புதன், 20 செப்டம்பர், 2017

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது

டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று காலை நடந்தது. இந்த வழக்கில் ஆளுநர் சார்பில் ராகேஷ் திவேதி ஆஜரானார். முதலமைச்சர் சார்பில் வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜரானார். சபாநாயகர் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜரானார். 18 எம்எல்ஏக்கள் சார்பில் சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே ஆஜரானார்கள். தகுதி நீக்கம் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என திமுக தரப்பு வாதாடியது. வழக்கில் தீர்ப்பு வரும் வரை இடைத்தேர்தல் நடத்த அனுமதிக்கக் கூடாது என தினகரன் தரப்பில் வாதாடப்பட்டது. இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தடை நீடிப்பதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நக்கீரன்

கருத்துகள் இல்லை: