சல்வா ஜுடும்... இந்தப் பெயரைக் கேள்விப்
பட்டிருக்கிறீர்களா..
தொண்ணூறுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரு மழைக் காடுகள் எல்லாம் 'டாடா', 'எஸ்ஸார்' போன்ற கார்ப்பொரேட்டுகளின் லாப வேட்டை க்குத் தாரை வார்க்கப்பட்டன. கனிம வளங்களைக் கொள்ளையிடச் சுரங்கங்கள் தோண்டப்பட்டன. இதை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய அக்காடுகளில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டனர்.

வாழ்முறையிலேயே ஆயுதபாணிகளான பழங்குடிகள் அமைப்பாகத் திரண்டு, அரசுக்கும், கார்ப்பொரேட்டுகளுக்கும் எதிராகச் சமர் செய்தனர்.
பழங்குடிகளைத் தன் ஆயுத பலத்தாலும், படை பலத்தாலும் வெல்ல முடியாத மத்திய, மாநில அரசுகள் 2005-ல் மிகக் கீழ்த்தரமாக, வஞ்சகமானதொரு திட்டத்தைச் செயல்படுத்தினர்.
அதாவது... பழங்குடிகளுக்கிடையிலே உள்ள கருப்பு ஆடுகளை இனம் கண்டு... அவர்களை அமைப்பாக்கி... ஆயுதங்களையும், பயிற்சியையும் கொடுத்துப் போராடும் பழங்குடி மக்களுக்கு எதிராக ஏவி விட்டு நர வேட்டையாடினர்.
அரசின் சட்டப்பூர்வமான இராணுவம், போலீஸ் போன்ற ஆயுதப் படைக்கே ஒரு கூலிப்படை.... அதன் பெயர்தான் 'சல்வா ஜுடும்'.
நக்சலைட்டுகளை வேட்டையாடுகிறோம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான முன்னணிப் போராளிகளை கொன்று குவித்தது இந்தக் கூலிப்படை. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு நூற்றுக் கணக்கான பழங்குடி இனப் பெண்கள் சின்னாபின்னமாகச் சிதைக்கப்பட்டனர்.
சுரங்கப் பணிகளுக்காக 600-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
சட்டத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் புறம்பான இந்த 'சல்வா ஜுடும்' எனும் கூலிப்படையை அரசே வழி நடத்துவதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. நீண்ட விசாரணைக்குப் பின் 05.07.2011-ல் 'சல்வா ஜுடும்' அரசியல் சாசனத்துக்கு முரணான, சட்ட விரோத அமைப்பு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தச் சட்ட விரோதக் கூலிப்படையின் தலைவன் மகேந்திர கர்மா அடுத்த இரண்டாண்டுகளில் தேடிப் பிடித்து கொல்லப்பட்டான் என்பது தனிக் கதை.
கொஞ்சம் பின்னோக்கி... தமிழகத்தை பார்ப்போம்.
1979- 80-களில் வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் கூலி விவசாயிகள் அரசியல் எழுச்சி பெற்று, அமைப்பாகத் திரண்டு பண்ணை ஆதிக்கத்தையும், கந்து வட்டிக் கொடுமையையும் மிகத் தீவிரமாக எதிர்த்து நின்றனர்.
இந்த மக்கள் திரளுக்கு தலைமையேற்ற நக்லைட்டுகளை ஒழித்துக் கட்ட போலீசின் உளவுப்படை உதவ முடியாத நிலை... எனவே 'கிராமப் பாதுகாப்பு குழு' என்ற பெயரில் ஒவ்வொரு கிராமத்திலும் காவல் துறையே உள்ளூர் இளைஞர் களைத் திரட்டி உருவாக்கியது. அவர்களின் உதவியோடுதான் இருபதுக்கும் மேற்பட்ட மக்கள் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதே வழியில்... தொண்ணூறுகளில் தமிழகத்தில் 'ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' என்ற அமைப்பு உருவாக்கப் பட்டு உள்ளூர் இளைஞர்கள் போலீசின் வாலாக செயல்பட ஆரம்பித்தனர்.
தற்போது 'கொரோனா பந்தோபஸ்து' என்ற பெயரிலே பொதுமக்களை ஆடு மாடுகளை அடிப்பது போல் அடித்து நொறுக்கும் போலீசோடு சாலைகளில் இந்த வால்களும் தடியேந்தி நிற்கிறது.
இதில் சங்ககள் ஊடுருவல் வேறு. இருப்பதிலேயே பெரும் ஆபத்து அதுதான். ஏற்கனவே குரங்கு... இப்போது கள் குடித்த குரங்காக ஆடுகிறார்கள்.
உச்ச நீதிமன்ற வழக்குத் தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் இந்த "ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்" என்ற அமைப்பு சட்ட விரோதமானது... அரசியல் சாசன விரோதமானது. உடனடியாக தடை செய்யப்பட வேண்டியது.
Jeeva Giridharan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக