சனி, 30 ஜனவரி, 2016

Chennai பெயர் மாற்றம்: பெருநகர சென்னை மாநகராட்சி'யாக ஜெயலலிதா அறிவிப்பு....நியுமொரோலாஜி ...

முதல்வர் அறிவிப்புக்குப் பிறகு, அதிகாரபூர்வ வலைதளத்தில் உடனடியாக திருத்தப்பட்ட சென்னை மாநாகராட்சியின் பெயர்.சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். முதல்வர் அறிவிப்புக்குப் பிறகு, அதிகாரபூர்வ வலைதளத்தில் உடனடியாக திருத்தப்பட்ட சென்னை மாநாகராட்சியின் பெயர். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் 31 அம்மா உணவகங்கள் திறப்பு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியினை 'பெருநகர சென்னை மாநகராட்சி' என அறிவித்து முதல்வர் துவக்கி வைத்தார்.இருந்து பாருங்க தமிழ்நாடு பெயரும்  பெருந்தமிழ்நாடு அல்லது   தமிழம்மா நாடு ன்னு மாத்துங்கன்னு கூவபோராய்ங்க

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "சென்னை மாநகராட்சியானது 10 மண்டலங்கள், 155 வார்டுகளுடன் 174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வந்தது. பின்னர் காஞ்சிபுரம் மற்றும திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, அதன் பரப்பளவினை 174 சதுர கிலோ மீட்டரிலிருந்து 426 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்ததைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியினை 'பெருநகர சென்னை மாநகராட்சி' எனப் பெயர் மாற்றம் செய்து 26.10.2015 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியினை 'பெருநகர சென்னை மாநகராட்சி' என அறிவித்து காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் துவக்கி வைத்தார்.
31 அம்மா உணவகங்கள்:
மேலும், திருவொற்றியூர், திரு.வி.க.நகர், இராயபுரம், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் 8 கோடியே 25 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 31 அம்மா உணவகங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
அம்மா சேவை மையங்கள்:
அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் களைந்து, தீர்வுகாணும் வகையில் அம்மா மக்கள் சேவை மையங்களை திறந்து வைத்தார்.
ரூ.81 கோடி செலவில் திட்டங்கள்:
மொத்தம் 81 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மக்கள் சேவை மையங்கள், உயிரி எரிவாயு கூடங்கள், பேருந்து நிலையம், குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள், அலுவலகக் கட்டடங்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்வர் தொடங்கி வைத்தார்    //tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: