தினத்தந்தி : ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படை விமானம் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே இரண்டு விமானங்களில் தூதர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா வந்துள்ளனர்.
மேலும், 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கவேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க விமானப்படைக்கு சொந்தமான சி-17 ரக விமானம் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களில் சிக்கியுள்ள இந்தியர்கள் காபூல் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு வரும் பட்சத்தில் அவர்களை விமானப்படை விமான மூலம் மீட்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சி-17 விமானத்தில் குறைந்தது 250 இந்தியர்களையாவது மீட்டுவிடலாம் ஆனால் காபூல் விமான நிலையத்தை எத்தனை பேர் வந்தடைவார்கள் என்பதை பொறுத்தே மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை தெரியும் என தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக