ஞாயிறு, 7 ஜூன், 2020

வடதுருவ பிரதேசத்தில் ரஷிய டீசல் டேங் கசிவு .. அவசர நிலை பிரகடனம்

Janaki Karthigesan Balakrishnan : வடக்கில் அதிகுளிரான பிரதேசங்களில்
நிலத்தடிக்கீழ் நீர் உறைந்த நிலையிலேயே காணப்படும். இந்த ஐஸ் நிலையிலுள்ள நிலம் permafrost என்றழைக்கப்படும். தமிழில் நிரந்தர உறைவு எனக் கருதலாம். ஐஸ் கடினமானதென்பதாலேயே, உறைநிலையை அடைந்த ஏரிகள் மட்டப்படுத்தப்பட்டு குளிர்காலங்களில் வாகனப் போக்குவரத்திற்கு வீதிகள் அமைத்துப் பயன்படுத்தப்படுவதாக முன்பொரு பதிவில் தெரிவித்தேன். இந்தப் permafrost உம் அதிகனத்தைத் தாங்கக் கூடியதாகவே கருதப்படுகிறது.
வடக்கில் கட்டிடங்களும், வேறு கட்டமைப்புகளும் நிர்மாணிக்கப்படும் போது permafrost உம் foundation இன் ஒரு பகுதியாகக் கருதப்பட்டு கட்டியெழுப்பப் படுகின்றன. ஆனால் தற்போது climate change இன் தாக்கம் நிலத்தடிக்கீழ் உறைந்த நீரை சிறிது சிறிதாக உருக வைக்கிறது. இதனால் ஆரம்பத்தில் கட்டமைப்புகளுக்கென கணிக்கப்பட்ட foundation strength தக்க வைக்கப்படாமல் குறைந்து கொண்டு செல்கிறது. இதனால் சில கட்டிடங்கள், வீதிகள் பதிந்து கொண்டு போவதை அவதானிக்கலாம். இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாகும்.

இணைக்கப்பட்ட செய்தியில் வடக்கில் ரஷ்யாவின் சைபீரியாவில் எண்ணெய் தாங்கி (oil reservoir) ஒன்று permafrost இலும் தங்கி அமைக்கப்பட்டதாக இருக்கவேண்டும். Climate change இனால் permafrost தன்னிலையிலிருந்து பிறழ, எண்ணெய் தாங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தி 20,000 தொன் வரையிலான டீசல் ஆக்டிக் சமுத்திரத்தினுடனான ஆற்றினுள் சென்றடைந்துள்ளது. அதனால் ரஷ்யா வடக்கில் அவசரகால நிலைமையினை (state of emergency) அமுல்படுத்தியுள்ளது.
அவ்வளவு தொகையான டீசல் வடக்கில் எதற்கு எனப் பலரும் வினவலாம். வடக்கில் அனைத்து செயற்பாடுகளும் டீசல் எரிபொருளைத் தங்கியே நடைபெறுகின்றன. மின்சாரம் உற்பத்தி, வாகனங்களுக்கு எரிபொருள், வேறு இயந்திரங்கள் இயக்குவது என இதன் தேவை மிக அதிகம். அதற்காக மிகப் பெரிய டீசல் தாங்கிகளைக் கொண்ட கட்டமைப்புகள் ஒவ்வொரு சமூகமும் வாழுமிடங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த டீசல் தாங்கிகள் வருடத்தில் ஓரிரு தடவை மட்டுமே கப்பலில் கொண்டுவந்து இறக்கப்படும் டீசலினால் நிரப்பப்பட்டு பாவனைக்குட்படுத்தப்படு

https://www.democracynow.org/2020/6/5/headlines/climate_change_likely_triggered_largest_oil_spill_in_russias_modern_history?fbclid=IwAR36rjKgkAuyO4pLvWEzCt_mi8VwGVAWmlgH8ihWvZL3Dflua-2hdMkPTgw

கருத்துகள் இல்லை: