திங்கள், 5 ஏப்ரல், 2021

27 42 33 600 ரூபாய்! தினமணி தினமலர் இந்து தினத்தந்தி....ஒரு நாள் முழுப்பக்க அதிமுக பாஜக விளம்பரம்! மக்களின் பணத்தில் வயிறு வளர்க்கும் நாளிதழ்கள்


இன்று அத்தனை பத்திரிக்கைகளுமே… பத்தாண்டு பழைய செய்தியை முதல் பக்க செய்தியாக பதிவு செய்து வெளியிட்டிருந்தது.
அத்தனை வழக்கும் திமுக.வினர் நிரபராதி என்று தீர்ப்பு வந்த வதந்திகள்.
ஊடக அறம் சிதைந்து கிடக்கும் இந்த ஒரு அவலத்திற்காகவே நாம் வாக்களிக்க வேண்டிய சின்னம்
Sundaram Kannan  திராவிட ஆய்வு
13000 ஏக்கரா , அன்னைக்கு கலைஞர் நினைச்சு இருந்தா 30000 ஏக்கர் அந்த ஒரே ஆளுக்கு சொந்தம் ஆகி இருக்கும், ஆண்ட பரம்பரை வசனம் பேசுறவன் எல்லாம் நக்கிகிட்டு போய் இருப்பான் ...
அரங்கநாதய்யர் !
இராமநாதையர் !
அப்பாவிடம் ஒரு முறை " தமிழகம் முழுக்க விவசாய நில உடைமையாளர்கள் காங்கிரஸ் காட்சியையோ, அதிமுகவையோ ஆதரிக்கிறார்கள். ஆனால் ஏன் குளித்தலை நில உடைமையாளார்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள் " என்றேன்.
அப்பா " ஆதரிக்காமல் ? கலைஞர் தாண்டா அங்கே குல தெய்வம், ரெண்டு பக்கமும் கானி நடுவுல பாயுற காவேரி. முப்போக விளைச்சல், வாழை, நெல்லுன்னு பொன்னு தர மண்ணு.
உழைச்சு உழைச்சு தண்டு வடம் வளைந்து பல நூறு தலைமுறையா விவசாயம் பார்த்த மக்கள். ஆனா மொத்த ஊருளையும் ஒரே ஒருத்தருக்கு கூட கால் ஏக்கர் நிலம் சொந்தம் இல்ல.
மொத்தம் இருந்த 33000 சொச்சம் ஏக்கர் நிலமும், அரங்கநாதய்யர், இராமநாதையர் என்ற இரண்டே இரண்டு பார்பனர்களுக்கு மட்டுமே சொந்தமா இருந்துச்சி. 60 க்கு 40 ன்னு அரசு சட்டம் கொண்டுவந்து, உழும் மக்களுக்கு 40 % நிலம் சொந்தம்ன்னு சொன்னுச்சு. அரசு சொன்னதே ஒழிய அதை செயல்படுத்த எந்த முன்னெடுப்பையும் எடுக்க யாரும் தயாரா இல்ல, மக்களிடம் எப்படி பிடுங்குவதுன்னு அவனுங்களுக்கு சொல்லியா தரணும் ? ஏருல காலே வைக்காத பயலுக 33000 சொச்சம் ஏக்கரை எப்படி வளைச்சு இருப்பானுங்க ? அப்படி லேசுல விட்ருவானா ? விடல, பிரச்னையை புரிஞ்சிகிட்ட கலைஞர் நேரடியா குளித்தலை வந்துட்டாப்ல.
ஒரு 10000 பேர் இருப்பாங்க கூட்டிகிட்டு நேர நிலத்துக்கு போயி ஏரை பூட்டி உழ ஆரம்பிச்சுட்டாரு. பிரச்சனை பெருசாச்சு, கலைஞரை கரெக்ட் செய்ய செப்படி வித்தையெல்லாம் செஞ்சாங்க ரெண்டு பேரும். முடியால. மிரட்டி பார்த்தாங்க, இந்தாளு விடுவதா இல்லை அப்போ தான் " உழுபவனுக்கே நிலம் சொந்தம் " ன்னு கலைஞர் பேசி பிரபலம் ஆனது அந்த வாக்கியம்.
எப்போதும் போல கலைஞர் 6 நாளைக்கு அப்புறம் வெற்றி கண்டார், பேச்சு வார்த்தைக்கு கலைஞரை இரெண்டு பார்ப்பனர்களுக்கும் அழைச்சாங்க. போனவரு குத்தகை தாரர் அனைவருக்கும் நிலத்தை வாங்கிகிட்டு வந்தாரு.
பிரச்னை முடிவுக்கு வந்தது, இது அவரு mla கூட இல்லாத நேரத்தில் செஞ்சது. அப்புறம் mla ஆகி முதல்வர் ஆகி , நில உச்சவரம்பு சட்டம் கொண்டுவந்து இன்னைக்கு தமிழ்நாட்டில் பிற்ப்படுத்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன் யார் நிலம் வெச்சுருந்தாலும் அதுக்கான விதையை கலைஞர் இந்த சட்டம் மூலமா உண்டாக்கினாரு.
அவரையெல்லாம் பேச எவனுக்காவது யோக்கியதை இருக்கா ? " என்றார்.
தமிழகத்தின் ஒவ்வொரு வளர்ச்சியும் கலைஞரால் நிகழ்ந்தது !
திமுக நம் தலைமுறை செழிக்க வந்த கட்சி

கருத்துகள் இல்லை: