ஞாயிறு, 19 ஜூன், 2016

500 விற்பனை குறைவான இடங்களில் டாஸ்மாக் மூடல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள 14 டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலான கடைகள் விற்பனை குறைவான கடைகளாக உள்ளது. பொதுமக்கள் போராட்டம் நடத்திய கடைகளை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.>அதிமுகவின் புதிய அரசு பொறுப்பேற்றதும் முதல் கட்டமாக 500 கடைகள் மூடப்படுவதாகவும், திறந்திருக்கும் நேரத்தை காலை 10 மணியிலிருந்து 12-ஆகக் குறைப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனைத் தொடந்து மூடப்படும் 500 கடைகளுக்கான பட்டியில் சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மூடப்படும் 14 கடைகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.>புதுக்கோட்டை சாந்தநாதபுரம், திலகர் திடல், திருவப்பூர், சந்தைப்பேட்டை, பொன்னமராவதி நகர்பகுதி, கீரனூர் புலியூர் ரோடு, குறும்பூர், மேட்டுப்பட்டி, விராலிமலை நகர்பகுதி, வல்லவாரி, முள்ளங்குறிச்சி, மூக்கம்பட்டி, ராஜாலிப்பட்டி, காரையூர் ஆகிய கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருவப்பூர், காரையூர், மேட்டுப்பட்டி ஆகிய கடைகள் மட்டுமே தங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று அப்பகுதி மக்களால் போராட்டம் நடத்தப்பட்ட கடைகளாகும். எஞ்சிய கடைகள் வருமானம் குறைவு உள்ளிட்ட காரணங் களாலேயே மூடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.>ஊர் பொதுமக்கள் மற்றும் வாலிபர், மாதர் சங்கங்கள் பெருந்திரளாகத் திரண்டு போராட்டம் நடத்திய கடைகளான புதுக்கோட்டை பிருந்தாவனம் கடை, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் உள்ள கடை, மேட்டுப்பட்டி கடைவீதியில் உள்ள கடை, கந்தர்வகோட்டை ஒன்றியம் தச்சங்குறிச்சி, அறந்தாங்கி ஒன்றியம் மரமடக்கி, திருவரங்குளம், அரையப்பட்டி, பொன்னமராவதி ஒன்றியம் கொன்னையூர் உள்ளிட்ட கடைகள் மூடப்படலாம் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். இந்தக் கடைகள் மூடப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.">எனவே, தமிழக அரசு மறு பரிசீலனை செய்து பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில் உள்ள கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தெரிவித்துள்ளார்.  நக்கீரன்.in

கருத்துகள் இல்லை: