ஞாயிறு, 22 நவம்பர், 2020

எம்ஜிஆர் கலைஞர் TELO எதிராக பிரபாகரனை வளர்த்தார் என்பதுதான் உண்மை

Vetri Chelvan
- பகுதி 28 : நான் போடும் பதிவுகள் எல்லாம் நான் எனது நினைவுகளை பதிவு செய்ய வேண்டும் என வற்புறுத்தி எழுத வைத்த என் நண்பனும் உடன்பிறவா தம்பியுமான மறைந்த லண்டன்சுரேஷுக்கு சமர்ப்பணம்
1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்
84 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த சில சம்பவங்களை எனக்கு அறியக் கூடியதாக இருந்தது. உமாமகேஸ்வரன் , எம்ஜிஆர் இடையே கருத்து வேறுபாடுகள் கடுமையாக இருந்தன. தமிழ்நாட்டுஉளவுத்துறை அதிகாரி மோகனதாஸ் ஒரு காரணம் என டெல்லியில் வைத்து மத்திய உளவுத் துறை அதிகாரிகளுடன் அவர் பேசும்போது நானும் இருந்தேன். எம்ஜிஆர் உமாமகேஸ்வரன் உடன்நெருக்கமாக இருந்த காலத்தில் ரெலோ இயக்கத்தை மிகக் கடுமையாக விமர்சிப்பாராம். டெலோ இயக்கம் உங்களுக்கு எப்பவும் இடைஞ்சலாக தான் இருக்கும். அதைக் கட்டுப்படுத்தி வைக்க பலமுறை சொல்லியிருக்கிறார். உமா மகேஸ்வரனும் சிரித்து சமாளித்து வந்திருக்கிறார். 
 
ஆனால் உளவுத்துறை மோகனதாஸ் மிரட்டும் தொனியில் teloமேல் எப்ப நடவடிக்கை எடுப்பீர்கள் என கேட்டது உமா மகேஸ்வரனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. உமாநேரடியாக எம்ஜிஆரிடம் இந்த அதிகாரி இருக்கும்போது நான் உங்களுடன் பேசுவதற்கு தயாராக இல்லை, அதோடு telo அமைப்போடு எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறி விட்டு வெளியில் வந்து விட்டாராம். எம்ஜிஆருக்கு telo கலைஞருக்கு ஆதரவாக நின்றது பெரிய பிரச்சனை.
இதன்பின்பு தமிழ்நாட்டில் நமக்கு பலவித இடைஞ்சல்கள் ஏற்பட்டது உண்மை. அதே நேரம் எம்ஜிஆர் மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா போனது எமக்கு ஒரு ஆறுதலாக இருந்தது
அதேநேரம் எங்களுக்கு உதவி செய்த எம்ஜிஆர் அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சர்S.D. சோமசுந்தரம்., ஜெயலலிதாவுடன் கட்சியில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து ஆட்சியில் ஊழல் கூடி விட்டது என எம்ஜிஆரை பிரச்சினை பண்ண தொடங்கி னார். அப்போது தமிழ்நாடு முழுக்க அமைச்சர் சோமசுந்தர த்துக்கு நல்ல ஒரு பெயர் இருந்தது. அதை நம்பி எம்ஜிஆர் எதிர்த்துக் கொண்டு சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்தார். இதற்கு தூபம் போட்டு அமைச்சர் சோம சுந்தரத்தை கனவுலகில் வாழச் செய்து அவரின் அரசியல் வாழ்வு பாதிக்கப் பட உமா மகேஸ்வரனும் ஒரு முக்கிய காரணம்.சிகிச்சை முடிந்து வந்த எம் ஜி ஆர் பல கூட்டங்களில் சோமசுந்தரம் உமா மகேஸ்வரன் இடம்பணம் வாங்கி கட்சி ஆரம்பித்ததாக கூறியது பத்திரிகைகளிலும் வந்தது.
 
84 டிசம்பர் மாத தமிழ்நாடு தேர்தல் முடிந்த போது சோமசுந்தரம் மக்களால் ஒதுக்கப் பட்டு விட்டார். இதன் பின்பு மோகனதாஸ் உளவுத்துறை அதிகாரிபாலசிங்கத்தின் உதவியோடு பிரபாகரனை எம்ஜிஆரிடம் சேர்த்தார். எம்ஜிஆர் கலைஞர் TELO எதிராக பிரபாகரனை வளர்த்தார் என்பதுதான் உண்மை அதனால் தான் கலைஞர் தனது பிறந்தநாளுக்கு கொடுத்த கிடைத்த பணத்தை எல்லா இயக்கங்களுக்கும் பிரித்துக் கொடுத்த போது முதலமைச்சர் எம் ஜி ஆரைதிருப்திப்படுத்த விடுதலைப் புலிகள் பணத்தை வாங்க வில்லை.அதற்காகவே விடுதலைப் புலிகளுக்கும் கோடி கோடியாக பணத்தை எம்ஜிஆர் கொடுத்தார்.
நாங்கள் டெல்லியில் எந்தவித செலவும் இல்லாமல் ஒரே நேரத்தில் பல பேர் வந்து தங்கிச் செல்லவும் , பத்திரிகையாளர்களை சந்திக்கும் இடமாகவும் எங்கள் சொந்த வீடு மாதிரி எல் கனேசன் எம்பியின் வீட்டை நாங்கள் பயன்படுத்தினோம். அவர் எந்த ஒரு தடையும் சொல்லவில்லை. இந்த ஒரு இயக்கத்துக்கும் கிடைக்காத வாய்ப்பு. எல் கனேசன் எம்பி பழகக் கிடைத்த வாய்ப்பு நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர் வீட்டில் நாங்கள் இருப்பது பற்றி சக mp மார் தலைவர் கலைஞர் ஒன்றும் சொல்ல மாட்டாரா என்று கேட்கும்போது,தலைவர் கலைஞர் ஒன்றும் சொல்லமாட்டார் விடுதலைப் போராளிகளுக்கு உதவி செய்வதைப் பற்றி, அதேநேரம் போராளிகளும் எங்களுக்கு கெட்ட பெயர் தர மாட்டார்கள் என்று நம்பிக்கையோடு கூறுவர்
எல் கனேசன் எம்பி அவர்கள் பாராளமன்றம் கூட்டத்தொடர் நடக்கும்போது , டெல்லி வந்தால்நான் நல்ல உணவு சாப்பிட வேண்டும் என்று என்னை பகல் உணவுக்காக புகழ்பெற்றபாராளுமன்ற உணவகத்துக்கு ம், இல்லாவிட்டால் கரோல் பாக் என்ற இடத்தில் இருக்கும் தென்னிந்திய உணவகத்துக்கு ம் அழைத்துச் சென்று நீ விரும்பியதை ஆர்டர்செய்து சாப்பிடப் பா என்று உண்மையான அப்பா போன்ற பாசத்தோடு கூறுவார். 
 
அப்போது அது ஒரு பெரிய விடயமாக தோன்றவில்லை. இப்போது நினைக்கும் போது அவரின் பாசமும் அன்பும் புரிகிறது. சில வேளைகளில் அங்கிருக்கும் தமிழ் கடையிலிருந்து பகலுணவு வரும், நான் சாப்பிட்டு இருந்தாலும், தனக்கு மட்டும் வரும் உணவில் இருக்கும் வறுத்த மீன் குழம்பு மீன் போன்றவை தான் சாப்பிடாமல் எனக்கு சாப்பிடக் கொடுப் பார். அந்தக் காலத்தில் எங்களிடமிருந்து எந்தவிதப் பயனையும் எதிர்பாராமல் அவர்கள் உண்மையான அன்போடு உதவி செய்தார்கள். ஆனால் நாங்கள் அவர்களுக்கு கஷ்டத்தை தான் கொடுத்து இருக்கிறோம்.
என் கணேசன் எம்பி அவர்கள் சிறந்த ஆங்கிலப் புலமை கொண்டவர். தனக்கு சரியெனப் பட்டதை செய்பவர். எந்த நேரமும் புத்தகங்களைத்தான் வாசித்துக் கொண்டிருப்பார். அதோடு அவர் அடிக்கடி பான் பீடா எனப்படும் வெற்றிலை போடுவார்.இவரின் பணிந்து போகாத குணம் கட்சியில் இவரின் வளர்ச்சியை தடுத்தது என எனது கருத்து.1965 ஆண்டு மாணவர் தலைவராக இருந்த இவரின் தலைமையில்தான் வைகோ,நடராஜன் போன்றவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியவர்கள். இந்தப் போராட்டத்துக்கு பின்பு தான் திமுக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது.
லண்டனில் இருந்து வந்த சீனிவாசன், கணேசன் எம்பி யோடு நன்றாக பழகினார். லண்டன் ஜெர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் ஆதரவை பெறுவதற்காக கணேசன் எம்பியை லண்டனுக்கு கூட்டிப்போக முடிவு செய்தார். அங்கு பொதுக்கூட்டங்களை நடத்தி மக்கள் ஆதரவையும் பொருளாதார உதவிகளையும் பெறலாம்என கணக்கு போட்டார். எல் கனேசன் எம்பி இடம் கேட்டபோது முதலில் மறுத்து விட்டார். பின்பு உமாமகேஸ்வரன் அவருடன் கதைத்து சம்மதத்தைப் பெற்றார். 
 
தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணா திமுக எஸ்டி சோமசுந்தரம் ஆதரவும்,திமுக-வில் கணேசன் எம்பியின் ஆதரவும் எமக்கு மிக பக்கபலமாக இருந்தன.ஆனால் அதை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என நினைக்கிறேன். இப்பொழுது பலர் முகநூலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் காசு பணத்துக்காக ஈழபோராட்டத்தை ஆதரிக்கிறார்கள் போன்ற செய்திகளை எழுதி வருகிறார்கள்.1990பின்பு தான் அதுவும் விடுதலைப் புலி இயக்கம்தமிழ்நாட்டில் தனதுஆதரவைப் பெருக்கிக் கொள்ள காசு கொடுத்து புதிய புதிய ஆதரவாளர்களை உருவாக்கியது 
 
அவர்கள் மூலம் தமிழ்நாடு அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிரான விமர்சனங்களை வைத்து பொதுக் கூட்டங்களை தமிழ்நாட்டில் இப்படியான கூட்டங்கள்சாதாரண மக்களிடம் எங்களுக்கு ஈழமக்களுக்கு இருந்த உண்மையான அன்பான ஆதரவை இழக்க வைத்தது. பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்கள் இந்திய விரோத பிரச்சாரங்களை ஏற்கவில்லை என்பதே உண்மை. கீழே உள்ள படத்தில் கணேசன் எம்பி அவர்கள் லண்டன் போகும் முன்பு டெல்லி விமான நிலையத்தில் எடுத்த படம் டெல்லி திமுக ஆதரவாளர்கள் மாலை போட்டு வழி அனுப்பி வைத்தார்கள்.
தொடரும்.

கருத்துகள் இல்லை: