சனி, 30 ஜனவரி, 2016

சட்டசபை தேர்தல் முடிவு கருத்துக்கணிப்புகள் சரியா? உளவுத்துறை போலீசார் சர்வே..

கம்பம்: 'அவசர அசைன்மென்ட்' என்ற பெயரில் தமிழக அரசு உளவுத்துறை போலீசிற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்புக்கள் சரியா அல்லது திட்டமிட்டு தயாரிக்கப்பட்டதா என்பதை கண்டறிய மக்களிடம் 'சர்வே' செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. கூட்டணி வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.  மழை ஜெயலலிதாவின் ஆணவ போக்கையும் மெத்தனபோக்கையும் மக்கள் மீது அக்கறையின்மையும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. தவிர நிர்வாகத்தின் சீர்கேடும் திறமையின்மையும் வெளிப்பட்டு விட்டது . மழை ஒரு துறை சார்ந்ததாக இருந்த போதிலும் ஜெயலலிதாவின் நிர்வாக திறமையின்மையும் சீர்கேடும் இப்படி தான் மற்ற துறைகளிலும் இருக்கிறது என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் . கல்வி துறையின் சீர்கேடு வெளியே வர ஆரம்பித்து விட்டது .ஆக பொய் சொல்பவருக்கு ஆட்சி நிலைக்காது என்று புரியும் நாள் வந்துவிட்டது. ஜெயலலிதாவிற்கு பயம் வந்துவிட்டது.
கட்சிகளின் சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. இத்தேர்தலில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் போன்ற விபரங்களை உள்ளடக்கி கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது . இவை தி.மு.க.,வை குஷிப்படுத்தியுள்ளன. மாறாக
ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வை யோசிக்க வைத்துள்ளது.

அவசர 'அசைன்மென்ட்':
கருத்துக் கணிப்புக்கள் உண்மையில்நடத்தப்பட்டதா அல்லது சிலரால் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டதா என்றும், உண்மை நிலவரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளவும் ஆளும் கட்சி விரும்பியது. அதனடிப்படையில் இதுகுறித்து விசாரித்து அறிக்கையளிக்க உளவுத்துறை போலீசாருக்கு'அவசர அசைன்மென்ட் 'உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர்கள் உசுப்பி விடப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் :
சட்டசபை தொகுதிவாரியாக கடந்த தேர்தலில் அரசியல் கட்சி பெற்ற வாக்குகள், எந்த கட்சிவெற்றி பெற்றது, தோல்வியுற்ற கட்சி, பிற கட்சிகள்வாங்கிய வாக்குகள், தற்போது தொகுதியில் நிலவும் பிரச்னை, தீர்க்கப்படாத கோரிக்கை, ஆளும் கட்சியின் மீது அதிருப்தி உள்ளதா, இலவச மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு, திருமண உதவிதிட்டம், லேப்டாப் வழங்கியது போன்றவை எந்த அளவிற்கு மக்களை கவர்ந்துள்ளது போன்ற விபரங்கள்
Advertisement
சேகரிக்கப்படுகின்றன.

மேலும் ஜாதிவாரியாக வாக்குகள், யாருக்கு சாதகமான நிலை, யார் போட்டியிட்டால் வெற்றி பெறலாம், தற்போதுள்ள எம்.எல்.ஏ., வின் செயல்பாடுகள் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றை மாவட்டவாரியாக ஒருங்கிணைத்து, இறுதியில் யாருக்கு சாதகம் என்ற தகவலும், வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகள் தொடர்பான உளவுத்துறையின் நிலைப்பாடும் அதில் தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: