வியாழன், 7 மே, 2020

வைரஸை கங்கை குணப்படுத்த வாய்ப்பு இல்லை


கொரோனாவைக் குணப்படுத்த கங்கை நீரா? மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு! மின்னம்பலம் : கங்கை நீருக்கு கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதா என்று சோதிக்ககோரிய மத்திய அரசின் வேண்டுகோளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நிராகரித்துள்ளது.
இந்திய மருத்துவ கழகத்தை சேர்ந்த பெயர் கூற விரும்பாத அதிகாரி இதுகுறித்து தி பிரிண்ட் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “ஒரு உயிர்கொல்லி நோய் குறித்து சோதனை செய்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று கூறி அந்த வேண்டுகோள் மறுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளாஅதுல்யா கங்கா என்ற பெயர் கொண்ட அமைப்பு சாரா தொண்டு நிறுவனம் ஒன்று கங்கை நதியின் மருத்துவப் பண்புகளை ஆராயுமாறு ஜல்சக்தி அமைச்சகத்துக்கு ஏப்ரல் 3ஆம் தேதி கோரிக்கை அனுப்பியிருந்தது. பிரதமர் மோடியின் அலுவலகம் இரண்டுக்கும் இந்த கடிதத்தை தொண்டுநிறுவனம் அனுப்பியிருந்தது.இதை தொடர்ந்து ஜல்சக்தி அமைச்சகம் இந்திய மருத்துவ கழகத்துக்கு இந்த கோரிக்கையை அனுப்பியது.

கங்கை நீரில் நிஞ்ஜா வைரஸ் என்ற பாக்டீரியோபேஜ் உள்ளது எனவும், அதன் மூலம் கொரோனா வைரசை குணப்படுத்த முடியும், பாக்டீரியோபேஜ் என்பது மோசமான பாக்டீரியாக்களை உண்ணும் ஒரு வகை வைரஸ் எனவும் அந்த தொண்டு நிறுவனம் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் கொரோனா என்பது பாக்டீரியா அல்லது அது ஒரு வைரஸ் ஆகும்.
இதுகுறித்து கலந்தாய்வு ஒன்றை நடத்திய இந்திய மருத்துவ கவுன்சில் அந்த தொண்டு நிறுவனத்துக்கு, தற்போது பிளாஸ்மா தெரபி முறையை பயன்படுத்தி வருவதாகவும் திடீரென கொரோனா வைரஸை கங்கை நீரில் இருக்கும் வைரஸ் கொண்டு குணப்படுத்துவதாக கூறுவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் பதிலளித்துள்ளது.
-பவித்ரா குமரேசன்

கருத்துகள் இல்லை: