அதேபோல் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச மாநிலத்திலும் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம் இயற்றப்படுவதாகவும் , லவ் ஜிகாத்தினால் மதம் மாறி திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதற்கு எதிரான விரையில் சட்டம் இயற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், காதலித்து கட்டாய மதம் மாற்றம் செய்து திருமணம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்ட மசோதாவுக்கு உ.பி, ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மட்டுமல்லாமல் ஹரியானா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக