செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி தங்கள் குற்றங்களை மறைத்த ...

Krish Marudhu -Kathiravan Mayava : கண்டிப்பாரா திருமாவளவன் ? தாழ்<>த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுவதா ? கொடுமை !
கேடயத்தை கத்தியாக உபயோகிக்கும் அயோக்கியர்கள் ....
தாழ்த்தப்பட்ட மக்களை ஆதிக்க சாதியினரிடம் இருந்து காப்பதற்காக கொண்டுவரப்பட்டது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் ...
ஆனால் அந்த சட்டம் பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தி தாங்கள் தாக்கப்படாமல் காத்துக் கொள்வதற்கு  உள்ள சட்டம் என்பதை மறந்து அதே சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தி உயர்சாதியினர் என்று அழைக்கப்படும்
மக்கள் மீது ஒரு சதவீதம் கூட உண்மை இல்லாத பொய்யான புகாரை அளித்து தாங்கள் செய்யும் குற்றங்களை மறைப்பதற்காக அந்த சட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்தும் போக்கு நாட்டில் நிலவி வருகிறது ..
இது மிகவும் ஆபத்தான போக்காகும் இந்த சட்டத்தை பயன்படுத்தும்போது பிரிலிமினரி என்கொயரி என்ற முறையில் முதல்கட்ட விசாரணை நடத்தி முடிவெடுத்து அதன்பிறகே தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கு பதியப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியிருந்தது
ஆனால் அது மாற்றப்பட்டு புதிய சட்டத்தின் வழியாக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சம்பந்தமாக புகார் அளித்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் அதை குறித்து உண்மைத்தன்மையை உண்டா என்று விசாரிக்கக்கூடாது வழக்கை பதிவு செய்த பிறகுதான் விசாரிக்க வேண்டும் என்ற ஒரு நிலையை புதிய திருத்த சட்டம் அளித்திருக்கிறது .
ஆனால் இந்த புதிய திருத்தச்சட்டம் எவ்வளவு ஆபத்தாக பயன்படுத்தப்படுகிறது என்பதை கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் மீது பாய்ச்சப்பட்டு இருக்கும் இந்த சட்ட பிரிவுகள் காட்டுகின்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கரூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார் மன்னன் என்று அழைக்கப்படும் ராஜா என்ற வழக்கறிஞர்

தங்கமணி என்ற ஒரு நாவிதர் வகுப்பைச் சேர்ந்த ஏழ்மையான மனிதனான தங்கமணி என்பவர் சட்டப்படி 21 வயது நிறைவு பெறாத போது , தான் திருமணம் செய்து கொள்ள விரும்பி 21 வயது முழுமையாக நிலையிலே திருமணம் செய்து கொள்ள இயலுமா என்று சட்ட ஆலோசனை ராஜாவிடம் கேட்டுள்ளார் . அதற்கு ராஜா 21 வயது நிறைவாக ஆகாதவர்களும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தவறான சட்ட ஆலோசனை கூறி அந்த பையனுக்கு அந்தப் பையன் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டு ,
ரூபாய் 20,000 வழக்கறிஞர் கட்டணமாக கேட்டு பெற்றுள்ளார். திருமணத்தை முன்நின்று நடத்தி உள்ளார்.

அதன் பிறகு கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தம்பதியினர் ஆஜராகி பாதுகாப்பு கேட்டபொழுது வயது குறித்த சான்றுகளை பார்வையிட்ட காவல் அதிகாரிகள் திருமணம் செய்யக் கூடிய வயது இன்னும் வரவில்லை தங்கமணிக்கு, எனவே இந்த இந்த திருமணத்திற்கு பாதுகாப்பு அளிக்க முடியாது மேலும் தங்கமணி 21 வயது பூர்த்தியாகும் வரை இந்த கணவன் மனைவி பிரிந்து இருக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்லி அனுப்பிவிட்டார்கள்

அதன் பிறகு முன்கூட்டி ஒப்புக்கொள்ளாத 30 ஆயிரம் ரூபாய் மேலும் வழக்கறிஞர் கட்டணம் வேண்டுமென்று தங்கமணியிடம் வழக்கறிஞர் ராஜா பெற்றுக் கொள்ள திட்டமிட்டு ,

தங்கமணியின் மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு போய்விட்டார்

30 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் மோட்டார் பைக் தருவேன் என்றும் அந்த மோட்டார் பைக் ஒரு நபரிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது என்றும் பொய்யாக கூறியுள்ளார்

எனவே மேலும் 30,000 ஏற்கனவே ஒப்புக் கொள்ளாத நிலையிலும் பணத்தை ராஜாவிடம் கொடுத்து தங்கமணி மோட்டார் பைக்கை அவரிடமிருந்து திரும்பப் பெற்றுள்ளார்

இடையில்
இந்த பிரச்சினையில் மோட்டார் பைக் காணாமல் போய்விட்டது என்று மோட்டார் பைக் பெயரளவிலான உரிமையாளரான இந்த மோட்டார் பைக்கை கடனுக்கு வாங்கி கொடுத்த நிதி நிறுவன அதிபர் அய்யாசாமி என்பவர் தாந்தோனிமலை காவல்நிலையத்தில் மேற்கண்ட பைக் திருடு போய்விட்டது என்று சொல்லி ஒரு வழக்கைப் பதிவு செய்து வைத்துவிட்டார்

இப்போது மோட்டார் சைக்கிள் என்னிடம் உள்ளது என்று தங்கமணி காவல்நிலையத்தில் தெரிவித்தால் அவர்தான் மோட்டார்சைக்கிளை திருடினார் என்று கைதாக கூடிய சூழ்நிலை உள்ளது

தனது வண்டியை தானே திருடியதாக தன் மீது ஒரு வழக்கு வரும் நிலையை வக்கீல் ராஜா ஏற்படுத்தியுள்ளார் ,
இதிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் நீதி கிடைக்க வேண்டும் என்று சொல்லி தங்கமணி கரூர் மாவட்ட காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளார் இந்தநிலையில் அந்தப் புகார் சம்பந்தமாக விசாரிப்பதற்கு தாந்தோணிமலை காவல் நிலையத்திலிருந்து அழைப்பாணை அனுப்பி உள்ளார்கள்

இந்த நிலையில் வக்கீல் ராஜா மேற்படி விசாரணைக்கு தங்கமணி ஆஜரானார் ஆஜராக விடமாட்டேன் வழியிலேயே மடக்கி தூக்கி கொண்டுபோய் விடுவேன் என்று மிரட்டி உள்ளார் அதனால் அந்த விசாரணைக்கு வேறொரு வழக்கறிஞர் துணையுடன் மட்டுமே போக வேண்டும் என்று கருதி என்னிடத்தில் தமிழ் ராஜேந்திரன் இடத்தில் மேற்படி தங்கமணி வந்து அணுகி இந்தப் பிரச்சனையில் உதவவேண்டும் என்று கேட்டுள்ளார் அப்பொழுது வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் தாந்தோணி காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் பேசி விவரம் கேட்டுள்ளார்
ஆய்வாளர்
சண்முக சுந்தரமும் வக்கீல் மீது புகார் கொடுத்த தங்கமணி அதுபற்றி வாக்குமூலம் கொடுக்க வர மறுக்கிறார் என்று சொல்லியுள்ளார் அப்பொழுது அவர் வாக்குமூலம் கொடுக்க வரக்கூடாது என வக்கீல் ராஜாவால் மிரட்ட படுவதால் பயப்படுகிறார் என்று சொல்லி அடுத்த நாள் காலையில் தான் கூட வந்து பாதுகாப்பாக விசாரணைக்கு அழைத்து தங்கமணியுடன் வருவதாக வக்கீல் தமிழ் ராஜேந்திரன் ஆய்வாளர் சண்முகசுந்தரத்திடம் தெரிவித்துள்ளார்

இடையில்
தமிழ் ராஜேந்திரன் ராஜாவிடம் அலைபேசியில் பேசி திருமணம், பைக்கு அடமானம் தொடர்பாக ஒரு பிரச்சனை தன்னிடம் வந்துள்ளது அதில் நீங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது
அது பற்றி என்ன விவரம் என்று சொல்லமுடியுமா சுமுகமாகத் தீர்க்க வாய்ப்பு இருக்கிறதா என்ற முயற்சியில் கேட்டார்

அப்போது அந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது அப்பொழுது பதில் சொன்ன ராஜா தன் திருமணம் செய்து வைத்தது உண்மை பீஸ் 20,000 வாங்கியது உண்மை ஆனால் மேற்கொண்டு 30,000 வாங்கியதில் 10 ஆயிரம் ரூபாயை தங்கமணியை வாங்கிக்கொண்டார் தான் 20000 மட்டும் வாங்கிக் கொண்டதாகவும் பதில் சொன்னார் அந்த உரையாடல் சுமுகமாக நடந்துள்ளது அந்த உரையாடலில் மிரட்டும் விதமாக பேசிக்கொள்ளவில்லை

அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து தமிழ் ராஜேந்திர அலுவலகத்துக்கு வழக்கறிஞர் ராஜா வந்து என் மீது உள்ள குற்றச்சாட்டை யாராவது கூறினால் நீங்கள் எப்படி என்னிடம் விசாரிக்கலாம் ஒரு வக்கீல் மீது குற்றச்சாட்டு வைத்தால் யாரும் விசாரிக்க கூடாது என்று சொன்னார் அதற்கு தமிழ் ராஜேந்திரன் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் உங்களிடத்தில் விசாரித்தேன் வேறு ஒன்றும் இல்லையே நான் கடுமையாக ஒன்றும் கேட்கவில்லையே என்று அவர் சொன்ன பொழுது அவர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று புறப்பட்டுப் போய்விட்டார்

தமிழ் ராஜேந்திரன் தன்னுடைய வழக்கமான பணிகளை கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு ஒரு தகவல் வந்தது

தாந்தோணிமலை ஏபிஎஸ் மருத்துவமனையில் போயி அட்மிட் ஆகி வக்கீல் ராஜா என்பவர் உங்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒரு வாக்குமூலம் கொடுத்து இருப்பதாகவும்
உடனடியாக உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டது என்றும் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் தகவல் வந்தது அந்த நிலையில் அடுத்த நாள் ஏபிஎஸ் மருத்துவமனைக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று என் மீது ஏதோ ராஜா என்பவர் இந்த மருத்துவமனையில் இருந்து இண்டிமேஷன் கொடுத்துள்ளதாக கேள்விப்படுகிறேன் என்ன இண்டிமேஷன் கொடுத்துள்ளார் என்று நான் பார்க்க விரும்புகிறேன் அதை காட்டுங்கள் என்று கேட்டு கேட்டார் அதற்கு ஏபிஎஸ் மருத்துவமனையில் இருந்த அலுவலர்கள் அந்த இண்டிமேஷன் புத்தகம் மருத்துவர் உள்ளே வைத்து பூட்டி விட்டு போய் விட்டார் எனவே நாங்கள் உங்களிடத்தில் அது காட்ட முடியாது என்று சொன்னார்கள் உடனடியாக தமிழ் ராஜேந்திரன் மருத்துவமனையில் இருந்து வெளியேறிவிட்டார் மருத்துவமனையில் உள்ளே சென்று சிகிச்சை பெற்றதாக கூறப்படும் ராஜாவை தமிழ் ராஜேந்திரன் சந்திக்கவில்லை

இந்த நிலையில் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்கு எண் 448 /2020 என்ற எண்ணில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 294 பி, 323, 506 (1) மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு மூன்றில் பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பற்றி அறிந்துகொண்டார்

இவ்வாறாக தான் செய்த தப்பை மறைப்பதற்காக அபாண்டமாக ஒரு வக்கீல் இன்னொரு வக்கீல் மீது பொய் குற்றச்சாட்டு கூறி இருப்பது கண்டு தமிழக முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது

நூற்றுக்கணக்கான பெரியோர்கள் இதைக்குறித்து தங்கள் வருத்தங்களை தமிழ் ராஜேந்திரனிடம் பகிர்ந்துகொண்டார்கள்

இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கிலிருந்து சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் எடுத்து வருகிறார்

இது ஒரு ஆபத்தான போக்கு ஆகும் இதுபோன்ற வழக்குகள் முறைகேடாக தவறாக பாய்ச்சப்படுவது தடுக்கப்பட வேண்டும்

இது குறித்து பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் பல்வேறு இயக்கங்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டும்

இந்த நிலைமை குறித்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்

தமிழ் ராஜேந்திரன் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர் அவர் சோழிய வெள்ளாள பிள்ளைமார் சாதியை சேர்ந்தவர் அவரது மனைவி நாடார் சாதியைச் சேர்ந்தவர் அவருடைய கொழுந்தியாளை வன்னியகவுண்டர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் அவருடைய குடும்பத்தில் மேலும் சில சாதிகளை சேர்ந்த திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் எந்தவிதமான சாதிப் பற்று இல்லாதவர் தமிழ் ராஜேந்திரன் மேலும் தாழ்த்தப்பட்ட மக்களுடன் மிக நெருங்கிப் பழகி அவர்களோடு தோளின் மேல் கை போட்டு வாழ்ந்து வருபவர்

இந்த தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தினால் அப்பாவிகள் பொய் வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிப்பதற்கு என்ன செய்யலாம் என்று
சிந்திப்போம் செயல்படுவோம்

நன்றி

வணக்கம்

இப்படிக்கு

பொய் வழக்கினால் பாதிக்கப்பட்டு மனவேதனை அடைந்துள்ள 60 வயதான எந்த விதமான குற்றச் செயலிலும் 60 ஆண்டுகளாக ஈடுபடாத

தமிழ் ராஜேந்திரன்
9787933344

இந்த வழக்கில் ஜாமீன் பெறும் வரை தமிழ் ராஜேந்திரனை கைது செய்து கொடுமை படுத்த வேண்டாம் என்று கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் (செல் 944438463350)
மற்றும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியுமான முகேஷ் ஜெயக்குமார்
(செல் 9498105360) ஆகியோரிடம் நல்ல உள்ளம் கொண்ட பெரியோர்கள் வேண்டுகோள் வைத்து உதவுமாறு தமிழ் ராஜேந்திரன் பணிவுடன் வேண்டுகிறார்

கருத்துகள் இல்லை: