மாலைமலர் :சட்டமன்றத் தேர்தல் பணிகள், கூட்டணி,
தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருடன் அமித்
ஷா ஆலோசனை நடத்தினார்.
>சென்னை:மத்திய
உள்துறை மந்திரி அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று சென்னை
வந்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்ற அரசு விழாவில்
கலந்துகொண்ட அமித் ஷா, மெட்ரோ ரெயில் 2ம் கட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு
நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழா முடிந்ததும் தான்
தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றார்.அங்கு தமிழக
முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அமித்
ஷாவை சந்தித்து பேசினர். அப்போது, தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு,
தேர்தல் வியூகம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதையடுத்து, தமிழக பாஜக நிர்வாகிகளை அமித் ஷா
சந்தித்தார். பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அளவிலான
கூட்டம் நடைபெற்றது.
அமித் ஷா முன்னிலையில்
கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, பாஜக 40 தொகுதிகளை
தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் கேட்டதாகவும், அதற்கு 25
தொகுதிகள் ஒதுக்க அதிமுக விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி
உள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்து
பேசி முடிவு செய்துவிட்டு, அதன்பின்னர் பாஜகவுக்கான தொகுதிகள் இறுதி
செய்யப்படும் என அதிமுக கூறியதாக தெரிகிறது.
அதேசமயம்,
பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதை அதிமுக
குழுவினருடன் பேசி முடிவு செய்துகொள்ளும்படி பாஜக மாநில நிர்வாகிகளுக்கு
அமித் ஷா அறிவுறுத்தி உள்ளார்.
எனவே தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக