திங்கள், 29 ஜூன், 2020

சாத்தான்குளம் அட்டூழியங்கள்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் கடந்த கால கொலைகள் .. வீடியோ


Samayam Tamil: கோவில்பட்டி கஸ்டடி மரண வழக்கில் முக்கிய குற்றவாளியென சாத்தான்குள வட்டாரத்தில் அழைக்கப்படும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை அட்டூழியத்தை குறித்து பெண் ஒருவர் கூறுகிறார்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்"க்ரிட்டிக் விமர்சனம்"
சாத்தான்குளம் : 2006 ஆம் ஆண்டு அதே சாத்தன்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி 20 வயதான அருண்பாரத் என்ற இளைஞரை அடித்து கொலை செய்ததான வழக்குக்கு கிடைத்த நீதி வெறும் சஸ்பெண்ட் தான். இன்றும் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் வழக்குக்கு அதுதான் கிடைத்துள்ளது. ஆனால், வழக்கு நடந்து வருவதால், விரைவில் நீதி கிடைக்கும் என்கிறார் பாரத்தின் சகோதரி ஃபெமினா.
ஊரடங்கு விதிமுறை மீறி கடையை திறந்து வைத்ததாக சாத்தான்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான காவலர்கள் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த கஸ்டடி மரணம் மாநிலம் முழுவதும் தீயாய் பரவி நாளுக்குநாள் நீதிக்கான கண்டங்கள் எழுந்து வருகின்றன.


அதன் தொடர்ச்சியாக இரண்டு காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, இரண்டு தலைமை காவலர்கள் மீது அலுவலக ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தெரிவித்தது. ஆனால் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடும் கண்டன குரல்களுக்கு பின்னர், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் செய்த அட்டூழியங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்ல என்கிறார் 2006 இல் கஸ்டடி மரணம் அடைந்த பாரத்தின் சகோதரி ஃபெமினா. அவர் இவ்வாறு தெரிவித்ததாக தனியார் செய்தி தொலைக்காட்சி குறிப்பிடுகிறது. '' என் தம்பி பாரத்தை விசாரணைக்கு அழைத்து சென்றபோது பணியில் இருந்தவர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார். என் தம்பி மரணத்துக்காக நான் இதுவரை போராடி வருகிரேன். ஆனால் இந்த வழக்கில் ஸ்ரீகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு சரி, அவர் மீது வேறெந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அவர் இப்போதும் பணியில்தான் இருக்கிறார். அதற்கு பிறகு ஸ்ரீதர் இன்ஸ்பெக்டராக வந்தார். எனக்கு இன்னொரு தம்பி இருக்கிறார். அடிக்கடி விசாரிப்பதற்காக என் வீட்டுக்கு வரும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், என் தம்பியை பலமுறை கைது செய்து அழைத்து செல்வார். தம்பியை பார்ப்பதற்காக ஸ்டேஷனுக்கு செல்லும் என்னிடம், நீ அழகா தானே இருக்கிறாய், என்கூட வந்து விடு நான் உன்னை ராணி மாதிரி பார்த்துக்கொள்கிறேன் என முகம் சுளிக்கும்படி பேசுவார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்லும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பே கிடையாது'' என ஃபெமினா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: