Rebel Ravi :
கலைஞரை பேரழிவு சக்தியாக பொதுமக்களுக்கு காட்ட முயன்ற கூட்டம் இன்றும்
ஓய்ந்தபாடில்லை. உண்மையில் அந்த கூட்டத்தின் ஓயாத இரைச்சல்தான்
எங்களைப்போன்ற இளம்தலைமுறைக்கு கலைஞர் என்ன செய்தார் என அறிய வேண்டிய
ஆர்வத்தை தூண்டியது.
கலைஞர் தன் இறுதி நாட்களை படுக்கையில் கழித்து கொண்டிருந்தபோது, பாசிசம் மிக வேகமாக பாய்ச்சப்பட்டு கொண்டிருந்த அந்த சமயம்தான் புதிதாக பெரும் இளைஞர் கூட்டத்துக்கு கலைஞரின் ஆளுமையை, அவசியத்தை, தேவையை உணர்த்தியது. அந்த உணர்த்துதல் எப்படி இருந்தது என்பதற்கு கலைஞர் மறைவின் போது மெரினாவில் கூடிய லட்சக்கணக்கான இளைஞர்களே சாட்சி.
சூத்திரன் படிக்கவே கூடாது, சூத்திரன் தெருவுக்குள் கூட பஞ்சமன் நுழைந்து விடக்கூடாது, பிராமணன் வீட்டு பெண்ணாக இருந்தாலும் அவள் இழி பிறவி என்ற மனுவின் கோட்பாடுகளின் அடிப்படையை 50 ஆண்டுகளில் சட்டப்பூர்வமாய் தகர்த்தவர் கலைஞர்.
அரசுத்துறைகள் அனைத்திலும் சூத்திரர்களை நிரப்பி அழகு பார்த்தவர். தெருவிலேயே நுழையக்கூடாது என்றவர்களை நீதிபதிகளாக்கி நாட்டுக்கே தீர்ப்பு கொடுக்க செய்தவர். பிராமணர் வீட்டு பெண்களுக்கும் சேர்த்தே சொத்துரிமை கொடுத்தவர். படி தாண்டி படிக்கச் செய்தவர்.
மனு சாஸ்திரத்தின் அடிப்படையை கலைஞர் அடித்து நொறுக்கிவிட்டார் என்ற கோபம் ஒரு கூட்டத்துக்கு இருக்க, மறுமுனையில் திராவிடத்தை தாண்டி இங்கு வேறு அரசியல் இல்லை என்ற நிலையை ஏற்படுத்திவிட்டார் என்ற கோபம் மற்றொரு கூட்டத்துக்கு. இருவரும் கலைஞரை பேச பேச அவர் மேலும் மேலும் விவாதிக்கப்படுவார். இந்த விவாதங்கள் நிச்சயம் கலைஞரை அறிய உதவும், அவரை படிக்க தூண்டும்.
கலைஞர் மறைந்த சமயத்தில் ஜெயரஞ்சன் சாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "பொது சமூகத்தால் மாபெரும் தலைவராக பெரியார் ஏற்கப்பட்டதை போல வரலாற்றில் கலைஞரும் ஏற்கப்படுவார். எதிர்கால தலைமுறை கலைஞரை படிக்கும்போது அவர்களுக்கு உண்மை புரியும்" என்றார்.
2 ஆண்டுகளிலேயே அந்த உண்மை பலருக்கு புரிந்துவிட்டது. எங்களுக்கு எப்போதுமே எதிரிகள்தான் விளம்பரம் என்பார் பெரியார். அது இன்றைக்கும் பொருந்துகிறது. கலைஞரை தூற்றுபவர்களிடத்தில் சண்டையிடாமல் கலைஞரின் சாதனைகளை பட்டியலிட்டாலே பார்ப்பவர்கள் யார் சொல்வது உண்மை என்பதை புரிந்துகொள்வார்கள்.
கலைஞர் மறைவின் போது அவரின் ஆட்சிக்கால சாதனைகளில் குறிப்பிட்டவற்றை தொகுத்து மின்னம்பலம் வெளியிட்டது. கல்வி, சமூக நிதி, அடிப்படை கட்டமைப்பு பணிகளில் நவீன தமிழகத்தின் சிற்பி கலைஞரின் அரும்பணியை அறிய இந்த தொகுப்பை அவசியம் படிப்பீர்.
//கலைஞரின் சாதனைகள் ஆட்சிக்காலம் வாரியாக//
//முதல் முறை ஆட்சிக்கு வந்த 1969-71//
போக்குவரத்து தேசியமயமாக்கல்
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தொடக்கம்
அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார வசதி
1500 பேருக்கு மேல் வாழும் அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதிகள்
குடிசை மாற்று வாரியம்
குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம்
இலவச கண் மருத்துவ முகாம் திட்டம்
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்
கை ரிக்ஷாக்கள் ஒழிப்பு மற்றும் இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டம்
தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு இலவச கான்கிரீட் வீடு திட்டம்
விவசாயத் தொழிலாளர்களுக்கான நியாயமான ஊதியத் திட்டம்
குடியிருப்புச் சட்டம்
காவல் துறை ஆணையம் (இந்தியாவில் முதலில் உருவாக்கப்பட்டது இங்குதான்)
பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி அமைச்சகம்
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25லிருந்து 31 விழுக்காடாக உயர்த்தியது
தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 16லிருந்து 18 விழுக்காடாக உயர்த்தியது
பியூசி வரை அனைவருக்கும் இலவசக் கல்வி
மே தினம் - உழைப்பாளர் தினத்துக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை
//இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த 1971-76//
கோவை வேளாண் பல்கலைக்கழகம்
அரசு ஊழியர்களுக்கான குடும்பநல நிதித் திட்டம்
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை
மீனவர்களுக்கான இலவச வீடுகள் திட்டம்
குழந்தைகளுக்கான கருணை இல்லம்
சேலம் இரும்பு உருக்காலை
நில உச்சவரம்புச் சட்டம்
நெய்வேலி மின் திட்டம்
பெட்ரோலியம் மற்றும் தொழில் துறை ரசாயனங்கள், தூத்துக்குடி
சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் (சிட்கோ)
தமிழ்நாட்டின் மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்)
உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பு
வறண்ட நிலங்களுக்கான நில வரி ஒழிப்பு
மனு நீதித் திட்டம்
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்
பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் கொங்கு வேளாளர் சேர்ப்பு
பசுமைப் புரட்சி
//மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்த 1989-91//
வன்னியர், சீர்மரபினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர்களை உள்ளடக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கம், அவர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு
தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 விழுக்காடு மற்றும் பழங்குடியினர்களுக்கு 1 விழுக்காடு இட ஒதுக்கீடு
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவசக் கல்வி மற்றும் வருமான அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச உயர் கல்வி
தாழ்த்தப்பட்டவர்களுக்கு இலவசக் கல்வி மற்றும் வருமான அடிப்படையில் பெண்களுக்கு இலவச உயர் கல்வி
நாட்டிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம்
அரசு சேவைகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு
ஆசியாவிலேயே முதல் கால்நடைகள் மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம்
ஏழைப் பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம்
கைம்பெண்கள் மறுமணத்துக்கான நிதி உதவித் திட்டம்
சாதி மறுப்புத் திருமணங்களுக்கான நிதி உதவித் திட்டம்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
வேளாண் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான வண்டி வாடகைக்கு நிதி
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடக்கம்
கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதி உதவித் திட்டம்
மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு
பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலான பயன் திட்டங்கள்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்
காவிரித் தீர்ப்பாயம் அமைப்பதற்கான முயற்சி
//நான்காவது முறை ஆட்சிக்கு வந்த 1996-2001//
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தேர்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு
மேயர்களில் இருவர் கட்டாயம் பெண்களாக இருக்க வேண்டும். (அதில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர்)
மெட்ராஸ் நகரம் பெயர் மாற்றம் (சென்னை)
மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர அமைப்பு
வெளிப்படையான புதிய தொழில் துறைக் கொள்கை
சாலை மேம்பாட்டுத் திட்டம்
தமிழகம் முழுவதும் பாலங்கள் கட்டுதல்
கிராமங்களில் கான்கிரீட் சாலைகள்
ஆறுகள் மற்றும் கால்வாய்கள் தூர் வாருதல்
24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்
இந்தியாவில் முதல் முறையாகச் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி
அனைத்துக் கிராமங்களிலும் நீர் பாதுகாப்பு
கிராமப்புற மாணவர்களுக்கான 15 விழுக்காடு இட ஒதுக்கீடு
சாதி ஒழிப்புக்கு அடித்தளமிடும் வகையிலான ‘பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்’ திட்டம்
கிராமப்புறங்களுக்கான மினி பேருந்துகள் திட்டம்
இந்தியாவில் முதல் முறையாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம் (சேலம் கல்வி மண்டலம்)
தமிழ் மெய்நிகர் பல்கலைக்கழகம்
சிறுபான்மையினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்
சென்னை திரைப்பட நகரம் (பின்னாளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது)
விவசாயிகளுக்கான சந்தைத் திட்டம்
வருமுன் காப்போம்
கால்நடைகள் பாதுகாப்புத் திட்டம்
பள்ளிகளில் வாழ்வொளித் திட்டம்
கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவில் திருவள்ளுவருக்கு 133 அடியில் மாபெரும் சிலை
சென்னை டைடல் பார்க்
அரசுக் கல்லூரி மாணவர்களுக்கான கணினி பயிற்சித் திட்டம்
2 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வீடு கட்ட புறம்போக்கு நிலங்களில் இடம் ஒதுக்கீடு
1999-2000க்குப் பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த அனைவருக்கும் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் வழங்குதல்
மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி மானியம்
கோயம்பேடு பேருந்து முனையம் (ஆசியாவிலேயே மிகப்பெரியது)
தென் மாவட்டங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம்
பெண்கள் சிறு தொழில் கடன் திட்டம் மற்றும் சேமிப்புத் திட்டம்
விவசாயத் தொழிலாளர்களுக்கான தனிப்பட்ட நல வாரியம்
அமைப்புசாரா ஊழியர்களுக்கான நல வாரியங்கள்
தமிழ் அறிஞர்கள் மற்றும் தியாகிகளுக்கு மணி மண்டபங்கள்
ஊட்டச்சத்து மிக்க உணவுடன் கூடிய முட்டை
20க்கும் அதிகமான அணைகள் கட்டப்பட்டன
ஒன்பது மாவட்டங்களில் புதிதாக ஆட்சியர் அலுவலகம்
மதுரையில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை மற்றும் நான்கு மாவட்டங்களில் புதிய நீதிமன்றக் கட்டடங்கள்
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்
அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்
நமக்கு நாமே திட்டம்
ஏழைகளுக்கான குடும்பநலத் திட்டம்
சென்னை பொது மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் கட்ட ரூ.104 கோடி
நலவாரிய ஊழியர்கள் 13,000 பேருக்கு மீண்டும் பணி
தமிழ் அறிஞர்களின் படைப்புகளை தேசியமயமாக்குதல்
சென்னை வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு ஒன்பது புதிய மேம்பாலங்கள்
ரூ.1,500 கோடியில் 350 துணை மின் நிலையங்கள்
ஒப்பந்த ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
வேலூர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள்
//ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்த 2006-11//
1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி
பொது விநியோகத்தில் மானிய விலையில் பாமாயில், பருப்பு வகைகள், மைதா, கோதுமை வழங்கும் திட்டம்
பொது விநியோகத்தில் 50 ரூபாய்க்கு 10 பொருட்கள்
ரூ.7,000 கோடி மதிப்பிலான கூட்டுறவுக் கடன் தள்ளுபடி (இதன்மூலம் 22,40,739 விவசாயக் குடும்பங்கள் பயன்பெற்றன)
வட்டியில்லாத பயிர்க்கடன்
நெல் கொள்முதல்: பொதுவான ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,050 மற்றும் மேம்பட்ட ரகங்களுக்கு ரூ.1,100
117 உழவர் சந்தைகளைப் புதுப்பித்தல் மற்றும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு
தை 1 தமிழ்ப் புத்தாண்டு
கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,000 (போக்குவரத்துக் கட்டணம் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை உட்பட)
காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ.189 கோடி நிதி ஒதுக்கீடு
தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ.369 கோடி நிதி ஒதுக்கீடு
அமைப்புசாரா ஊழியர்களுக்கு 31 நல வாரியங்கள்
(அதில் விவசாயத் தொழிலாளர் நலவாரியம் - 2)
நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.613,43,44,832 நிதி உதவி (இதன்மூலம் 13,6,492 பேர் பயன்பெற்றனர்)
15,88,288 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா
காமராஜர் பிறந்த நாளை அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உத்தரவு
மதிய உணவில் வாரம் ஒன்றுக்கு ஐந்து முட்டை அல்லது வாழைப்பழம்
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்
கட்டாய நுழைவுத் தேர்வுகள் ரத்து
10ஆம் வகுப்பு வரை தமிழ் பாடம் கட்டாயம்
மைசூரிலிருந்த தமிழ் செம்மொழி மத்திய நிறுவனம் சென்னைக்கு மாற்றம்
ரூ.523 கோடியில் 4,724 கோயில்கள் புனரமைப்பு மற்றும் குடமுழுக்கு விழா
ரூ.277 லட்சத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 10,000 சைக்கிள்கள்
ஏழைப் பெண்களுக்கான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி ரூ.10,000லிருந்து ரூ.25,000ஆக உயர்வு
கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6,000 நிதி
அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
நலமான தமிழகம் திட்டம்
கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
இலவச அவசர ஊர்தி - 108
புதிய நிறுவனங்கள் வருகைக்காக 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். இதன்மூலம் ரூ.46,091 கோடி முதலீடு ஈர்ப்பு, 2,52,569 பேருக்கு வேலைவாய்ப்பு
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை
அரசுத் துறையில் 4,65,658 இளைஞர்களுக்குப் புதிதாக வேலைவாய்ப்பு
கோவை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் மதுரையில் டைடல் பார்க்
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.500 ஆக உயர்வு
அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் 10,096 கிராம ஊராட்சிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ரூ.210 கோடியில் 420 நகர ஊராட்சிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடு
4,945 கிலோமீட்டர் தொலைவுக்கான சாலைகள் விரிவாக்கம்
12,437 புதிய பேருந்துகள் அறிமுகம் (கட்டணத்தை உயர்த்தாமல்)
அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்
புதிதாக 95 சமத்துவபுரங்கள் உருவாக்கம்
உலகத் தரத்திலான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் (இடம் - சென்னை கோட்டூர்புரம், செலவு ரூ.171 கோடி)
ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் (இப்போது சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையாகச் செயல்படுகிறது)
ரூ.100 கோடியில் சென்னை அடையாற்றில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிப் பூங்கா
சென்னையின் மையப் பகுதியில் செம்மொழிப் பூங்கா
வடசென்னை மீஞ்சூரிலும், தென்சென்னை நெமிலியிலும் கடல் நீர் சுத்திகரிப்புத் திட்டம்
ரூ.14,600 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம்
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்
ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுக் குடிநீர் திட்டம்
டெஸ்மா & எஸ்மா நீக்கம்
6ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலாக்கம்
கலைஞர் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 21 லட்சம் குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்ற இலக்கு
பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்வு
2010ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கோவையில் செம்மொழி மாநாடு
119 புதிய நீதிமன்றங்கள் திறப்பு, ரூ.302 கோடியில் நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு
நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க விடுமுறை நாட்களில் நீதிமன்றங்களை நடத்தவும், மாலை நேர நீதிமன்றங்களைத் திறக்கவும் 13ஆவது நிதிக் குழுவுக்குப் பரிந்துரை
திருச்சி, கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலியில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 11,307 ஆசிரியர்கள் மற்றும் 648 ஆசிரியரல்லாதோருக்குப் பணி நியமிக்க ரூ.331 கோடி ஒதுக்கீடு
கல்வியில் பாகுபாட்டைப் போக்க ‘சமச்சீர்க் கல்வி’ திட்டம் அமலாக்கம்
தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
ஆகவே, சொல்லுங்கள் என்னதான் செய்யவில்லை கலைஞர்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக