ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

சாட்டை துரைமுருகன்: .இனிமே தான் தீவிரமாக இறங்க போகிறேன் -! இனியாவது அடக்கி வாசிப்பாரா?

 Giridharan N | Samayam Tamil :  அரசியல் கட்சித் தலைவர்களை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுிட்டுள்ளது.
சாட்டை துரைமுருகன் யூடியூபில் அரசியல் கட்சித் தலைவரை அவதூறா சித்தரிப்பு.
திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.
துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு.
திருச்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன், ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


கடந்த மே மாதம் யூடியூபில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூ ஆகிய இருவரின் புகைப்படங்களை பயன்படுத்தி வீடியோ வெளியானது.
இதுதொடர்பாக திருப்பனந்தாளை சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜூன் மாதம் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப் பதிவு செய்து சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை: