தமிழ் தேசிய அரசியல் என்பது தமிழ் நாட்டின் வளர்ச்சியை உள்ளடக்கியது என்ற உணர்வை உங்களால் என் போன்ற இளைஞர்களுக்கு தர முடியாமல் போனதன் காரணம் என்ன ? .நீங்கள் யாருக்கான அர்சியலை பேசுகிறீர்கள் ? .
உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுஙகள் கஸ்பர், ஈழம் என்று ஒரு தேசம் இருக்கு, அதில் தமிழ் மக்கள் சொல்லொண்ணா துயரை அனுப்பவிக்கின்றார்கள் .அவர்கள் விடுதலை அடைய வேண்டும் என்ற குரல் இந்த சமூக பொறுப்பற்ற சமூகத்தின் காதுகளின் இரும்பால் மூடிக்கொண்ட செவிப்பறையை தட்டி ,கிழித்து ,சொன்னது யார் ? .யாரால் ஈழ மக்களின் துயர் பொது சமூகப் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது ..கலைஞராலா ?? ..எம் ஜீ ஆராலா ? .
கலைஞர் என்ற ஒற்றை மனிதரின் இன உணர்வால் தட்டிதிறக்கப்பட்டது தான் ஆதிக்கத்தின் கதவுகள் ..அவரை சமாளிக்க முடியாமல் அதே ஆதிக்கம் எம்ஜீ ஆர் என்ற மாய வலையால் எல் டி டி இ மூலம் இந்த தமிழ் சமூகத்தை மடை மாற்ற முயன்றது ..
ஆனால் நீங்கள் ஈழ விடுதலை வரலாற்றில் திமுகவுடன் சேர்த்து அதிமுக பேரையும் எழுத முயல்கிறீர்கள்
..மனசாட்சி கொஞ்சமேனும் இருந்தால் சொல்லுங்கள் .எம் ஜீ ஆர் ஈழத்துகாக நடத்திய போராட்டம் எத்தனை ? ...
எத்தனை முறை மத்திய அரசை வலிந்து எதிர்த்தார் ? ..எத்தனை முறை ஈழத்துகாக பதவியை இழந்தார் ? ..கலைஞர் தேடிய அரசியல் தீர்வை உடைத்து ஈழ மக்களை ஆயுதம் எந்த வைத்து அவர்கள் உயிர்களை அவர்கள் கைகளாலயே பறித்ததை தான் இன அரசியல் என்கீறிர்களா ? .
2009 ல் பிழை நடந்துவிட்டதாக ஒப்புக் கொண்டு தன்னை முன்னெடுக்க வேண்டும் என்று திமுகவுக்கு அறிவுரை கூற முடிந்த உங்களால் என்றாவது ஆமாம் சக போராளிகளை கொன்ற பிழை நடந்து விட்டது, ராஜிவ் கொலை பிழை நடந்து விட்டது , அது எம் தவறுதான் , அதனால் தமிழகம் இழந்தது அதிகம், அதன் பொறுப்பை ஏற்கிறோம் என்று புலிகள் முன்னெடுக்க வேண்டும் என்று ஒரு நாளாவது உங்கள் அறம் சீறி இருந்திருந்தால் இன்று என் போன்ற கலைஞரை ஏற்றுக் கொண்டாலும் அவரது புலி ஆதர்வை ஏற்க இயலாத கூட்டத்தை உருவாகாமல் தடுத்து இருக்க்லாம் ...
நீங்கள் சொன்ன ஜெயா என்ற பாசிஸ சக்திக்கு தான் இந்த மண்ணில் 6 முறை முதல்வர் ஆகும் வாய்ப்பு வந்தது என்பது இந்த மக்களின் தமிழ் தேசிய அரசியல் நிராகரிப்புக்கு காரணம் உங்களை போன்ற புலி பக்தர்கள் தான் .
கலைஞரை ஏற்று அவரது புலி ஆதரவை நிராகரித்தது என்னை போன்ற ஒரு சிறு கூட்டம் தான்..ஆனால் ஈழ ஆதரவையே நிராகரித்த , பெரும் ஜெயா ஆதரவு கூட்டத்தை உருவாக்கியப் பங்கு உஙகளை போன்ற உணர்வாளர்களின் பங்கு தான் என்ற குற்றத்தில் இருந்து நீஙகள் தப்பவே இயலாது .
அறம் என்பது ஒருதலைப் பட்சமானதாக ஒரு நாளும் இருக்க முடியாது . 2009 ல் திமுக தவறி விட்டதாக குற்றம் சுமத்த உங்களுக்கு இருந்த " நேர்மை" ஏன் பத்மனாபா, மாத்தையா , 91 ல் புலிகள் மீது சொல்லத் துணிவில்லை ..உங்கள் அறம் செத்து விட்டதா அல்லது வருமானம் போய்விடும் என்று பயமா ? .
அதென்ன நம் விமர்சன அறம் திமுகவோடு நின்று விடுகிறது .புலிகளை விட எந்த வகையில் குறைந்தது திமுக ? ..ஈழ விடுதலைகாக ( ஈழத்துககு மட்டும் ) போராடியது எல் டி டி ஈ ..தமிழக விடுதலைகாகவும் , ஈழ விடுதலைகாகவும் அடி, உதை, வஞ்சம், பழி என்று அத்தனை அவமானங்களை தாங்கிக் கொண்டு போராடிய திமுக புலிகளை விட ஆயிரம் மடங்கு உயர்ந்த போராளிக் குழு.. அதை விமர்சிக்க இருந்த துணிவில் பத்தில் ஒரு பஙகு கூட உங்களுக்கு புலிகள் மீது இல்லாதது தான் உங்க அறமற்ற அரசியலுக்கு அடையாளம்.
புலிகளை விமர்சித்தால் திமுக அழிந்து விடும் என்று மிரட்டி இருந்தீர்கள் ...மற்றவர்கள் இதற்கு அஞ்சலாம்..நான் அஞ்சுவதில்லை .திமுகவை அழித்தால் தான் உங்களைப் போன்ற நன்றிகெட்ட கூட்டத்தை ஒழிக்க முடியும் என்றால் அதுவே என் இறுதி செயல்பாடாக இருக்கும் ..
இந்த மண்ணில் விடுதலைகாக போராடிய ஒரு மாபெரும் இயக்கத்தை பெரியாரிய உணர்வாளர்கள் என்ற பேரில் தூற்ற உங்களை போன்றோரால் முடியும் என்றால் இந்த நாட்டுக்கு ஏன் விடுதலை தரப்ப்டனும் ? .
இதில் புலிகளை விமர்சித்தால் திமுக அழிந்து விடும் என்று மிரட்டுகிறீர்க்ள் ...எத்தனை பாசிஸ்வாதியாக் மாறி இருக்கின்றீர்கள் என்று பாருஙகள் ...இது தான் பெரியாரியலா ?..
திமுக இருக்கும் வரை தான் உங்களால் இன உணர்வு பேச இயலும்..திமுக இருக்கும் வரை தான் உங்களை போன்ற சல்லிக் கூட்டத்த்துக்கு ஆரியம் அள்ளித்தரும்..திமுக இருக்கும் வரை தான் உங்கள் போராளி வேஷம் எல்லாம் .
விபிட்ணர்களே உருவாகாமல் தடுக்க இராவணனையே அழிப்பது தான் வழி என்றால் அதுவும் நடக்கும் .
அறம் என்பது ஒருதலைபட்சமானது இல்லை என்பதை உணர்ந்து திருத்திக் கொள்ளுங்கள் ..இல்லை என்றால் திருத்தப்படுவீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக