கட்சிகளை சாராத கட்சி உறுப்பினர் அடையாள அட்டைகள் இல்லாத கட்சிகளின் தவறுகளுக்கு சேர்த்தே முட்டுக் கொடுக்காத அக்மார்க் சார்பு நிலைகளை கடந்தவர்கள் உங்கள் நண்பர்களோடு உங்கள் உறவினர்கள் ஐம்பது பேரோடாவது உங்கள் தேர்தல் பரப்புரையை ஆரம்பிக்க வேண்டிய தருணம் இது.
இந்த அதிமுக பாஜக கூட்டணியை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டுமானால் ஒரே வழி சிந்தாமல் சிதறாமல் மூன்றாம் அணி நான்காம் அணி கமலஹாசன் சீமான் கண்டவன் கழியவனுக்கு எல்லாம் போட்டு வீணடிக்காமல் திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர வையுங்கள்.
என்ன தான் பேசினாலும் சில கோஷ்டிகளுக்கு புரியாது. அதை விட்டு விடுங்கள். மற்றபடி இந்த பக்கமா அந்த பக்கமா மூன்றாம் நான்காம் அணியா என்று அரைகுறை மனதோடு மல்லுக்கட்டுபவர்களிடம் பேசுங்கள். முடிந்த வரை அந்த வாக்குகளை திமுகவின் பக்கம் திருப்பி விடுங்கள்.
அப்புறம் ஓட்டு போட போலாமா வேணாமான்னு ஒரு கோஷ்டி இருக்கும். அந்த கோஷ்டிகளிடம் ஓட்டுப் போட வேண்டிய தேவையை புரிய வையுங்கள். சென்னையில் மீண்டும் ஒரு செம்பரம்பாக்கம் ஹெலிகாப்டர் உணவு பொட்லம் போன்ற கொடுமைகள் எல்லாம் வேணாம்னா மரியாதையா திமுக அணிக்கு ஓட்டு போட சொல்லுங்கள்.
ஐடி கம்பனில இருக்குறோம். நமக்கு எவன் ஆட்சிக்கு வந்தா என்ன என்று தெனவட்டா திரியும் நண்பர்களிடம் சொல்லுங்க...ஒரே ஒரு ஏரியை திறந்து விட்டா கஷ்டப்பட்டு இஎம்ஐயில் வாங்கின அப்பார்ட்மென்ட் மாடியில் நின்னு கதறும் நிலமை தான் வரும். ஒழுங்கு மரியாதையா ஓட்டு போட்டு சரியான ஆட்களை தேர்ந்தெடுன்னு.
அப்புறம் நாடு சரியில்ல அரசியல்வாதி சரியில்லன்னு சதா காலம் பேசிட்டு தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு காசு வாங்குறவனை எல்லாம் மொதல்ல நீ வாங்காதே..உன் குடும்பத்தை வாங்க விடாதே என்ற விழிப்புணர்வை செய்.
மாற்றம் எல்லாம் தனி மனிதர்களிடம் இருந்தே தொடங்கணும். அப்புறம் குடும்பம் அப்புறமா தான் சமூக மாற்றம். ஆகவே இந்த தேர்தலில் ஓட்டுக்க காசே வாங்க மாட்டேன்னு உறுதி எடுங்க.
நம்ம காசு தானே..யார் தந்தாலும் காசு வாங்குறதுல தப்பில்ல...ஆனா ஓட்டினை நமக்கு புடிச்சவங்களுக்கு போட்டா போச்சுன்னு மொக்கை நியாயம் வியாக்கியானம் பேசும் கோஷ்டிகளை எல்லாம் வெளுத்து விடுங்க.
இதெல்லாம் திருந்தாமல் விளங்காம போறதுக்கு உள்ள வழி..அதுனால வாக்குகளை எக்காரணம் கொண்டும் விற்க கூடாது. எந்த காரணம் கொண்டும் காசு வாங்க மாட்டோம் என்றும் உறுதி ஏற்பது நல்லது.
தேர்தல்னா கட்சிகளுக்கு மட்டும் தான் வேலை. அவர்களுக்கு மட்டுமே இதெல்லாம் சம்மந்தம்னு ஒதுங்கி இருக்காமல் தீயவை ஒழியவும் நன்மை பெருகவும் நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வதும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நல்ல குடிமக்களின் கடமையும் கூட..
குறைந்த பட்சம் ஐம்பது ஓட்டு இலக்கு...உறுதி ஏற்போமா..
ஆன்டனி வளன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக