புதன், 20 செப்டம்பர், 2017

ஆ_ராசா_2ஜி_வழக்கில்_இருந்து_விடுதலையாவார்.. Judgment d on 25 October.

கட்டணக் கொள்ளையடிக்கும் பழைய தொலைதொடர்பு நிறுவனங்களின் இந்த கூட்டுச் சதியை முறியடிக்கவே ஏல முறையை தவிர்த்தார் ..அதனால் பாதிப்படைந்தவர்களின் சதியே இந்த வழக்கு
Adv Manoj Liyonzon :ஆ_ராசா_2ஜி_வழக்கில்_இருந்து_விடுதலையாவார்! இதை நான் சொல்வதால் நீங்கள் என்னை தூற்றுவீர்கள். ஆனாலும் ஒரு வழக்கறிஞராகவும் அதற்குமுன்பு முதலீட்டுச் சந்தையில் நான் வேலை பார்த்ததில் கிடைத்த அனுபவத்தையும் பொருளாதார அறிவையும் வைத்து இதை என்னால் உறுதியாக சொல்ல முடிகிறது. மிக நிச்சயமாக ஆ.ராசா 2ஜி வழக்கில் இருந்து விடுதலையாவார்.
TRAI- இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தொலைபேசி கட்டணங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டப்படி இல்லை. ஆனால் தகுதியுள்ள புதிய நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கி சந்தையில் போட்டியை உருவாக்கி தொலைபேசி கட்டணங்கள் குறைய வழிவகை செய்ய முடியும். அதன்மூலம் விளிம்பு நிலை மனிதர்களும் குறைந்த கட்டணத்தில் தொலைதொடர்பு சேவையைப் பயன்படுத்த முடியும்.
இதை ஆ.ராசா நடைமுறைபடுத்தினார்.
புதிய நிறுவனங்களும் உரிமம் பெற ஆவன செய்தார்.
ஒவ்வொரு முறையும் நியாயமான விலையில் அலைகற்றை ஏலம் அறிவித்த போது பழைய நிறுவனங்கள் தங்களுக்குள்ளே முன்கூட்டியே முடிவு செய்துகொண்டு யாரும் விண்ணப்பிக்காமல் பார்த்துக் கொண்டன. இதனால் மறுமுறை மிகக் குறைந்த விலையில் ஏலம் அறிவிக்கச் செய்து ஒன்றுக்கொன்று போட்டி போடாமல் மிகக்குறைந்த விலையில் ஏலம் எடுத்து அதிக கட்டணத்தில் சேவைகளை வழங்கி கொள்ளை லாபம் பார்த்தன.
கட்டணக் கொள்ளையடிக்கும் பழைய தொலைதொடர்பு நிறுவனங்களின் இந்த கூட்டுச் சதியை முறியடிக்கவே ஏல முறையை தவிர்த்துவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 1999ல் அமைச்சரவையால் வகுக்கப்பட்டு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 2003ல் அமுலுக்கு வந்த தேசிய தொலைத் தொடர்பு கொள்கை NATIONAL TELECOM POLICY வகுத்த சட்டப்பூர்வமான “முதலில் வருவோருக்கு முன்னுரிமை” திட்டத்தை அமல்படுத்தி சட்டப்படி UNIFIED ACCESS LICENSE GUIDELINES based ASSESMENT COMMITTEEயால் மீளாய்வு செய்யப்பட்ட தகுதியுள்ள புதிய நிறுவனங்களும் உரிமம் பெற ஆவன செய்தார் ஆ.ராசா.

உரிமம் பெற்ற புதிய நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு மிகக்குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்கின. சந்தை போட்டியை சமாளிக்க பழைய நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைதொடர்பு சேவையை வழங்கின. எனவே அதுவரையில் முப்பது கோடியாக இருந்த தொலைத் தொடர்பு இணைப்பு 100 கோடியாக உயர்ந்தது. அதாவது 3.3 மடங்கு அதிகரித்தது.
இதனால் ₹.1.ல் இருந்த தொலைபேசி கட்டணம் 0.30 பைசாவாக குறைந்தது. அதாவது 70℅ தொலைபேசி கட்டணம் குறைக்கப்பட்டது. கிராமத்து விளிம்பு நிலை மனிதர்களும் தொலைதொடர்பு சேவையைப் பயன்படுத்த தொடங்கினர். இதனால் கொள்ளை லாபம் சுருட்டிக்கொண்டிருந்த பழைய நிறுவனங்களின் 70℅ லாபம் பறிபோனது. ஆ.ராசாவின் நடவடிக்கை தொடர்ந்திருந்தால் 2ஜி அலைகற்றை இந்தியா முழுமைக்கும் இலவசமாகியிருக்கும்
அதுவரையில் கொள்ளை லாபம் பார்த்த நிறுவனங்கள் 1).சந்தையில் போட்டியை உருவாக்கிய 2).கட்டணங்கள் குறைய 3).லாபம் பறிபோக காரணமான திராவிடத் தமிழன் ஆ.ராசாவின் இந்த பொதுவுடைமை நடவடிக்கையை ரசிக்கவில்லை.
எனவே கனக்கு தனிக்கைதுறை தலைமை கனக்காளர் வினோத்ராய் மூலம் 176000 கோடி வந்திருக்கலாம் என்று அனுமானத்தின் மூலம் ஒரு அறிக்கையை உருவாக்கி வெளியிட்டு ஆ.ராசா ஊழல்வாதியாக சித்தரிக்கப்பட்டார்
எத்தைனையோ மத்திய அமைச்சர்கள் மிகப்பெரிய ஊழல் புரிந்திருக்க தொலைத் தொடர்புத் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை செய்த ஆ.ராசா மீது மட்டும் ஏன் இவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது? காரணம் என்ன?
காரணம் ஆ.ராசா ஒரு தலித், ஒரு திராவிட தமிழன். பார்பனியத்தை மேடைதோறும் கடுமையாக சாடிய பகுத்தறிவுவாதி. அம்பேத்கரிய மார்க்ஸிய பெரியாரிய வழிவந்தவர். பார்ப்பனிய பெரு நிருவனங்களுக்கான பணம் ஈட்டும் கருவியாக இருந்த தொலைத்தொடர்பு சேவையை மக்களுக்கானதாக மாற்றினார். பெரு நிருவனங்கள் கொள்ளை அடிப்பதை தடுத்தார்.
(குறிப்பு:- அப்போது என்னுடைய சென்னை வட்ட 8428523929 வீடியோக்கான் எண்ணிலிருந்த சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் அழைக்க ஒரு நிமிடத்திற்கு 90 காசுகள் தான் கட்டணம்)
இந்த அடிப்படை அனைத்தும் தெரிந்திருந்தும், சிஎஜி வினோத் ராய், 1,76,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அனுமானத்தின் அடிப்படையிலான ஜோடிக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு அறிக்கையை ஏன் நிறுவினார்!?. பிறகு வந்த பார்ப்பனிய இந்துத்வ பாஜக ஆட்சிக்கு வினோத் ராய் ஆதரவளித்ததன் பின்னணி அரசியல் என்ன!?
ஆனால் 1,76,000 கோடி அல்ல, அதிகபட்சமாக 33,000 கோடி வரை தான் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சிபிஐ அறிக்கை சமர்பித்திருக்கிறது
நீதிமன்றமோ, இவ்விரு அமைப்புகள் சமர்பித்த கனக்கையும் ஏற்றுக்கொள்ளவில்லை, பதிவு செய்யவுமில்லை.
சிஎஜியின் இந்த பார்ப்பனிய முதலாளித்துவ ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், சிஎஜி ஓர் தற்குறி அமைப்பு என்று ஆ.ராசா நீதிமன்றத்தில் தனது வாதத்தை பதிவு செய்திருக்கிறார்.
ஆ.ராசா விடுதலை ஆவார் என்பது திண்ணம் காரணம் அவர் சட்டப்படி தான் செயல்பட்டார்.
ஒருவேளை தண்டிக்கப்பட்டால் அது பார்ப்பனிய முதலாளித்துவ அதிகார வாதமான "தேசத்தின் கூட்டு மனசாட்சிப்படி" வேண்டுமானால் இருக்கலாமே தவிர, தகுந்த சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு அல்ல.
என்னைப் பொறுத்தவரை ஆ.ராசாவின் விடுதலை என்பது பார்ப்பனிய முதலாளித்துவ அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சிக்கு எதிரான விடுதலை என்பேன்

கருத்துகள் இல்லை: