் நிதி நிலைமை மிகவும் நன்றாகவே இருந்துள்ளது. அதோடு கடந்த ஐந்து வருடங்களில் தாலிபான்களின் நிதி நிலைமை உச்சம் தொட்டுள்ளது. இதனால்தான் இவர்களால் தற்போது நவீன ஆயுதங்கள், உயர் ரக துப்பாக்கிகள், உயர் ரக ஜீப்கள், டாங்கிகள் என்று அதி நவீன ஆயுதங்களை வாங்க முடிந்துள்ளது.
தாலிபான்களின் சிறப்பான பொருளாதார நிலை சமீபத்திய தாலிபான் புகைப்படங்களை பார்த்தாலே பலருக்கும் தெரிய வரும். நல்ல உடை, புதிய ஆயுதங்கள், கவசங்கள், தாலிபான் தலைவர்களின் வசதியான விலை உயர்ந்த உடைகள் என்று இவர்களின் பொருளாதார நிலை சமீபத்திய புகைப்படங்களிலேயே தெளிவாக தெரிந்தது. கடந்த 2016 வரை கூட தாலிபான்கள் அவ்வளவு பெரிய பணக்கார அமைப்பு கிடையாது. அப்போது தாலிபான்கள் 400 மில்லியன் டாலர் வருமானம் கொண்டு இருந்தது. டாப் 10 தீவிரவாத அமைப்புகளில் 2 பில்லியன் டாலருடன் ஐஎஸ் அமைப்பு முதலிடத்தில் இருந்தது. தாலிபான்கள் 5வது இடத்தில் இருந்தது.
அப்போது தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் கூட பெரிய அளவில் வருவாயை சந்திக்கவில்லை. ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் தாலிபான்களின் வருவாய் பல மடங்கு உயர்ந்து இருக்கிறது. அந்த அளவிற்கு வருவாய் குவிந்துள்ளது. கடந்த வருட ரிப்போர்ட்களின்படி தாலிபான்களின் 2020 வருவாய் 1.6 பில்லியன் டாலர் ஆகும். ஆம் இதுதான் அவர்களின் ஒருவருட வருவாய். 400 மில்லியன் டாலரில் இருந்து 5 வருட இடைவெளியில் 1.6 பில்லியன் டாலர் என்ற அசாத்திய உச்சத்தை தாலிபான்கள் தொட்டு இருக்கிறார்கள். இந்திய மதிப்பில் ஒரு வருட வருவாய் 11.8 ஆயிரம் கோடி ரூபாய். அந்த அளவிற்கு தாலிபான்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து வருவாய் வந்துள்ளது.
சுரங்க பணிகள் மூலம் கிடைக்கும் வருவாய்: $464 மில்லியன்
போதை பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாய்: $416 மில்லியன்
வெளிநாட்டு டொனேஷன் மூலம் : $240 மில்லியன்
சிறிய அமைப்புகளுக்கு ஆயுதம் மற்ற பொருட்களை ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாய்: $240 மில்லியன்
தங்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரி விதிப்பதன் மூலாம் கிடைக்கும் வருவாய் : $160 மில்லியன்
ரியல் எஸ்டேட் மூலம் கிடைக்கும் வருவாய்: $80 மில்லியன்
இந்த வருமானம் எப்படி சாத்தியமானது என்று பார்க்கலாம். சுரங்க பணிகள் வருவாய் என்பது சுரங்கங்களில் கிரானைட் தொடங்கி நிலக்கரி வரை பல்வேறு பொருட்கள் மூலம் தாலிபான்களுக்கு கிடைக்கும் வருவாய் ஆகும். போதை பொருள் வருவாய் என்பது தாலிபான் அமைப்புகள் நார்கோஸ் தொடரில் காட்டப்படுவது போல பல்வேறு நாடுகளுக்கு அபின், ஓபியம் ஏற்றுமதி செய்து பெறும் வருமானம் ஆகும். பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கொடுக்கும் நிதி வெளிநாட்டு டொனேஷன் கணக்கில் வரும். ஆனால் இந்த வருமானம் மறைமுகமானது. இது போக மக்களை அமெரிக்க படைகளிடம் இருந்து காப்பதற்காக பாதுகாப்பு வரி, தாங்கள் பிடித்த இடங்களை விற்று அதன் மூலம் ரியல் எஸ்டேட் வருவாய் ஆகியவற்றை தாலிபான்கள் பெறுகிறார்கள். இதில் போதை பொருள் வருவாய் நிலையாக தாலிபான்களுக்கு வந்துள்ளது.
வெளிநாட்டு நிதி 2018ல் 500 மில்லியன் டாலர் வரை தாலிபான்களுக்கு கிடைத்தது. ஆனால் இது கடந்த வருடங்களில் குறைந்துள்ளது. தாலிபான்கள் வருவாய் முழுக்க பாதுகாப்பு, போர், அது தொடர்பான செலவினங்கள் இதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் அரசின் 5.5 பில்லியன் டாலர் பட்ஜெட்டில் வெறும் 2 சதவீதம் மட்டுமே அதாவது 11 கோடி டாலர் ராணுவத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ளது. தாலிபான் தங்கள் படைக்கு வருடத்திற்கு 150 கோடி டாலருக்கு மேல் செலவு செய்கிறது.
இப்போது புரிந்து இருக்கும் ஏன் ஆப்கானிஸ்தான் படைகளுக்கு எதிராக தாலிபான்கள் எளிதாக வெற்றிபெற்றது என்று. தாலிபான் படைகளிடம் 85 ஆயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தாலும் அவர்களிடம் அதிக நிதி, ஆயுத பலம், பல இடங்களில் உள்ளூர் ஆண்கள் சப்போர்ட், முறையான திட்டமிடல் இருந்தது. இதனால்தான் ஆப்கானிஸ்தான் படைகளையும், அமெரிக்காவையும் எதிர்த்து இத்தனை நாட்கள் தாக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக