இனி ஸ்த்ரீகள் பற்றிய 4 ஆவது அத்யாயத்தில் உள்ள சில ஸ்லோகங்களைப் பார்ப்போம்.
ப்ரூஹஸ்பதி அகஸ்திய முனிவரைப் பார்த்து கூறுவதாக கீழுள்ள ஸ்லோகங்கள் அமைகிறது.
அத்யாயம்–4 124-136 வரை;
6. அருந்ததி, ஸாவித்ரி, அனஸூயா, சாண்டில்யை, ஸதீ, லக்ஷ்மீ, சத ரூபை, மேனகை, நுநீதி, ஸம்க்ஞா, ஸ்வாஹா ஆகிய பதிவ்ரதைகளில் லோபாமுத்ரை
8. முநிவரே! தாங்கள் உண்ட பின்தான் அவள்
உண்கிறாள்; நீங்கள் அமர்ந்த பின் அவள் அமருகிறாள்.தாங்கள் நித்திரை செய்தபின் அவள் தூங்குகிறாள். தாங்கள்
எழு முன்பே எழுந்து விடுகிறாள்.
9.அலங்காரம் இல்லாமல் தங்கள் முன்னால்
வருவதில்லை. ஏதாவது கார்யமாகத் தாங்கள் வெளியில் சென்றிருந்தால் அவள் ச்ருங்காரம் செய்து கொள்வதில்லை.
10.தங்களுடைய வயது வ்ருத்தியாக
வேண்டுமென்பதற்காகத் தங்கள் பெயரைக் கூறுவதில்லை. வேறு புருஷர்களின் பெயரைக் கனவிலும் கூறுவதில்லை.
11.தாங்கள் கோபம் அடைந்து திட்டினாலும் பதில் கூறுவதில்லை. அடித்தாலும் ஸந்தோஷமாகவே இருக்கிறாள். தாங்கள் ஒரு கார்யத்தைச் செய் என்று சொல்வதற்கு முன்னாலேயே - ஸ்வாமி, அதை முடித்தாகி விட்டது என்கிறாள்.
12.தாங்கள் அழைத்தால் தன் கைக்கார்யத்தை
உடனேயே போட்டு விட்டுத் தங்கள் முன்னால் ஆஜராகி விடுகிறாள். தாங்கள் அடிமையை எதற்கு அழைத்தீர்கள் ஆக்ஞையிட்டு அனுக்ரஹம் செய்யுங்கள் என்கிறாள்.
13.வெகு நேரம் வெளிவாசலில் நிற்பதில்லை.
அமர்வதும் இல்லை.தாங்கள் கூறாமல் ஒருவருக்கும் ஒன்றும் கொடுப்பதுமில்லை.
14.தாங்கள் கூறுவதற்கு முன்னாலேயே பூஜை
உபகரணங்கள் எல்லாம் ஜோடித்து வைத்து விடுகிறாள். ஜலம், குஶம், புஷ்பம் அக்ஷதை முதலானவைகளைத் தயாராக வைத்து இருக்கிறாள்.
15.பர்த்தாவின் உச்சிஷ்டத்தையே பரம
ப்ரேமையுடன் புஜிக்கிறாள். எது எப்பொழுது அவசியமோ அதை அப்பொழுது பரம ஸந்தோஷத்துடன் ஜோடித்து விடுகிறாள்.
16.ஸ்வாமி கொடுத்த வஸ்துகளைப் பரமப்ரஸாதம் என்று ஏற்று மகிழ்கிறாள்.
17.தேவதை, பித்ருக்கள், அதிதி, ஸேவகர்கள், பசு, பிச்சைக்காரர்கள் இவர்களுக்குக் கொடுக்காமல் தான் ஒருபொழுதும் உண்ண மாட்டாள்.
18.க்ருஹகாரியங்களுக்குண்டான
ஸாமக்ரியைகளையும், நகைகளையும் வஸ்த்ரம்
முதலானவைகளையும் மிகவும் ஜாக்ரதையாகவும் அழகாகவும், பாங்காகவும் வைத்துக் கொண்டிருக்கிறாள்.அதிகம் செலவு செய்யமாட்டாள், தங்கள் உத்தரவு இல்லாமல் வ்ரதம், உபவாஸம் முதலியவைகளை அனுஷ்டிக்க மாட்டாள்.
19.கூட்டம், திருநாள் திருவிழாக் கூட்டம் மேளா இவைகளையெல்லாம் பார்க்கப்போவதை எப்பொழுதோ த்யாகம் செய்து விட்டாள்.
20.தீர்த்தயாத்திரை கல்யாணங்கள்
முதலியவைகளுக்குச் செல்வதில்லை. பதி ஸுகமாகத் தூங்கும்பொழுதும் உட்கார்ந்திருக்கும் பொழுதும்
ஸ்வதந்திரமாக கேளிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் போதும் எத்தனை அவசியக் காரியமானாலும் அவரை எழுப்ப மாட்டாள்.
21.ரஜஸ்வலீயானால் தன் முகத்தையே நான்கு
நாட்களும் வெளியில் காட்டமாட்டாள்.
எதுவரைஸ்னானம் செய்து சுத்தமாகவில்லையோ அதுவரைப் பேசவும் மாட்டாள்.
22.ருது ஸ்னானம் செய்து வந்தபிறகு தன் பர்த்தாவின் முகத்தையே முதலில் பார்ப்பாள். வேரொருவர் முகத்தைப் பார்ப்பதில்லை. பதி எங்காவது வெளியூர் சென்றிருந்தால்
பதியின் முகத்தையே மனதில் த்யானித்துக்கொண்டு ஸூர்யனைத் தரிசனம் செய்வாள்.
23.பர்த்தாவின் தீர்க்க ஆயுளுக்காக அந்தப் பதிவ்ரதை மஞ்சள், குங்குமம் ஆந்தூரம், மை, ரவிக்கை, தாம்பூலம், உத்தம பூஷணங்கள் இவைகளைத் தரிப்பதுடன்,
24.தலை வாருதல், கொண்டையிடுதல், கை,
காதுகளில் நகையணிதல் இவைகளை ஒருநாளும் விடுவதில்லை.
25.இந்த ஸதி, ரஜோகுணமுள்ளவர்கள்,
ஸத்கர்மாக்களுக்கு விரோதமாய் பேசுபவர்கள்,
நடப்பவர்கள், பாஷண்டி, துர்பாக்யவதி இவர்களுடன் ஸ்நேகமாக வைத்துக்கொள்ளமாட்டாள்.
26.பர்த்தாவிடம் வித்வேஷம் வைத்துக்
கொண்டிருப்பவளிடம் பேசவும் மாட்டாள். வஸ்த்ரம் இல்லாமல் ஸ்னானம் செய்ய மாட்டாள்.
27.இவள் எப்பொழுதும் உரல், உலக்கை, அம்மி, பெறுக்கும் வாரியில் வாசற்படி இவைகள் மீது உட்காரமாட்டாள்.
28.ஸௌபாக்யத்தைத் தவிர வேறொன்றிலும் அடம் பிடிக்க மாட்டாள். கணவன் விரும்புவதேதான் அவளுக்கும் விருப்பும்,
29.பெண்களுக்கு இது ஒன்றே வ்ரதம். இதே
பரமதர்மம்; இதே தேவபூஜை. கணவனின் பேச்சை உதாஸீனம் செய்யக் கூடாது,
30.பேடித்தனத்தை தூர விலக்க வேண்டும்.
பெரியவர்கள் இடையில் கேலி செய்வதோ சத்தம் போட்டுப் பேசவோகூடாது. பரிஹாசம் செய்யக் கூடாது.
31.கிழவன் நோயுற்றவன், அசடு, ஏழை, குருடன், செவிடு, கோபி, மிகவும் தீனமானவன்
இப்படிப்பட்டவர்களை அவமதித்தால் நாரீ யமபுரம் செல்வாள். ஸ்வாமி ஸந்தோஷமாகயிருக்கும்போது
தானும் ஸந்தோஷ ஸமாசாரம் சொல்ல வேண்டும்.வருத்தமாக இருக்கும்போது அவளும் வருத்தத்துடன் இருப்பாள். வஸ்திரம், ஸம்பத் விஷயத்தில் எப்போதும் ஒரே மாதிரியிருப்பாள்.
32.நெய், உப்பு, எண்ணை இவைகள் தீர்த்துவிட்டால் பதிவ்ரதையான நாரீ ஒருபொழுதும் இல்லையென்று சொல்லிப் பதியை ஆயாஸம் செய்யமாட்டாள்.
33.ஸ்த்ரீ தீர்த்தஸ்னானத்தை விரும்பினால் பதியின் கால்களை அலம்பி அந்த ஜலத்தைப்ரோக்ஷத்து, பருகவேண்டும், ஸ்த்ரீ ஜாதிகளுக்கு பகவான் மஹாதேவர்,
விஷ்ணுவைவிட தன் பதியே தெய்வம்.
34.பதியின் வார்த்தையை மீறி உபவாஸமோ
வ்ரதமோ இருப்பான் பதியின் அபகரிக்கிறவளாவாள் கடைசியில் நாசத்தை அடைவாள்.
35.எந்தப் பெண் பதியின் கடுமையான
வார்த்தைகளைக் கேட்டு அதற்குத் தானும் கோபமாக எதிர்த்துக் கூறினால் அவள் க்ராமத்து நாயாகவும் காட்டு
நரியாகவும் பிறக்கிறாள். ஸ்த்ரீகளுக்கு பர்த்தாவே, தேவதை, குரு, தர்மம், தீர்த்தம் எல்லாம்.
36.பெண்களுக்கு எல்லாவற்றிலும் பெரிய நியமம் என்ன வென்றால் அவள் த்ருட ஸங்கல்பத்துடன் பதியின் ஸேவை செய்த பிறகே உண்ண வேண்டும்.
37. ஸ்த்ரீகள் உயர்ந்த ஆஸனங்களில் உட்காருவது, பிற வீடுகளுக்குப் போவது, அல்லது வெட்கம் அடையும் வசனங்களைக் கூறுவது ஸர்வதா அநுசிதம்.
38.ஒரு பொழுதும் யாரையும் அபவாதம்
கூறக்கூடாது. கலகத்தை தூர இருந்தே விட்டுவிடுவது உசிதம். பெரியவர்கள் வயோதிகர்கள் முன்னிலையில், உயர்ந்த குரலில் பேசுவது உரக்கச் சிரிப்பது இவைகள்
சரியல்ல.
39.துர்புத்தியினால் காமவசப்பட்ட பெண் தன் பதியை விட்டு விட்டுக் கெட்ட காரியத்தில் பிரவேசிகிறாள்.இதனால் அவள் மறு ஜன்மத்தில் மரப்பொந்தில் விளங்கும்
ஆந்தையாகப் பிறக்கிறாள். ( இன்னும் வரும்.) part two part 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக