1985ஆண்டு டெல்லியில் இலங்கையிலுள்ள விடுதலை இயக்கங்களுக்கும் இந்திய அரசுக்கும் முக்கிய சந்திப்புகள் நடந்தன. முதலில் அதைப் பற்றி பார்ப்போம்.இந்திரா காந்தி மறைவுக்குப் பின் ராஜீவ் காந்தி பிரதமராக வந்து இரண்டொரு மாதங்களில் எல்லா விடுதலை இயக்கத் தலைவர்களுக்கும் டெல்லி வரும்படி அழைப்பு வந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி அழைப்பு வரவில்லை. விடுதலைப் புலிகளின் சார்பில் பிரபாகரன், திலகர், ஈபிஆர்எல்எஃப் சார்பில் பத்மநாபா, கேதீஸ்வரன் ஈரோஸ் சார்பில் பாலகுமார், ரத்ன சபாபதி, டெலோ சார்பில் ஸ்ரீ சபாரத்தினம் கூட வந்த பெயர் நினைவில் இல்லை, புளொட்சார்பில் செயலதிபர் உமாமகேஸ்வரன் மட்டும் வந்தார், டெல்லியில் அவருடன் நானும் சேர்ந்து கொண்டேன். எல்லா விடுதலை இயக்கங்களுக்கும் ஒரே ஓட்டலில் தங்கும் இடம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். ஹோட்டல் தாசப்பிரகாஷ் என நினைக்கிறேன். செயலதிபர் உமா தனக்கு ரூம் வேண்டாம் என்று கூறி விட்டு என்னோடு வந்து தங்கிவிட்டார். அடுத்த நாள் காலை 10 மணிக்கு ஹோட்டல் தாசப்பிரகாஷ்வரச்சொன்னார்கள்.
காலையில் நாங்கள் அங்கு போனபோது எல்லா இயக்கத்தவர்களும் தயாராக வரவேற்பறையில்இருந்தார்கள் இந்திய அதிகாரிகள் தனித்தனி கார்களில் எங்களைக் கூட்டிக்கொண்டு பெரியவர் ஜி பார்த்தசாரதி அவர்களின் வீட்டுக்கு அழைத்துப் போனார்கள்.ஜிபி அவர்களும் அவர்களின் செயலாளர் அய்யாசாமி அவர்களும் எல்லோரையும்வரவேற்றார்கள். இதுதான் எல்லா இயக்கமும் சேர்ந்து ஒரு இந்திய அதிகாரிகளை சந்தித்த முதல் நேரம். பெரியவர் ஜி பார்த்தசாரதி எல்லா தமிழில் விடுதலை இயக்கத் தலைவர்களுக்கும் தெளிவாக ஒரு செய்தியைச் சொன்னார். அதை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது.
நாளை நீங்கள் இந்திய அதிகாரிகளையும் மத்திய அமைச்சரையும் சந்திக்கும்போது அவர்கள் உங்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுப்பது தனிநாடு எடுப்பதற்கு என்ற ரீதியில் கூறுவார்கள். ஆனால் உண்மையில் அது அல்ல காரணம். இலங்கை இந்தியாவின் நட்பு நாடாக இல்லை அமெரிக்காவின் நட்பு வளையத்தில் உள்ளது. திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் போன்றவை அமெரிக்க அரசு பெற்றுக்கொண்டாள். இந்திய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக இருக்கும் என்பது உண்மை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் தொடங்கியபோது பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் ஒரு முடிவெடுத்துஅந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தோம். அதாவது இலங்கை அரசை பணிய செய்வதற்கு ,அதாவது ஜெயவர்தனா அரசை நெருக்கடிக்குள்ளாகிஇந்தியாவுக்கும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் ஒரு நல்ல தீர்வு திட்டம் ஏற்படுத்தித் தர முடிவு செய்தோம். அதன்படி இந்தியாவின் வந்து குவிந்துள்ள 4பெரிய விடுதலை இயக்கங்களுக்கும் பயிற்சியும் ஆதரவு கொடுத்து இலங்கைக்கு அனுப்பி, இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும்போது, இந்தியா மறுபுறம் அரசியல் ரீதியான நெருக்கடிகள் கொடுத்துநல்ல தீர்வை பெற்றுத் தர முடிவு செய்துள்ளோம். உங்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுப்பது தனிநாடு எடுப்பதற்காக என்று கூறினாலும் நீங்கள் அதை நம்ப வேண்டாம்.என்பதை நீங்கள் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில்தனித்தமிழ்நாடு கேட்டு போராட்டங்கள் நடந்தன.இப்ப அந்தப் போராட்டங்கள் இல்லை என்றாலும் நீறு பூத்த நெருப்பாக தனித்தமிழ்நாடு ஆர்வம் உள்ளது இலங்கையில் தனித் தமிழ் ஈழம் இந்தியா எடுப்பதற்கு உதவி செய்தாள் இங்கும் பழையபடி தனித்தமிழ்நாடு போராட்டம் தலைதூக்கும் என்பது இந்திய ஆட்சியாளர்களுக்கு தெரியும். உங்களுக்கு இப்போது வெளிநாட்டு தொடர்புகள் ஒரு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தக்கூடிய தகுதிகள் எல்லாம் இருப்பதாக நினைக்கிறேன். இந்திய பயிற்சி , மற்றும்ஆயுதங்களை எடுத்துக் கொண்டு நீங்கள்நீங்கள் நாட்டுக்கு உங்கள்ஊர்களுக்குத் திரும்ப வேண்டும்.அங்கு நீங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்யுங்கள் மக்களுக்கு பாதுகாப்பாக இருங்கள். ஒவ்வொரு இயக்கங்களும் உங்களுக்குள் முரண்படாமல் உங்களுக்கு அதாவது ஒவ்வொரு இயக்கங்களும் தாங்கள் பாதுகாப்பாக இயங்க கூடிய இடங்களை தெரிவு செய்து அங்கு இயங்குங்கள். இங்கு பயிற்சி பெற்ற உங்கள் ஆட்களைக் கொண்டு நீங்கள் இலங்கையில் வைத்தே கூடுதலாகப் மற்றவர்களுக்கு பயிற்சி கொடுங்கள். இந்தியாவுக்கு அழைத்து வந்து பயிற்சி கொடுப்பதை நிறுத்துங்கள் அது உங்களுக்குப் பொருளாதார ரீதியிலும் கஷ்டத்தை கொடுக்கும்.இங்குள்ள மக்களோடு காலப்போக்கில் முரண்பட்டு பாரதூரமான விளைவுகளைக் கூட ஏற்படுத்தலாம் இங்கு. தமிழ்நாடு அரசாங்கம், தமிழ் நாட்டு அதிகாரிகள்எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைபாதுகாப்பது தங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று.
நாங்கள் அமிர்தலிங்கம் மூலம் பெற்றுத் தரும் நல்ல ஒரு தீர்வை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும் கடந்தகால ஒப்பந்தங்களைப் போல் இலங்கை அரசு இந்த ஒப்பந்தத்தையும் மீறிதமிழருக்கு எதிராக நடந்தால் என்ன செய்வதென்று,இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது, பிரதம மந்திரி இந்திரா காந்தி இதில் உறுதியாக இருக்கிறார்.அப்படியும் இலங்கை அரசு தமிழருக்கு எதிரான நிலையை எடுத்தால்.பெரிய போராட்டத்தை அங்கிருந்தே நடத்துங்கள்.உங்களுக்குத்தான் இந்தியாவில் பெற்ற பயிற்சியும் ஆயுதங்களும் அனுபவமும் இருக்கிறது. அதோடு வெளிநாட்டு ஆதரவுகளையும் திரட்டக் கூடிய அனுபவம் வந்துவிட்டது. அப்போது இந்தியாவின் மனநிலைகள் கூட மாற்றம் ஏற்படலாம் தமிழ் ஈழத்தைகூட ஆதரித்து அங்கீகரிக்க லாம். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் நம்பிக்கையோடு இருங்கள். நாளை உங்களுக்கு இந்திய அதிகாரிகள் தமிழீழம் பற்றி கொடுக்கும் வாக்குகளை நம்ப வேண்டாம்.என்று பல புத்திமதிகளை கூறி எங்களை அனுப்பி விட்டார்.
. வெளியில் வந்த தலைவர்கள் எல்லோரும் குழம்பிப் போயிருந்தார்கள். எல்லோரும் திரும்ப ஹோட்டலுக்குப் போய் அங்கிருந்த தனிமையான ஒரு ரிசப்ஷன் அறையில் செயலதிபர் உட்பட நாங்கள் எல்லோரும் இதைப்பற்றி ஒற்றுமையாக கதைக்கதொடங்கினார்கள். அதாவது யாரும் அமிர்தலிங்கம் தலைமையில்ஒரு தீர்வு வருவதை விரும்பவில்லை.எல்லோரும் அமிர்தலிங்கத்தின் தலைமையில் ஏற்படும் தீர்வை எப்படியும் தடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.செயலதிபர் உமா மகேஸ்வரனும் ஈரோஸ் ரத்ன சபாபதி நீண்ட நேரம் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பின்பு நடனசபாபதி எல்லோருக்கும் பொதுவாக அமிர்தலிங்கத்துக்கு எதிரான முடிவை நாங்கள் வெளியில் காட்டிக் கொண்டால் அது எமக்கு எதிராக திரும்பி விடும். என்று கூறி முடிக்க, பிரபாகரன் ,செயலதிபர் உமாமகேஸ்வரன் இருவரும் வெளிப்படையாகவே இதை செயல்படுத்த விடக்கூடாது என்று கூறினார்கள்.
அமிர்தலிங்கத்தை இந்திய அரசு வளர்த்து விடும் என்ற பயத்தில் முதல்முறையாக அமிர்தலிங்கத்தின் மேல் இயக்கங்கள் தங்கள் வெறுப்பை வளர்த்துக் கொண்ட பெரிய சந்தர்ப்பம் என நினைக்கிறேன்.அடுத்த நாள் காலை அதிகாரிகள் எங்களை எல்லாம் வசந்த் விகார் என்ற இடத்தில் இருந்த
பெரிய ஒரு கெஸ்ட் ஹவுசுக்கு அழைத்துப் போனார்கள்.அங்கு எங்களை சந்திக்க ராஜீவ் காந்தியின் நண்பரும் இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இணை அமைச்சர் அருண் நேரு அவர்கள் வந்தார்.
அவர் வருவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிகாரதொனியில் எல்லோரையும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.பொதுவாக இயக்கத் தலைவர்கள் இடம் அவர்கள் அவர்கள் இயக்கங்கள் பற்றியும் அறிந்து கொண்டுஇந்தியா உங்களுக்கு தனிநாடு பெற,பயிற்சியும் ஆயுதமும் கொடுக்கிறது நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிகாரத் தொனியில் மிக நல்ல முறையில் பேசினார். பின்பு அவருடன் வந்த ஒரு IBஉளவுத்துறை சேர்ந்த அதிகாரியைக் கூப்பிட்டு ஏதோ பேசினார்.எங்களைப் பார்த்து கொஞ்சம் கடுமையான தொனியில் தமிழ்நாட்டிலிருந்து எங்களுக்கு வரும் உங்களை இயக்கங்களைப் பற்றிய செய்திகள் நன்றாக இல்லை. நீங்கள் இந்திய அரசுக்கு ,தமிழ்நாட்டு அரசுக்கு எதிரான உள்ளூர் அமைப்புகள் இயக்கங்கள் ஆகியவற்றோடு சேர்ந்து இயங்குவதாக அவர்களை ஊக்கப்படுத்தி இந்திய அரசுக்கு எதிராகஆயுத, அரசியல் பயிற்சிகள் கொடுப்பதாக கவலை தரும் செய்திகள் இருக்கின்றன
மத்திய உளவுத்துறை,தமிழ்நாடு உளவுத் துறை போன்றவை நமக்கு ரிப்போர்ட் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உங்கள் நாட்டு பிரச்சினைக்காக இங்கு வந்தீர்கள் இங்கு வந்து உங்கள் நோக்கத்தை பார்த்துக் கொள்வதை விட்டு இந்திய அரசுக்கு எதிரான சக்திகளோடு சேர்ந்து இயங்குவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. எங்களுக்கு எங்கள் உள்நாட்டு பாதுகாப்பு முக்கியம். தொடர்ந்து இந்த தவறை செய்யாமல் நீங்கள் இங்கு வந்த நோக்கத்தை மட்டும் பாருங்கள் என்று கடுமையாகக் கூறினார்.உடன் எல்லா இயக்கங்களும் நாங்கள் அந்த தவறுகளை செய்யவில்லை இலங்கையிலிருந்து சிறுசிறு தமிழ் குழுக்கள் அவர்கள்தான் தங்கள் வளர்ச்சிக்காக இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளோடு சேர்ந்து இயங்குவது ஆக சத்தியம் செய்யாத குறையாக.கூறினார்கள் நான் நேரடி சாட்சியாக இருந்தேன். பயிற்சிக்கு வந்த இளைஞர்களை கொலைகள்செய்ததாகவும்,தமிழ்நாட்டு மக்களிடம் கொள்ளை அடிப்பது , மாபியா கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பது,குற்றச்சாட்டுகளை கூறி திரும்பவும் எச்சரித்தார்
அருண் நேரு வொடு மீட்டிங் முடிந்து வந்த பின்பு ஒரு இயக்கங்களும் சரியாக ஒருத்தருக்கு ஒருத்தர் முகம் கொடுத்து பேசவில்லை. அன்று இரவு எல்லோருக்கும் சென்னைக்கு பயணம் செய்ய விமான டிக்கெட் கொடுத்தார்கள்.நானும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் சில பத்திரிகை நண்பர்களை சந்தித்துவிட்டு எமது அறைக்கு திரும்பியபோது, முன்பே பழக்கமான IB உளவுத்துறை அதிகாரிகள் வந்து செயலதிபர் உமா வோடு, பேசினார்கள். நாங்கள் நாங்கள் அவர்களிடம் மற்ற இயக்கங்கள் எல்டிடி உட்படயார் யார் இந்திய அரசுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளோடு தொடர்பு இருப்பதை விலாவாரியாக கூறினோம். போட்டுக் கொடுத்தோம்
அந்த அதிகாரிகள் சிரித்துக்கொண்டு இதையேதான் மற்ற இயக்க தலைவர்களும் தனித்தனியே ரகசியமாக ஒவ்வொரு இயக்கத் தொடர்பு கொள்ளும் பற்றி விலாவாரியாக எங்களிடம் இன்றுகூறினார்கள்.எங்களுக்கு தமிழ்நாடு உளவுத்துறை விபரமான ரிப்போர்ட்அனுப்பி உள்ளது தயவு செய்து இனியாவது,பிரச்சினைகளின் விபரீதத்தை புரிந்து கொண்டு செயல்படுங்கள் என்று புத்திமதி கூறினார்கள். இந்த இரு அதிகாரிகளும் தான் முதன் முதலில்சென்னை மத்திய சிறையில் செயலதிபர் உமா மகேஸ்வரன் னையும், பிரபாகரனையும் சந்தித்து முதல் ரிப்போர்ட் இந்திய அரசுக்கு கொடுத்தவர்கள்.
தொடரும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக