வெள்ளி, 22 செப்டம்பர், 2017

கமலஹாசன் பணமதிப்பிழப்பை ஆதரிக்கிறார் ... பச்சையாக மோடி ஆள் என்று சொல்ல முடியுமா?

பணமதிப்பிழப்பு முற்று முழுதாக தோல்வி அடைந்ததாக தெரியும்வரை அதை ஆதரிப்பேன் ... கமலஹாசனின் இந்த கருத்து  இவர் யாருக்கு வேலை செய்கிறார் என்பதை கொஞ்சம் தெளிவாக்குகிறது. மாநில ஊழலை எதிர்ப்பேன் ஆனால் மத்திய ஊழலை ஆதரிப்பேன்?  
Mp Saam : மிஸ்டர் கமலிடம்,செத்து செத்து காட்டினால் தான் பிணம் என ஏற்றுக் கொள்வாராம்.பண ஒழிப்பு நடவடிக்கையால் இறந்த 250+ பேரும் எழுந்து வந்து மறுபடியும் அவர் முன்னால் செத்து காட்ட வேண்டிய பொறுப்பு உள்ளது,சீக்கரம் வாங்கப்பா,பிக் பாஸ்க்கு கோவம் வந்திரும். பண ஒழிப்பு நடவடிக்கையால் தொடர்ந்து மூன்று காலாண்டுகள் பொருளாதாராம் நாசம் ஆனது பற்றி உலகத்துக்கே புரியும்,இவருக்கும் புரியாது,தூங்கற மாதிரி நடிக்கும் கலையை உலக நாயகனுக்கு ஊர் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? கலைத்திருமகன். பல தரப்பும் எளிதில் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று. இன்றைக்கு,இவரின் எஜமானரே பொருளாதார ஊக்குவிப்பு பற்றி ஆய்வு நடத்துவது தனிக்கதை.சாருக்கு அதைப்பற்றி பேச நேரம் இருக்காது,அவதார புருசர் அல்லவா? அய்யா ஆண்டவரே ,உங்க பொங்கல ஏதாவது முட்டுச்சந்துல வைப்பது நலம்,பாவம் விட்டுவிடுங்கள்,ஏதோ பிழைத்து போகட்டும் அகமறிய மானுடங்கள்.இங்கு பிணக்குவியல் வேண்டாம்.

கருத்துகள் இல்லை: