Hemavandhana - Oneindia Tamil News : காபூல்: ஆப்கனில், தாலிபான்களுக்கு எதிராக போராடும் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் 3 மாவட்டங்களை கைப்பற்றினார்கள்...
உள்ளூர் மக்கள் பலர் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஒரு சிலர் தாலிபான்கள் அடக்குமுறைக்கு பயந்து வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடுமையான சண்டை நடந்த நிலையில், அந்நாட்டின் முக்கிய பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.
இதனால் அந்நாட்டு மக்களிடையே ஒருவித பதட்டமும், பயமும், பீதியும், அச்சமும், பற்றியுள்ளது.. மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி கொண்டிருப்பதால், காபூல் ஏர்போர்ட்டில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
இதனால் தொடர்ந்து காபூல் ஏர்போர்ட்டில் மக்கள் குவிவதால், அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் சர்வதேச ஊடகங்களில் தகவல் வெளியானது
இந்நிலையில், ஆப்கனில், தாலிபான்களுக்கு எதிராக போராடும் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் 3 மாவட்டங்களை கைப்பற்றினார்கள்... உள்ளூர் மக்கள் பலர் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஒரு சிலர் தாலிபான்கள் அடக்குமுறைக்கு பயந்து வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
சிலர் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். தலைநகர் காபூலில் தொடங்கிய இந்த போராட்டம் பல்வேறு நகரங்களில் பரவியது. சில நாட்களுக்கு முன்னர் தாலிபான்கள் கொடியை அகற்றியதற்காக ஜலாலாபாத்தில் ஒரு கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்... இதில் 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்... 12 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் தாலிபான்கள் எதிர்ப்பு போராட்டம் அங்கு தொடர்ந்து நடந்து வருகிறது. தலிபான் எதிர்ப்பு போராளிகள் சில தாலிபான்களை கொன்றதாகவும், மூன்று மாவட்டங்களை தலிபான் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்ததாகவும் அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அதாவது கைர் முஹம்மது அந்தராபியின் கீழ் உள்ள பொது எதிர்ப்பு படைகள், தாலிபான் கட்டுப்பாட்டில் இருந்து பொல்-இ-ஹேசர், தே சலாஹ் மற்றும் பானு ஆகிய மாவட்டங்களை மீட்டதாக கூறுகின்றன. அவர்கள் இப்போது மற்ற மாவட்டங்களை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
இதற்கிடையே காந்தஹார் மற்றும் ஹெராட்டில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்குள் தாலிபான்கள் புகுந்து ஆவணங்கள், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார்களை எடுத்து சென்றதாக தகவல்கள் பரவின. அதேமாதிரி, காபூலில் உள்ள தூதரகத்தின் உள்ளூர் ஊழியர்கள் இந்திய துணை தூதரகத்தில் இதுபோன்ற சம்பவம் எதுவுமே நடக்கவில்லை என்று சொல்லி உள்ளனர்.. ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கடுமையான பசியின் பிடியில் சிக்கி உள்ளதாக இருப்பதாக ஐநா உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே தாலிபான்களின் நெருக்கடிக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்காக தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். அங்கு பாதுகாப்புக்கு நிற்கும் அமெரிக்க துருப்புகள் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். சுமார் 13,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக