maalaimalar: புயல் கரையை கடந்த பின் 6 நேரம் கழித்தே வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை மையம் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 11 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயல், சென்னையில் இருந்து 214 கி.மீட்டர் தொலைவிலும், கடலூரில் இருந்து 110 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 120 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புதுவை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடந்த பின்பும், 6 மணி நேரம் கழித்தே வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புயல் கரையை கடந்த பின் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும் கனமழையால் விவசாயப் பயிர்கள், குடிசைகள் சேதமைடைய வாய்ப்புள்ளது எனக் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக