பிற்காலத்தில் பெரியார் இயக்கம் வெவ்வேறு பெயர்களில் இலங்கையில் இயங்க இந்தக் கூட்டங்கள் முக்கிய வகிபாகம் வகித்தன. பெரியார் ஆற்றிய உரைகள் தனித்தனியாக பதிவு செய்யப்படாமல் அவர் தமிழகம் திரும்பியதும் அவற்றையெல்லாம் தொகுத்து ஒரே நூலாக வெளிக்கொணர்ந்தார்கள்.
அவர் இலங்கை
பயணித்தது நவம்பர் மாதம் . ஆனால் அவரின் உரை ஒரே மாதத்தில் நூலாக
வெளிக்கொணரப்பட்டது.
சாதியை, மதத்தை, கடவுளை ஒழிக்கப் புறப்பட்ட, சுயமரியாதை பகுத்தறிவுப் பிரச்சாரங்களை மேற்கொண்ட பெரியாரின் குரல்களை அன்றைய பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்துவந்த வேளை ஊடகங்கள் இயக்கத்தின் பாரிய பாய்ச்சலுக்கு முக்கியமானவை என்றுணர்ந்தார் பெரியார். அதன் விளைவாகவே அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பத்திரிகைகளைத் தொடங்கினார். அது போலவே நூல் பதிப்பு பணிகளையும் தொடக்கினார்....\
பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம் லிமிடெட் என்கிற பதிப்பகத்தை தொடக்கி வெளியிட்ட நூல்களின் வரிசையில் ஏழாவது நூல் பெரியாரின் இலங்கை பேச்சுக்களின் தொகுப்பு. அது அப்போது "ஈ. வெ. இராமசாமியின் இலங்கை உபந்யாசம்" என்கிற பெயரில் வெளியானது. இந்த நூல் அதன் பின்னர் 1942 இல் இரண்டாம் பதிப்பையும் கண்டது. இரண்டாம் பதிப்பை "குடி அரசு பதிப்பகம்" வெளியிட்டது. பின்னர் பல ஆண்டுகளின் பின்னர் வெவ்வேறு பதிப்பகங்கள் அதை "தந்தை பெரியாரின் இலங்கை பேருரை" என்கிற தலைப்பில் வெளியாகியிட்டிருக்கின்றன.
முதல்
பதிப்பு "ஈ. வெ. இராமசாமியின் இலங்கை உபந்யாசம்" என்கிற பேரில்
இருக்கிறது. சம்ஸ்கிருத சொல் தவிர்ப்பு, தமிழ் மொழி பழக்குதல், தமிழ் மொழி
சீர்திருத்தம் எல்லாம் பிற காலத்தில் தான் ஒரு இயக்கமாகவே மேலெழுகின்றன.
ஆகவே "உபந்யாசம்" என்கிற சம்ஸ்கிருத சொல்லை அவர் 1932, 1942 இல்
பிரயோகித்திருப்பதையும் பிற்காலத்தில் அதை தவிர்ப்பதிலும் நமக்கு ஆச்சரியம்
இருக்காது.
இலங்கை இந்த இலங்கை
பேருரையைக் கட்டவிழ்த்து விரிவான ஒரு கட்டுரையாக எழுத முடியும். குறிப்பாக
இந்த உரையின் இறுதிப் பகுதிகளில் அவர் தேசியம் பற்றி பேசும் பேச்சைக்
குறிப்பிடலாம். இவை யாழ்ப்பாணத்தில், பருத்தித்துறையில் எல்லாம்
பேசப்பட்டிருக்கலாம். அந்தக் சுவாரசியமான இந்தப் பேச்சு இன்று சுமார் 90
ஆண்டுகளில் அதை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். -என்.சரவணன். தொடரும் .... Link முழுவதும் வாசிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக