திங்கள், 4 மே, 2020

கோயம்பேடு மார்கெட் நாளைமுதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.. கொரோனா ethiroli

 corona virus - koyambedu market lockdown
 நக்கீரன் :  இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு பிறப்பித்து, சமூக இடைவெளியை முறையாக கடைபிடியுங்கள் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்திய போதிலும், 30% மக்கள் அதை அலட்சியம் செய்தது, தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்வதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகும்கூட சமூக இடைவெளியின்றி கோயம்பேடு மார்கெட்டில் தொடர்ந்து கூட்டம் அலைமோதியது. இதன் எதிரொலியாக சென்னை கோயம்பேடு மார்கெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு தொடர்ந்து கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோயம்பேடு மார்கெட் நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. மேலும் திருமழிசையில் வரும் 7ஆம் தேதி முதல் தற்காலிக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: