மறைந்த பத்ருசயிக் |
; இந்தியாவில் எதிர்கட்சிகளே அதிகம் உழைத்தார்கள். மக்களுக்காக தெருவில் நின்றார்கள். உதவினார்கள். போராடினார்கள். குரல் எழுப்பினார்கள். அதன் எதிரொலியாக அவர்களும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டார்கள். இந்தியாவில் இரண்டே இரண்டு கட்சிகளில் மட்டும் தான் கொரோனாவில் மக்களுக்காக நின்றதால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. அகமதாபாத் முனிசிபாலிட்டி எதிர்க்கட்சி தலைவர் காங்கிரசை சேர்ந்த பத்ருத்சயீக், தெற்கில் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் .
அரசியலில் கடமைவாதிகள், கருத்துவாதிகள், சுயநலவாதிகள் என்று மூன்று வகையினர் உண்டு. அதில் இவர்கள் இருவரும் மக்களுக்காக வாழ்வதை தம் கடமையாக நினைத்து இறங்கி வேலைசெய்தவர்கள். இந்த வைரஸ் தாக்கும் என்று தெரிந்தாலும் வந்தா பாத்துக்கலாம் இப்போ நம்ம வேலைய பார்ப்போம் என்று இறங்கியவர்கள். களப்போராளிகள். போராட்டத்தான் போராட்டத்தில் தான் இறக்கிறோம் என்ற பெருமை அவர்களுக்கு இருந்திருக்கும்.
சியாச்சின் மலை உச்சியில் போர் செய்து அங்கே டென்ட் போட்டு இருந்துவிடலாம். கொடியை நாட்டுவது எதற்காக என்றால் இந்த நிலம் எங்களுடையது என்பதை அறிவிப்பதற்கு மட்டுமல்ல அதற்காக போராடியவர்களின் தியாகத்தை சொல்வதற்குமே.
இந்த இருகட்சிகளை சேர்ந்த தொண்டர்களுக்கும் நன்றிகளும், ஆழ்ந்த இரங்கல்களும் உரித்தாகட்டும்.
தோழர் ஜெ.அன்பழகன் அவர்களின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், தொகுதி மக்களுக்கும் ஆறுதலை பகிர்கிறோம். அவரது உழைப்பும் தியாகமும் போற்றக்கூடியது.
களத்தில் நிற்கும் அனைத்து திமுக தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் கவனமுடன் இருங்கள் என்ற வேண்டுகோளையும் மக்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக