வெள்ளி, 22 செப்டம்பர், 2017

சேலம் உருக்காலையை விற்க முடிவு .. ஜிண்டால் உட்பட சர்வதேச டெண்டர் ...


jindal Stainless may be interested in bidding for Steel Authority of India Ltd (SAIL)’s Salem Steel Plant, according to sources.Salem Steel Plant in Tamil Nadu and the Visesvaraya Iron and Steel Plant in Karnataka, both owned by SAIL, are among the firms identified by Narendra Modi government for divestment.
சூரமங்கலம்: சேலம், உருக்காலையை தனியாருக்கு விற்க, சர்வதேச டெண்டர் வெளியிட முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
சேலம், உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியில், செயில் நிறுவனம் மற்றும் மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள், சர்வதேச டெண்டர் வெளியிடலாம் என தெரிகிறது. இது குறித்து, சேலம் உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது: சேலம் உருக்காலையில் மாதம், 12 ஆயிரம் டன் இரும்பு தகடு உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது.
தற்போது நஷ்டத்தை கணக்கு காண்பிக்க, மாதம் பத்து நாட்களுக்கு தான் ஆலை இயக்கப்படுவதால், 6,000 டன் என்ற அளவில்தான் இருக்கிறது. 12 ஆயிரம் டன் உற்பத்தி செய்தால், ஆலை நஷ்டத்தில் இயங்க வாய்ப்பே இல்லை. இந்நிலையில், ஆலையை தனியாருக்கு விற்கும் இறுதி கட்ட முயற்சியாக, சர்வதேச டெண்டர் வெளியிட முடிவு செய்துள்ளனர். டெண்டர் வெளியிடும் அன்று, ஊழியர்கள் மாபெரும் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். தினமலர்

கருத்துகள் இல்லை: