ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

வாருங்கள் அறிவால் இணைவோம் .பெரியாராய் வாழுவோம் . ஷாலின் மரிய லாரன்ஸ்!


கடந்த வாரம் நிகழ்ச்சியின் போதே அறிவிக்க வேண்டியது .ஆனால் என்
தோழன் பெரியாரின் பிறந்தநாள் அன்று அறிவிக்க வேண்டுமென்பது என் அவா .
Old madras writers company என்கிற அமைப்பை தலித் இலக்கியம் மற்றும் தலித் எழுத்தாளர்களை popular medium (பொது ஊடகங்களில் ) முன்னிறுத்த உருவாக்கினேன் .
அதன் தொடர்ச்சியாக இந்த அமைப்பை ஒரு சமூக நீதி இயக்கமாக மாற்றியமைக்கிறேன் என்பதை இங்கே அறிவிப்பதில் மகிழ்ச்சி .
கடந்த நான்கு வருடங்களாக தமிழகம் முழுவதும் நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் படி பெரும்பாலான இளைஞர்களுக்கு சமூக நீதி மற்றும் சமநீதி பற்றிய தெளிவு அதிகம் இல்லாதது தெரியவந்தது . இதன் நிலையில் அதிக இளைஞர்கள் வலது சாரி இயக்கங்களின் பின்னாலும் ,தமிழ் தேசியம் என்கிற பெயரில் இயங்கிவரும் மக்கள் விரோத பாசிச அமைப்புகளின் பின்னும் கவர்த்திழுக்கப்பட்டு அதிக அளவில் திசை மாறி சென்று கொண்டிருக்கின்றனர் . தங்கள் சக மனிதர்கள் எதிர்கொள்ளும் சமூக ,உளவியல் பிரச்சனைகளை இவர்கள் கண்டும் காணாமல் ,கேட்டும் கேட்காமல் இருக்கின்ற நிலை தொடருகிறது . இந்த போக்கினால் நாம் முத்துகிருஷ்ணன்களையும் ,அனிதாக்களையும் நம் கண்முன்னே இழந்து வருகிறோம் .

இந்த நூற்றாண்டிலே பெரியாரின் தேவை தமிழகத்தில் அதிகமாயிருந்தது . பகுத்தறிவு ,சமூகநீதி போன்றவை சமூக வலைத்தளங்களை தாண்டி களத்தில் அதிகம் சென்று சேர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது . அறிவு பகிர்வு படித்தவர் ,படிக்காதவர் என்கிற பாரபட்சமில்லாமல் தேவைப்படுகிறது .
இவை எல்லாவற்றையும் முன்னிறுத்தி old madras writers company ஒரு சிறப்பான இயக்கமாக செயல்படும் .
பல்வேறு அமைப்புகளோடு சேர்ந்தும் ,தனியாகவும் சமூகநீதி பாசறைகளை தமிழ்நாடு முழுவதும் நடத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாக இருக்கும் .
பெரியாரை பற்றி பேசுவது ,எழுதுவது ஒரு பக்கம் இருந்தாலும் ,இந்த நொடி நாம் அனைவரும் பெரியாராக மாற அழைக்கிறது. .
ஏற்கனவே என்னோடு சேர்ந்து களப்பணி ஆற்ற விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் இதில் உங்களை இணைத்து கொள்ளலாம் .
வாருங்கள் அறிவால் இணைவோம் .பெரியாராய் வாழுவோம் .
ஷாலின் மரிய லாரன்ஸ்

கருத்துகள் இல்லை: