நாளிதழ்களிடம் அறமில்லை என்றெல்லாம் சாபம் கொடுக்காதீர்கள். பாவம் அந்த கோடீஸ்வரர்கள்!
நாளிதழ்களும் பெரிய சேனல்களும் ஆளும் வர்க்கத்தின் கைப்பாவைகள் மட்டுமல்ல. ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவும்கூட. அவர்களால் இத்தகைய விளம்பரங்களை வெளியிடமுடியாது என்று மறுக்கமுடியாது. ஒரு கவிஞன் சொல்லியிருந்தான்: தர்ம யுத்தம் என்று ஏதுமில்லை, யுத்த தர்மம்தான் இருக்கிறது என்று. அதைப் போலவே தர்ம வியாபாரம் அல்லது தர்ம பத்திரிகையியல் என்று ஏதுமில்லை. வியாபார தர்மம் அல்லது பத்திரிகை தர்மம்தான் உண்டு. பத்திரிகை தர்மம் என்பது இந்தியாவில் என்ன அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது என்பது நமக்கெல்லாம் தெரியும்.
ஆனால் பாமர மக்களுக்கு எல்லாக் கதைகளும் தெரியும். எதை எப்படி பார்ப்பது என்று அவர்களுக்குத் தெரியும். நாளிதழ்களை நம்பித்தான் மக்கள் முடிவெடுக்கிறார்கள் என்றால் ஒருமுறைகூட திமுக ஜெயித்திருக்கமுடியாது. திராவிட இயக்கமே வளர்ந்திருக்காது. கம்யூனிஸ்ட் கட்சிகளே இல்லாமல் போயிருக்கும். சரத்குமார் மிகப் பெரிய தலைவராக வந்திருப்பார். ரஜினி ஐந்தாவது முறையாக தமிழ்நாட்டை ஆண்டிருப்பார். குஷ்பு இரண்டு முறையாவது முதல்வராக ஆகியிருக்கவேண்டும்.
பாஜக-அதிமுக விளம்பரம் நியூஸ்பிரின்ட்டுக்கு கேடு. அவ்வளவுதான்.
வாக்கெடுப்பு நாளில் நேராக வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள். திமுக கூட்டணிக்கு பெருவாரியாக வாக்களியுங்கள். முடிவு வெளியாகும் நாளில். இதே பத்திரிகைகள் என்ன செய்யப்போகிறார்கள்? திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது, மக்களே உங்கள் நிலம் பத்திரம் என்று தொலைநோக்கு பத்திரத்தை வாசிக்கப்போகிறார்களா? அல்லது, ஸ்டாலின் படத்தை பெரிதாகப் போட்டு. பேட்டியெல்லாம் எடுத்து. இன்றைக்கு இந்தியாவில் ஸ்டாலின் போல ஒரு தலைவர் இல்லை என்று எழுதப்போகிறார்களா? அத்தனை பேரும் புதிய அரசாங்கத்தின் விளம்பரங்கள் தங்கள் பத்திரிகைக்குக் கிடைக்கவேண்டும் என்று என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்வார்கள். ஏமாற விரும்புபவர்கள் மட்டுமே இவற்றைக் கண்டு ஏமாறுவார்கள்.
கடைசி நேர திசைத் திருப்பல்களால் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
பூத் ஸ்லிப் வந்தாச்சா? வாங்கிட்டீங்களா? வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதுதானே? எல்லா குடும்ப உறுப்பினர்களும் தயாராகத்தானே இருக்கிறீர்கள்? போய் குக்கு வித் கோமாளி பாத்துட்டு ஓய்வெடுங்கள். வாக்கெடுப்பு நாளன்று தூங்கிவிடாமலிருங்கள். சொல்ல மறந்துவிட்டேன். கொரானோ தொற்றுபரவுகிறது. பாசிஸ்ட்களிடமும் அவர்களது அடிமைகளிடமும் சமூக இடைவெளியை பேணுங்கள்.
LR Jagadheesan :இனிமேல் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் தருவது பற்றியோ பாலியல் தொழிலாளிகள் காவல்துறையால் கைது செய்யப்படுவது பற்றியோ தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தியோ விமர்சனமோ செய்ய முடியுமா?
முப்பதாண்டுகள் உள்ளுக்குள் இருந்து பார்த்து பொறுக்கமாட்டாமல் நான் சிலசமயம் ஊடகங்களுக்கு எதிராக வெடித்தபோதெல்லாம் உள் டப்பியில் வந்து சண்டை போட்ட அதற்காக நட்பை முறித்துக்கொண்டு போன நல்லவர்களே இன்று ஒட்டுமொத்த ஊரே நம்மை முச்சந்தியில் நிற்கவைத்து செறுப்பால் அடிக்கிறது.
ஏனெனில் நம்மிடம் குறைந்தபட்ச நேர்மை கூட பாக்கியில்லை.
“பன்னியோட பழகுனா நீயும் ***** திங்கணும்” என்பார் ஆதியம்மா. தமிழ்நாட்டு அரசியலின் ஆனப்பெரிய கேவலம், கீழ்மை, இழிவு என எல்லாவித சீரழிவுகளுக்கும் ஒற்றைவடிவமாய் உருவான சுயமோ சுயமரியாதையோ அற்ற ஒரு அரசியல் அடிமையிடம் கைநீட்டிக்காசுவாங்கி நீங்கள் அவரைவிட அற்பர்கள் என்பதை நீங்களாகவே ஒட்டுமொத்த உலகத்துக்கும் காட்டிக்கொண்டீர்கள்.
இதில் THE HINDU என்கிற ஆங்கில தினசரிக்குழுமம் உலகளாவிய அளவில் அறியப்பட்ட இந்திய ஊடக நிறுவனம்.
பல்வேறு சர்வதேச ஊடக அற நெறிகளுக்கான மிகப்பெரிய அமைப்புகளில் உறுப்பினராக இருக்கும் ஒரே இந்திய ஊடகமும் கூட. அந்த சர்வதேச ஊடக கூட்டமைப்புகளின் நெறிமுறைகள் ஊடக அறவிழுமியங்கள் வழிகாட்டு நெறிமுறைகள் எல்லாவற்றையும் இன்று அது வெறும் சிலலட்சங்கள் ஊழல் பணத்துக்கு விற்றுவிட்டது என்பது தான் வரலாற்று சோகம்.
இன்றைய அதன் கீழ்மை அதன் வரலாற்றில் இதுவரை தொடாத கீழ்மை. சீரழிவு. இதை எந்த கங்கையாலும் கழுவ முடியாது. நீங்காத கரும்புள்ளியாக நிரந்தரமாய் நிலைக்கும்.
The Hindu சர்வதேசமெல்லாம் கூட போகவேண்டாம். ஹிந்து குழுமம் நடத்தும் ஊடக பள்ளிக்கூட மாணவர்கள் மத்தியில் இன்றைய தங்களின் நடத்தையை ஹிந்து உரிமையாளர் போய் நியாயப்படுத்தட்டுமே பார்க்கலாம்.
எதிர்தரப்பாயினும் மதிக்கத்தக்க எதிர்தரப்பு என்றிருந்தோம். எடப்பாடிக்கும் எடுபிடியாக தம்மையே விற்றுக்கொண்டபின் இனி மதிக்க இவர்களிடம் என்ன மிச்சம் இருக்கிறது?
பாஞ்சாலி சபதத்தில் துரோபதை ஒரு முக்கிய கேள்வி கேட்பாள். தருமனையும் பாண்டவரையும் குறித்து.
“நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் -- என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை. -- புலைத்
தாயத்தி லேவிலைப் பட்டபின், -- என்னை
சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? அவர்
தாயத்தி லேவிலைப் பட்டவர்; -- புவி
தாங்குந் துருபதன் கன்னிநான். -- நிலை
சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால், -- பின்பு
தார முடைமை அவர்க்குண்டோ!”
துரோபதையின் அந்த கேள்விக்கு பாரதக்கதையில் ஏற்கத்தக்க விடையே தரப்படவில்லை. ஏனெனில் விடையற்ற கேள்வி அது.
துரோபதையை ஊடகம்/அதன் அடிப்படை அறம் என உருவகித்தால் தமிழ்நாட்டு ஊடக நிறுவனங்கள் பஞ்சபாண்டவர்களாக கொள்ளலாம். தம்மையே இழந்தவர்களுக்கு நல்ல விலைக்கு விற்றுக்கொண்ட முதலாளிகளுக்கு ஊடக தருமம் குறித்து பேச இனி எப்படி அருகதை இருக்கும்
1 கருத்து:
டேய் குண்டா மக்களே திமுக தாண்டா பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்கி இருக்காங்க
கருத்துரையிடுக