சனி, 9 மே, 2020

ஈழ விடுதலை சமாதிக்கும் முதல் கல் வைத்த எம்ஜியார்

வளன்பிச்சைவளன் : ஈழ விடுதலை நாயகன் கலைஞர் என வழலாறு சொல்லும் ஈழ
விடுதலைக்கு சமாதி கட்ட முதல் செங்கல் வைத்தது எம்ஜிஆர் என வரலாறு தூற்றும்
தமிழீழ விடுதலை வரலாற்றில் அறவழிப் போர் வரை மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் தனித்தனியே இயங்கி வர காலம் அவர்களை ஒன்றி ணைய வைத்தது. அவர் கள் இணைந்து ஈழத் தமிழர்கள் விடிய லுக்கு விடுதலையே ஒரே தீர்வு என முடி வெடுத்து அறவழி யில் ஜனநாயக ரீதியாக ஈழ தமிழ் மக்கள் உணர்வு களை உலகறியச் செய்ய தமிழீழ ஐய்க்கிய விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் ஒன்றிணைந்து தேர்தல் களத்தில் விடுதலையே தீர்வு என்ற முழக்கம் வைத்து இதை ஆதரித்து மக்கள் வாக்க ளிக்க வேண்டுகோள் விடுத்த னர் மக்கள் இக் கோரிக்கையை ஏற்று வாக்களிக்க ஈழத் தமிழ் பகுதிகளில் வென்று ஈழத் தமிழ் மக்கள் விடுதலை தான் தீர்வு என்பதை உறுதி செய்தனர் அமிர்தலிங்கம் எதிர் கட்சி தலைவர் ஆனார்.
1983 ல் டெல்லியில் நடை பெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள இலங்கை எதீர் கட்சி தலைவர், TULF ன் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டது ஒர நாட்டின் அதிபருக்கு இணையான வரவேற்பு அளிக்கப் பட்டது.
யாசீர் அரபாத்தும் விடுதலை இயக்கம் நடத்தும் போதே பாலஸ்தீன நாடு அங்கீகரிக்கப் பட்டது
அறவழிப் போராளிகள் ஈழத் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை உலகறியச் செய்த னர் அவர்களின் தலைவரான அமிர்தலிங்கம் டெல்லி வரவ ழைக்கப் பட்டு கௌரவப் படுத் தப் பட்டாலும் தமிழீழத்தை அங்கரிக்க வில்லை இந்தியா

1983 யூலைக் கலவரம் இனரீதியாக தமிழர்கள் கொல்லப் படுகிறார்கள் என்றும் தமிழ் மக்கள் தனி நாடு கேட் பதையும் பௌத்த சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்களை இனப் படுகொலை செய்கின் றனர் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்ல அறவழிப் போராளிகள் ஒருங்கிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி அமைத்து வென்றதால் தானே
அறவழிப் போராளிகளின் இந்த ஒருங்கிணைந்த சாதனை யால் ஈழத் தமிழ் மக்கள் உலகெங்கும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்தததற்கு அன்று அற வழிப் போராளிகள் ஒன்று பட்டு நின்றதே முதன்மைக் காரணம்
ஈழவரலாற்றில் ஆயுதக் குழுக்கள் தலையெடுப்பு. இவர்களில் ஒருவரான புலிகள் இயக்கம் அறவழிப் போராளி களின் ஒன்றிணைந்த போராட்ட வடிவத்தை சிதைத்த னர் 1989க்குள் அனைத்து அறவழி, ஆயுதவழி போராளி தலைவர் கள் அழித்தொழிக்க ப் பட்டனர் ஆயுத குழு உறுப்பினர்களும் அழித்தொழிக்கப் பட்டனர். தாங்களே ஏகப் பிரதிநிதி என வலம் வந்த புலிகள் அறவழிப் போராளிகளின் மூலம் அடைந்த அரசியல் தஞ்சம் புகுந்த நாடு களில் புலிகளின் அலுவலகம் திறந்தனர் புலிகள் பரந்த அளவில் அங்கு நிதி திரட்டினர் இதற்கெல்லாம் அடிப் படை அற வழிப் போராளிகளின் ஒற்று மையின் பால் வந்ததே என்ப தை உணர மறுத்தனர் உலக நாடுகள் இவர்கள் விடுதலை வேண்டி போராடுவதற்கு நிதி திரட்டியதை தடுக்க வில்லை இது அறவழிப் போராளிகள் ஈழ விடுதலைக்கு ஆற்றிய மாபெரும் சாதனைப் பலனை புலிகள் அனுபவித்தனர்
புலிகள், உலகின் கவனத்தை ஈர்த்து தமிழீழத்தை உலக நாடுகள் அங்கீக ரிக்க 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் அலுவலகம் திறந் தும் அந்த நாடுகளில் தங்கள் விடுதலைப் போராடத்தை அங்கீகரிக்க முயற்சிகள் செய்து அங்கீகாரம் பெறுவதற்கு ப் பதிலாக, பணம் வசூல் செய்யும் மையங்களாக கருதி செயல் பட்டனர் அங்கும் கொலைகள் மற்றும் கடத்தல் என தங்கள் கைவரிசை காட்டினர்.
1989 - 2009 ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஈழத்தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என சொல்லிய புலிகள் உலகின் ஒரே ஒரு நாட்டின் அங்கீகாரம் பெற முடியாமல் போனது ஏன்?
உலக நாடுகள் அங்கீகரிப்பதற்கு மாறாக பயங் கரவாத இயக்கம் தனிநபர் கொலைகள் பிற நாட்டு அரசி யல் தலைவர்கள் கொலை எனக் காரணம் காட்டி தடை செய்தது தானே நடந்தது.
இது தான் புலிகள் விடுதலைப் போராட்ட த்தை அடுத்த கட்டம் நோக்கி நகர்த் திய ராஜதந்திர செயல்பாடா?
ஒரு நாட்டின் விடுதலை க்கு உலக நாடுகளின் அங்கீகாரம் முக்கியமல்லவா? அதற்கான வாய்ப்புகளை 150 நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்து அங்கு அலுவலகம் வைத்தது வரை அறப்போரா ளிகளின் பங்களிப்பு அதைத் தாண்டி புலிகள் உலக அரங்கில் சாதித்தது என்ன?
பயங்கரவாதிகள் பிற நாட்டு தலைவர்களை கொல்பவர்கள் கடத்தல் காரர்கள் என்பது மட்டும் தானே
அதை விடக் கொடுமை இங்கே பலர் ராஜீவ் கொலை ஒரு பழிவாங்கல் நிகழ்வு என அதை புனிதச் செயலாக கட்டமைத்து இன்றளவும் பேசுவது ஆகக் கொடுமை இது தானே இன்று புலிகள் பயங்கரவாதிகள் என அறிவிக்க காரணம். ஏற்கனவே 1958 ல் இருந்து கலவரங்களில் உயிர் நீத்த பல்லாயிரம் தமிழ் மக்களின் குருதியில் உருவானதே  விடுதலை முழக்கம்
இப்படி உயிர் தியாகம் செய்தவர்களை மதித்து ஒருங்கிணைந்து போராடி வெற்றி நோக்கி நடை போட்ட வர்கள் அறப் போராளிகள் அவர்களின் இட்ட அடித்தளம் மட்டும் இன்றளவும் மீதமாய் உலகின் பல நாடுகளில் புலம் பெயர்ந்து ஈழ தமிழ் மக்கள் வாழ முடிகிறது
ஒற்றுமை யின் வலிமை இன்றும் ஈழ விடுதலை வரலாற் றில் சாட்சி சொல்கிறதே.
இந்த வலிமையை உணர்ந்த கலைஞர் அனைத்து போராளி குழுக்களையும் ஒன்றிணைக்க முற்பட்டார் ஒற்றுமையே மாபெரும் வலிமை என்று ஈழ விடுதலை அடைய இது அவசியம் என இதய சுத்தியோடு செயல் பட்டார் ஏனெனில் உலக அரங்கில் தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்ட மாமனிதனின் அர்த்த முள்ள செயல்பாடு.
ஈழ விடுதலைக்கு சமாதி கட்டும் நோக்கோடு முதல் செங்கல் எடுத்து வைத்தது எம் ஜி ஆர் ஈழக் குழுக்கள் ஒன்றிணைய க் கூடாது எனும் நோக்கில் புலிகளிடம் பணத்தைக் காட்டி ஈழக் குழுக்கள் ஒன்றிணைய கூடாது என செயல்பட்டவர் எம் ஜி ஆர். புலிகள் எம் ஜி ஆர் காட்டிய பணத் தசையில் மயங்கினார் ஈழ விடுதலைக்கு சமாதி கட்ட முதல் செங்கல் வைத்த எம் ஜி ஆரை தொழுது நின்றனர்.
இந்த ஈழ விடுதலையை அழிக்க முதல் செங்கல் எடுத்து வைத்த எம் ஜி ஆரை வள்ளல் ஈழ விடுதலை ஆதரவாளர் எனப் போற்றுவதும்
இந்த சூழ்ச்சியை உணராமல் ஈழ காவல் தெய்வமாக சித்தரிக்கும் போக்கில் பல பெரியாரிய இயக்கங்கள் உள்ளது ம் ஆக கொடுமை அதனினும் கொடுமை புலிகளின் மாற்று இயக்க அழிப்பு நடவடிக்கைக்கு புனித சாயம் பூசுவது.
பாசிச புலிகள் தங்கள் பாசிச செயல் பாட்டை நியாயப் படுத்த மனித நேய ஜனநாயகவாதி பெரியாரின் பெயரை சொல்பர்கள் என்ற விசித்திர மனிதர்களை வைத்து இருந்தது தான்
ஈழ விடுதலை வரலாறு சொல்லும் உண்மை ஒன்று பட்ட அறவழிப் போராளிகளின் ஒற்றுமை இன்றளவும் ஈழ இன அழிப்பை உலகிற்கு உணர்த்தி வருகிறது
ஒற்றுமையை சிதைத்து அனைவரையும் அழித்து தன்னை மட்டும் அல்ல ஈழ மக்கள் விடுதலையையும் அழிவுக்கு அழைத்து செல்ல முதல் செங்கல் வைத்த எம் ஜி ஆர் மற்றும் புலிகளின் அழித்தொழிப்பு நடவடிக்கையை கைதட்டி ஆதரித்த அனைவரு மே இதற்கு பொறுப்பானவர் களே
ஈழ விடுதலைக்கு ஆக்க பூர்வமாக வழி காட்டியது கலைஞரே.
வரலாற்றின் பக்கங்கள் என்றும் கலைஞரை கொண்டாடும்.

கருத்துகள் இல்லை: