சிங்கப்பூர் அரசாங்கம் இவர்கள் எப்படியான தகவல்களை வெளியிட்டார்கள் என்பதை அறிவிக்கவில்லை.
ஆனால் பிரெஞ்சு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எதிரான கோஷங்களை இவர்கள் வெளியிட்டதாக மாத்திரம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் – Emmanuel Macron கேலிச்சித்திர படங்களை ஆதரித்து தமது கருத்தை வெளியிட்ட சமயத்தில் இஸ்லாமிய நாடுகளில் எதிர்ப்புகள் கிளம்பின.
பங்களாதேஷிலும் ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை பிரெஞ்சு அரசுக்கு எதிராக நடத்தியிருந்தனர்.
சிங்கப்பூர் அதிகமான சீன மக்களைக் கொண்ட நாடு இங்கு சிறிதளவான இஸ்லாமியர்கள் வாழ்கின்றார்கள்.
30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
இவர்கள் வேலை நிமித்தமாக இங்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டிட வேலைகளில் இவர்களின் பங்கு முக்கியமாக இருக்கின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக