ஞாயிறு, 28 ஜூன், 2020

நேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண்.. JusticeForJayarajAndFenix

ஆலஞ்சியார் : காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொன்றால் தான் லாக் அப் மரணம் இது லாக் அப் டெத் இல்லை கடம்பூர் ராஜூ..
நொந்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை .. முதல்வர் மாரடைப்பு என்று உடல்கூறு ஆய்விற்கு முன்பே சொல்கிறார்.
இவர்கள் சரியான முறையில் நேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண் ..
பல்வேறு துறைசார்ந்தவர்கள் இந்த கொடூர செயலை கண்டு கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள் .. ஆனால் எச்.ராசா காவல்துறைக்கு எதிராக தீயசக்திகள் பிரச்சாரம் செய்வதாக சொல்கிறார் .. இவர் காவல்துறையைப்பற்றி கேவலமாக அவர்கள் முன்னிலேயே பேசியதையெல்லாம் மறந்துபோனார்.. சில பாசிசவாதிகள் இந்த கொடூரசெயலை ஆதரிப்பது ஆர்எஸ்எஸ் பின்புலத்தோடு காவல்துறை சேர்ந்த சில கருப்பாடுகள் இதன் பின்னில் இருப்பதாக வரும் செய்திகளில் உள்ள உண்மை கண்டறியபடவேண்டும். ..
காவல்துறை எவ்வளவு கெட்டுபோய்கிடக்கிறதென்பதற்கு காவலர் சதீஷ்,ராம்நாத் கோஹித் போன்றவர்கள் வன்மம் நிறைந்த பதிவுகளே போதும் .. எல்லோரையும் குறைகூறவில்லை ஆனால் போலீஸ் என்றாலே ஒருவித பயம் ஏற்படுவதை களைய வேண்டியது அரசின் கடமை ..


சாத்தான்குளம் தந்தை மகன் கொல்லபட்ட வழக்கில் இதுவரை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யபடாதது சந்தேகத்தை மேலும் வலுவடைய செய்கிறது .. முழுஅளவிளான நேர்மையான விசாரணை தேவை அது இந்த கையாலாகாத அரசால் நிச்சயமாக செய்யமுடியாது.. காவல்துறையில் புகுந்துள்ள புல்லுறுவிகள் ,ஆர்எஸ்எஸால் மூளைச்சலவை செய்யபட்ட சேவாபாரதியினர்.. ஒவ்வொரு நிகழ்விலும் மதவெறியை தூண்டும் தேசவிரோதிகள் நாட்டின் அமைதியை கெடுக்கும் நயவஞ்சகர்களை அடையாளம் கண்டு களைய வேண்டும் .. எச்.ராசா போன்ற சமூகவிரோதிகளை அடக்கிவைக்கவேண்டும்..
..
தென்காசி வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணன் மகன் குமரேசன் (25வயது) காவலர்கள் தாக்கியதில் மருத்துவமனையில் சேர்த்து உயிரிழந்திருக்கிறார் .. இந்த பினாமி ஆட்சியில் வாயில் துப்பாக்கி சுடுவதும் வாயில் கரண்ட்கம்பியை சொருகுவதும் அதேவேளை பார்பனரென்றால் பால்பாக்கெட் போடுவதும்
பெண்களை தரகுறைவாக பேசினாலும் உயர்நீதிமன்றமே கைது செய்ய சொன்னாலும்
நான் காசு தரேன் என வெளிப்படையாக காவலர்களை லஞ்சம் வாங்குபவர்கள் என கொச்சைபடுத்தினாலும் வாய்மூடி மௌனமாய் கடந்து போவதும் இவர்கள் முதுகெலும்பற்ற கோழைகள் .. கொள்ளையடிப்பதற்கும் அதை காப்பதற்கு வழக்குவிசாரணை சிறை என அஞ்சி மொத்தமாக அடகுவைத்து மானமிழந்து மரியாதை கெட்டு கொத்தடிமைகளைப்போல நிற்பதை தினம் தினம் காண்கிறோம் ..
..
கொடுங்கோன்மை
#JusticeForJayarajAndFenix
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: