வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

இந்தியாதான் தங்களது ராணுவ கூட்டாளி என்று அமெரிக்கா முடிவு செய்து விட்டது - இம்ரான்கான்

 தினத்தந்தி   :  இந்தியாதான் தங்களது ராணுவ கூட்டாளி என்று அமெரிக்கா முடிவு செய்து விட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்  : ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.
தலைநகர் காபூலைக் கைப்பற்றும் முயற்சிலும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.


தலிபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை 7 மாகாணங்களைக் கைப்பற்றி உள்ளனர். சுமார் 60,000க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
இந்நிலையில் இதுதொடர்பாக இஸ்லாமாபாத்தில் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், “ஆப்கானிஸ்தானில் 20 வருட சண்டைக்குப்பின்னர் தான் விட்டுச்செல்கிற குழப்பத்தின் பின்னணியில் மட்டுமே பாகிஸ்தானை பயனுள்ளதாக அமெரிக்கா பார்க்கிறது. இந்தியாதான் தங்களது ராணுவ கூட்டாளி என்று அமெரிக்கா முடிவு செய்து விட்டது. அதனால்தான் பாகிஸ்தானை அந்த நாடு வேறுவிதமாக நடத்துகிறது” என்று அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: