இதையடுத்து அவர் அங்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஒருவன், பீர் பாட்டிலால் பெருமாள் ராஜப்பேட்டையில் இருந்து வந்த வாலிபரின் தலையில் தாக்கினார்.
இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் போன் செய்து அவரது நண்பர்களை அங்கு அழைத்தார். பதிலுக்கு எதிர்தரப்பை சேர்ந்தவர்களும் தங்கள் ஆதரவாளர்களை அழைத்தனர்.
இதனால் அங்கு கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பாட்டில் மற்றும் கத்தி, கட்டைகளால் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதில் சோகனூரை சேர்ந்த சூர்யா, அர்ஜூன் மேலும் மதன், சவுந்தரராஜன் ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சூர்யா, அர்ஜூன் ஆகிய 2 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
காயமடைந்த 2 பேரும் திருத்தணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலையான சூர்யாவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. அர்ஜூனுக்கு திருமணமாகி 10 நாட்கள்தான் ஆகிறது. புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை மற்றும் கோஷ்டி மோதல் தகவல் சோகனூர் மற்றும் செம்பேடு பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க சாலை, வேடல், குருவராஜப்பேட்டை, பெருமாள்ராஜப்பேட்டை பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.
டி.எஸ்.பி. மனோகரன், அரக்கோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் ஆகியோர்
சித்தம்பாடி கவுதமநகர் பகுதிக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை
நடத்தினர்.
இந்நிலையில் கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு சோகனூர் சர்ச் பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதால் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக