ஞாயிறு, 21 மே, 2017

டொனல்ட் ட்ரம்ப் சவுதி வருகை! ரஷ்யாவை எதிர்க்க முடியவில்லை, ஈரானை ம்ஹூம் , சிரியா ம்ஹூம் வடகொரியா அய்யோ அய்யோ..

stanley.rajan. உலகிலே இப்பொழுது பரிதாபமான நபர் டிரம்ப், அவர் நினைத்தபடி ஒன்றுமே நடக்கவில்லை
வடகொரியாவினை தாக்க அமெரிக்காவால் முடியவில்லை, பலவகை சிக்கல்கள், அடித்துவிடலாம் ஆனால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கலாம் என்பதால் எல்லோருக்கும் தயக்கம்
வடகொரியாவினை பற்றி அமெரிக்காவிற்கு கிடைத்த அறிக்கைகள் அப்படி என்கின்றார்கள், யுத்தம் தொடங்கினால் அமெரிக்கா பெரும் விளைவினை சந்திக்கலாம் எனும் எச்சரிக்கை அதில் இருந்தது..
அமெரிக்கா பின்வாங்கியது பெரும் அவமானம்தான், என்ன செய்ய? சொல்லமுடியாத அவமானம் அது. டிரம்ப் கையினை பிசைந்து நிற்கும் நேரம்
சரி கெத்தாக வெளிநாடு செல்லலாம் என்றால் பிரிட்டன் வரவேண்டாம் என்றது, பல நாடுகள் அழைக்கவே இல்லை என்ன செய்யலாம் என யோசித்தார்
அவர்களின அடிமை நாடுகளில் ஒன்றான சவுதி அழைத்திருக்கின்றது,
அல்லது அப்படி சொல்ல நிர்பந்தபட்டிருக்கின்றது, உடனே வந்துவிட்டார் டிரம்ப்
சும்மா வரவில்லை, இரு நாட்களுக்கு முன்பு ஏமன் தீவிரவாதிகள் சக்திவாய்ந்த ஏவுகனையினை சவுதி மீது விசியிருக்கின்றார்கள், உண்மையில் அது அதிர்ச்சி ரகம்
விடுமா அமெரிக்கா? இனி ஏவுகனை பாதுகாப்பு சிஸ்டம் தருகின்றோம் என பெரும் பணத்தை ஆட்டையினை போடும், அதன் தொழில் அப்படி
அதனால் சவுதி சென்ற டிரம்பிற்கு பலத்த வரவேற்பு அவரும் முன்பு கொடநாட்டில் ஜெயா பழங்குடியினருடன் ஆடியது போல, கவுண்டமணி ஸ்டார்ட் மியூசிக் என சொல்லி அடியது போல சவுதியில் ஆடிகொண்டிருக்கின்றார்
சவுதியில் இஸ்லாமிய தலைவர்களுடன் பேசபோகின்றாராம் , 7 இஸ்லாமிய நாடுகளுக்கான தடை, அமெரிக்காவில் இஸ்லாமியர் பற்றி அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாவற்றிற்கும் மனிதர் இறங்கி வரும் நேரம்
அதாவது தான் இஸ்லாமியருக்கு எதிரி இல்லை என்பது போல இளித்துகொண்டிருக்கின்றார்
அமெரிக்க அதிபரின் கவுரவத்திற்கு இவை எல்லாம் சரி இல்லைதான், டிரம்ப் குழப்பத்தின் உச்சியில் இருக்கின்றார்
இனி இஸ்லாம் பக்கம் பேசினால் யூதர்கள் விடுவார்களா? அதனால் ஜெருசலேமிற்கும் ஒரு விசிட்டாம், ஆனால் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றுவது பற்றி பேசுவாரா? என்பது பற்றி தெரியவில்லை
இஸ்லாம், யூதம் என சந்தித்தால் கிறிஸ்தவர்கள் கோபம் வராதா? அதனால் போப்பாண்டவரையும் சந்திக்கின்றாராம்
எப்படி ஆகிவிட்டது டிரம்ப் நிலை
ரஷ்யாவினை எதிர்க்க முடியவில்லை, ஈரானை நெருங்கமுடியவில்லை, சிரியாவிலும் வெற்றி இல்லை, வடகொரியாவிடமும் பின்வாங்கியாயிற்று
இப்பொழுது மத தலைவர்களை சந்தித்து ஆன்மீகவாதியாய் அலைகின்றார்
விரைவில் இமயமலையில் டிரம்பும், ரஜினியும் சந்திக்கும் காலம் தொலைவில் இல்லை போலிருக்கின்றது, இருவருக்கும் நேரம் சரியில்லை

கருத்துகள் இல்லை: