செவ்வாய், 5 மே, 2020

சென்னையில் 4000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயாராக உள்ளன: முதல்வர் அறிவிப்பு


மாலைமலர் : சென்னையில் 4 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயாராக உள்ளன. தினந்தோறும் 12 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன எனத் முதல்வர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக தமிழக மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிகமான மக்கள் நிறைந்த நகரம் சென்னை என்பதால் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. பொதுக்கழிப்பிடங்களை அதிகமாக பயன்படுத்துவதாலும் தொற்று ஏற்படுகிறது. 4000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயாராக உள்ளது. மண்டலம் வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் வழிகாட்டுதலை சிறப்பாக கையாள்வதில் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது.

தமிழகத்தின் தடுப்பு நடவடிக்கையை மத்திய குழு பாராட்டியுள்ளது. மக்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றே பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குணமடைந்தவர்களன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

50 பரிசோதனை மையங்கள் மூலம் தினந்தோறும் 12 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சில தொழில்களுக்கு தளர்வு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், கடைகளில் பொருட்கள் வாங்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஜூன் மாதம் வரை ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்

கருத்துகள் இல்லை: