/tamil.oneindia.com -ganeshamoorthi-s- : சென்னை: தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில், போலீசாரால் தாக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்த, கட்டிட தொழிலாளி கணேசமூர்த்தி வீட்டுக்கு, திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தை
சேர்ந்தவர் கணேசமூர்த்தி. 29 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து
வந்தார்.
கடந்த சனிக்கிழமை மாலை மதுபோதையில் பைக்கில் சென்ற போது தவறி விழுந்துள்ளார். அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது வீடு திரும்பிய பிறகு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட கணேசமூர்த்தி அவரது மகனின் பள்ளி நோட்டுப் புத்தகத்தில், தனது மரணத்துக்கு உளவுத்துறை அதிகாரிகள்தான் காரணம் என்று எழுதி வைத்துள்ளார். இதனால் எட்டையபுரம் பகுதி பரபரப்பாகியுள்ளது
இந்த நிலையில்தான், கணேசமூர்த்தி குடும்பத்தினரிடம், தூத்துக்குடி லோக்சபா எம்பி கனிமொழி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ அப்போது உடன் இருந்தார்.
சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு, சிறையில் உயிரிழந்த, பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் குடும்பத்தினரையும், கனிமொழி ஏற்கனவே நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, திமுக சார்பில் நிதி உதவி வழங்கி இருந்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை காட்டிவரும் இந்த கெடுபிடிகள் மற்றும் அத்துமீறல்கள் எதிர்கட்சிகளின் கண்டனத்தை ஈட்டியுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ஏற்கனவே பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜுக்கு நீதி கிடைக்காத நிலையில், எட்டயபுரம் கட்டடத் தொழிலாளி கணேசமூர்த்தி போலீசாரால் தாக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார். உயிர்குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது. அப்பாவி மக்களை காப்பாற்றாமல் தவறு செய்பவர்களை காப்பாற்றுகிறாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று கேள்வி எழுப்பியுள்ளா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக