திங்கள், 4 மே, 2020

கொளத்தூர் மணியும் சுபவீயும் விடுத்திருக்கும் அறிக்கைகள் ... அறிவு நாணயமின்மை?

LRJagadesan: : கொளத்தூர் மணியும் சுபவீயும்
இன்று விடுத்திருக்கும்
அறிக்கைகள் அவர்கள் இருவரின் அறிவுநாணயமின்மைக்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு.
தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக திராவிட சார்பு இளம் தலைமுறைகள் மத்தியில் பிரபாகரனின் புனித பிம்பத்தை திட்டமிட்டு கட்டமைத்ததில் இந்த இருவரின் பங்கு பெரும்பங்கு. தாங்கள் தம் வாழ்நாளை செலவழித்து உருவாக்கிய அந்த பொருந்தா பிம்பம் கெடாமலிருக்க இன்றும் கூட இந்த இருவரும் கலைஞரை காவுகொடுக்க தயாராகவே இருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறார்கள். 
இருவருமே தம் கடந்தகால வரலாற்றுப்பிழையை ஏற்று திருந்த இன்றும் தயாரில்லை. மாறாக அதை சப்பைக்கட்டுகள் மூலம் சரிக்கட்ட நிகழ்காலத்திலும் நிலைதடுமாறிக்கொண்டே இருக்கிறார்கள். 
இதில் அதிர்ச்சியோ ஆயாசமோ இல்லை. இது குறித்து விரித்து எழுத புதிதாய் ஒன்றுமில்லை. அது இப்போது தேவையும் இல்லை. 
பிரபாகரனை பெரியாரோடு சமப்படுத்திய இந்த இருவரின் அறிவுநாணயமின்மையின் அரசியல் வரலாற்றுப்பிழையின் நீட்சியே இன்றைய இரு அறிக்கைகளும். Nothing more. Nothing less. Enough of pretence. Its time to accept the bitter truth and move on.
பிகு: தெளிவாக திரும்பவும் சொல்கிறேன். பெரியாரை பிரபாகரனோடு சமப்படுத்துவது என்பது ஒன்று மிக மோசமான அரசியல் அறியாமை அல்லது உச்சபட்ச அறிவுநாணயமற்ற செயல். இவர்கள் இருவரும் அரசியல் அறியாமையால் இதை செய்கிறார்கள் என்று அவர்களின் மோசமான எதிரிகள் கூட சொல்லமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை: