Hema Sankar :
அமெரிக்காவில் ‘முதல் முறையாக’ வழக்காக மாறியுள்ளது அவ்வளவு தானே தவிர, இது முதல்முறை நடக்கும் சம்பவம் அல்ல.
1. அப்பட்டமாக சாதிக்கு சங்கங்கள் இங்கு இருக்கிறது
2. மொழி வாரியாக இங்கு சங்கங்கள் இருக்கிறது. ( தமிழ் சங்கம், தெலுங்கு சங்கம், குஜராத்தி, ராஜஸ்தான் etc ). இவைகளில் பெரும்பாலான சங்கங்களில் உள்ள நிர்வாகிகள் ஏதோ ஒரு புள்ளியில் சாதிய ரீதியில் இணைக்கபடுகிறார்கள்.

3. நண்பர்கள் குழுக்கள் இருந்தாலும் அதிலும் ‘ South Indians’ ‘North Indians’ தனித்தனித் குழுவாக தான் இருப்பார்கள்.
4. வட இந்தியர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட privileged சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள் ( mostly vegetarians ). வட இந்தியாவில் பீகார், ஒரிசா, north East போன்ற இடங்களில் இருந்து வருபவர்களிடம் நட்பு பாராட்டுவதில்லை.
5. பெரும்பாலும் இஸ்லாமியர்களிடமும் நட்பு வைத்துக்கொள்வதில்லை
6. தெலுங்கு சங்கங்களின் ஆதிக்கம் இங்கு அதிகம். அவர்களின் எண்ணிக்கை அதிகமும் கூட. சாய் பாபா கோவில்களில் இருந்து ஆபிஸ் லாபியிங் வரை தெலுங்கு பேசுபவர்களுக்கு ஒரு circle இருக்கிறது.
7. தமிழர்கள் மட்டும் ஏப்ப சாப்பையா என்று நினைத்து விடாதீர்கள். இங்கு தமிழர்களிடமும் அதே சாதி network, சங்கங்கள் இருக்கிறது.
8. பெரிய தமிழ் சங்கங்களில், கோயில்களில் எல்லாமே லாபி தான்.
9. தமிழன் பாரம்பரியம் என்று சொல்லிக்கொண்டு இன்றும் பழமைவாதத்தை கடற்கடந்து இங்கு தூக்கி சுமந்து வந்திருக்கிறார்கள்.
10. புடவை, வேட்டி, கும்மி, ஜல்லிக்கட்டு, முலைப்பாரி, பாரதியார், எல்லையில் ராணுவ வீரர்கள் இவை மட்டுமே இங்கு தமிழனின் அடையாளம். சமீபமாக ‘ஆளப்போரான் தமிழன்’ பாடல்.
11. ‘Potluck’ ( நண்பர்கள் ஒவ்வொருவர் வீட்டிலிருந்து ஒரு உணவு வகை சமைத்து வருவது ) குழுக்கள் இங்கு அதிகம் உண்டு. அதிலும் veg only குழுக்கள் வேறு குழுக்களோடு இணைவதில்லை. கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் இக்குழுக்களின் மூலம் சாதியை கண்டறிய அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.
12. கோவில்களில் தமிழ் பள்ளிகள் இயங்கி வருகின்றது. இதில் பார்ப்பனர்கள் அதிகம் இருப்பார்கள். பிள்ளைகளுக்கு பக்தியையும் , தமிழும் சேர்த்து சொல்லி தருகிறார்களாம். அதற்காக சமஸ்கிருத ஸ்லோகமும் சொல்லித் தருகிறார்கள். தமிழுக்கும், ஸ்லோகத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எண்ணிப்பார்த்தாலே இங்கு கடத்தப்பட்டிருக்கும் சாதியம் புரியும்.
13. இங்கு கோயில்கள் கார்ப்பரேட் ஆபிஸ் மாதிரி தான். நூல் இருந்தால் ஒரு மரியாதை, இல்லையென்றால் வேறுபாடு. இது தெரிந்தும், தெரியாதது போல் நம் மக்கள் அங்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி இந்தியாவை போலவே மொழி வாரியாக, மதத்தின் வாரியாக , சாதியின் வாரியாக இங்கு செயல்படுவது தான் அதிகம். இன்னும் நிறைய இருக்கிறது இது குறித்து பேசுவதற்கு. ஆனால் பாருங்க ‘இப்போலாம் யாரு சாதி பார்க்குறானு கூச்சம் இல்லாமல் பேசுவார்கள்’.
புரட்சியாளர் அம்பேத்கர் கூறியது போல ‘இந்துக்கள் பூமியின் மற்ற பகுதிக்கு குடிபெயர்ந்தால் இந்திய சாதி முறை பன்னாட்டு சிக்கலாக மாறிவிடும்’.
ஹேமா சங்கர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக