வியாழன், 6 ஆகஸ்ட், 2020

ஸ்டாலினிடம் நினைத்ததை முடிக்கும் நிர்வாகி!

மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமியைத் தொடர்ந்து இப்போது தலைமை நிலைய செயலாளர் கு.க. செல்வம் எம்.எல்.ஏ.வும் பாஜகவுக்குப் போயிருக்கிறார். இதுபோல இன்னும் சிலர் கூட செல்லும் வரிசையில் நிற்கிறார்கள் என்று திமுகவுக்குள் ஒரு தகவல் "டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினிடம் நினைத்ததை முடிக்கும் நிர்வாகி!"பரவிவருகிறது. கட்சிப் பிரச்சினை, தனக்கு வரவேண்டிய பதவிகளை தட்டிப் பறிக்கிறார்கள் என்பன போன்ற காரணங்களே திமுகவுக்குள் அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருப்பதன் காரணங்களாக சொல்லப்படுகிறது. தலைமையிடத்தில் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் தலையிட்டு அதன் மூலம் தனது ஆதரவாளர்களே நிர்வாக மட்டத்தில் இருக்குமாறு அவர் பார்த்துக் கொள்கிறார். அதனாலேயே கட்சிக்குள் என்ன நடக்கிறது என்ற ஆக்சுவல் உண்மையை தலைவரிடம் மறைத்துவிட்டு இன்னொரு நிலவரத்தை சொல்லி, தனக்கு ஆதரவான மாசெக்களை காப்பாற்றுகிறார். அவர்களுக்கு வேண்டாதவர்களை கட்சியை விட்டே தூக்குகிறார் என்ற விமர்சனங்கள் அந்த நிர்வாகியின் மீது நீண்டுகொண்டே இருக்கின்றன. திமுகவில் ஸ்டாலின் தான் தலைவரா இல்லை அவருக்கும் மேலே சூப்பர் தலைவர் யாராவது இருக்கிறார்களா என்பதுதான் கட்சி நிர்வாகிகள் இப்போது கேட்கும் கேள்வியாக இருக்கிறது. யார் அவர் என்று பார்க்கும் முன்னர்....

திமுகவில் இத்தகைய குழப்பத்தின் லேட்டஸ்ட் உதாரணம் சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டது.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாகவும் கூறி சிவகங்கை மாவட்

டத்தில் காளையார்கோவில் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.மார்த்தாண்டன், காளையார்கோவில் முன்னாள் வடக்கு ஒன்றியச் செயலாளர் மேப்பல் எம்.சக்தி, சாக்கோட்டை முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப.முத்துராமலிங்கம் ஆகிய மூவரையும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜூலை 28 ஆம் தேதி உத்தரவிட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காளையார்கோயிலில் ஆகஸ்டு 3 ஆம் தேதி ஊரடங்கையும் மீறி 500 திமுகவினர் திரண்டு கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பனின் கொடும்பாவியை எரிக்கிறார்கள். மாவட்டச் செயலாளரின் கொடும்பாவியை எரிக்கும் அளவுக்கு திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன?

இதன் பின்னணியை விசாரித்தபோது

பல தகவல்கள் கிடைக்கின்றன. வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்த மேப்பல் சக்தி கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இப்போதைய அமைச்சர் பாஸ்கர் அதிமுக சார்பில் போட்டியிட்டார். தேர்தலின் போதே சிவகங்கையைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கோபாலபுரத்தைத் தொடர்புகொண்டு, ‘ சிவகங்கை சட்டமன்றம் நாம ஜெயிக்கிற வாய்ப்பு அதிகமா இருக்கிற தொகுதி. இங்க பணம் எதுவும் வந்து சேரலை. கொஞ்சம் விசாரிங்க’ என்று தகவலை கலைஞரிடம் சேர்த்துவிடுகிறார். அதன் பிறகு சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கு தலைமையிடம் இருந்து அனுப்பப்பட்ட பணம் மாவட்டச் செயலாளர் பெரிய கருப்பனால் கொடுக்கப்படவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது. தேர்தல் முடிவில் மேப்பல் சக்தி தோல்வி அடைந்து பாஸ்கரன் ஜெயித்து அமைச்சராகவும் ஆகிவிடுகிறார். அப்போதே மேப்பல் சக்தி தலைமைக்கு, ‘பெரியகருப்பன் அதிமுகவின் பாஸ்கரோடு கூட்டு வைத்து என்னை தோற்கடித்துவிட்டார்’ என்று புகார்களை அனுப்புகிறார். மாவட்டச் செயலாளர் பெரியகருப்பனும், அமைச்சர் பாஸ்கரும் குவாரி தொழிலில் கூட்டு வைத்திருக்கிறார் என்று அதற்குப் பின்னரும் திமுக தலைமைக்கு சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பல புகார்கள் சென்றன.

இந்நிலையில் 2019 எம்பி தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் இந்த உட்கட்சி மோதலை அறிந்துகொண்டே சக்தி கோஷ்டிக்கு தனியாகவும், மாசெ பெரியகருப்பன் கோஷ்டிக்கு தனியாகவும் தேர்தல் வேலைகளை ஒதுக்கி சாமர்த்தியமாக அந்த கோஷ்டி மோதலில் இருந்து தன் வெற்றி பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டார்.

இதன் பின் உள்ளாட்சித் தேர்தலில் மேப்பல் சக்தி ஆதரவாளர்களுக்கு மாசெ பெரியகருப்பன் சீட் தரவில்லை என்ற புகார்கள் மீண்டும் எழுகிறது

. இதனால் கோபமான சக்தியின் ஆதரவாளர்கள் காளையார்கோவில் ஒன்றியத்தில் சுயேச்சையாகவே நின்று ஜெயித்து, அதிமுகவினரோடு கூட்டு வைத்து வைஸ் பொறுப்பு உள்ள்ளிட்ட பொறுப்புகளை பெற்றனர். இதை வைத்தே மேப்பல் சக்தியை ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று பெரியகருப்பன் தலைமைக்கு புகார் அனுப்பினார். மேப்பல் சக்தியின் ஆதரவாளர்கள் அதிமுகவினரோடு கூட்டணி வைத்து கட்சிக்கு எதிராக செயல்பட்டனர் என்பது மாவட்டச் செயலாளரின் புகார்.

இதை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விசாரித்தார். அந்த விசாரணையில் மேப்பல் சக்தி தரப்பினர், ‘திமுகவில் போட்டியிட்டு ஜெயிக்கக் கூடியவர்களுக்கு பெரியகருப்பன் சீட் தரவில்லை. அதனால் சிலர் சுயேச்சையாக போட்டியிட்டு ஜெயித்துவிட்டனர். அண்மையில் நடந்த மானாமதுரை சட்டமன்றத் தேர்தலில் பெரியகருப்பன் தானே பொறுப்பு? அதில் தோற்றுப் போய்விட்டோமே? அமைச்சர் பாஸ்கரனுடன் கூட்டணி வைத்துதான் பெரிய கருப்பன் திமுகவை தோற்கடித்தார். உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய சேர்மன் பதவிகளை அதிமுகவுக்கு விட்டுக் கொடுத்தவர்தானே பெரியகருப்பன். அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார்கள். இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட ஆர்.எஸ். பாரதி

இதை திமுக தலைவர் ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார். பெரியகருப்பன் மீதும் பெரிய பெரிய புகார்கள் வருவதைப் பார்த்த ஸ்டாலின்... சரி பார்ப்போம் என்று நிறுத்தி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் பெரிய கருப்பன், ‘தலைமைக்கு நெருக்கமானவரை பிடிச்சு எல்லாரையும் கட்டம் கட்டுறேன்’ என்று முடிவு செய்து எ.வ. வேலுவை அணுகுகிறார். இருவரும் பேசுகிறார்கள். இதன் பிறகே மேப்பல் சக்தி உள்ளிட்டோர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்படுகிறார்கள். ஏற்கனவே மேப்பல் சக்தியை வடக்கு ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய பெரிய கருப்பன் இப்போது தனது தலைமையிட வேலு செல்வாக்கைப் பயன்படுத்தி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்க வைத்திருக்கிறார். இதுதான் கட்சியின் உண்மையான விசுவாசிகளை பொங்க வைத்து காளையார் கோயிலில் திரண்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு கொண்டு போய் விட்டிருக்கிறது.

இதுபோல பல மாவட்டத்திலும் கட்சிக்கு உண்மையானவர்களை பலி கொடுத்து அதிமுகவோடு கூட்டணி போட்டுக் கொண்டு மாசெக்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை எ.வ. வேலு மூலமாக காய் நகர்த்தி தடுத்து வருகிறார்கள். இதன் மூலம் வேலுவுக்கு தமிழகம் முழுதும் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். ‘தலைவர்கிட்ட நாம பேசி சாதிக்க முடியாததை மந்திரி பண்ணிடுவாருய்யா. வேலு சொன்னாருன்னா தலைவர் தட்டவே மாட்டாரு’ என்று பலரும் வேலுவைத்தான் அணுகி வருகிறார்கள். இந்த நிலையில்தான் சிவகங்கையில இதுபோல நடவடிக்கை எடுத்து திமுகவை எதிர்த்து திமுகவே போராட்டம் செய்ய வேண்டிய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இதுபோல பல மாவட்டங்களிலும் வேலுவின் கரங்கள் நீண்டிருக்கின்றன. ஒரு மாவட்டச் செயலாளராக மட்டுமே இருக்கும் வேலு எப்படி இத்தனை மாவட்டங்களில் செல்வாக்கு செலுத்த முடிகிறது. இதையெல்லாம் ஸ்டாலின் யோசிக்கவில்லை என்றால் தமிழக திமுகவில் இன்னும் பல சிவகங்கைகள் உருவாகும் என்கிறார்கள் தென் மாவட்ட திமுகவினர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அ

கருத்துகள் இல்லை: