ஞாயிறு, 24 ஜனவரி, 2016

விழுப்புரம் S.V.S கல்லூரி 3 மாணவிகள் கொலை? எஸ்.வி.எஸ் சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் தற்கொலை அல்ல....

மாணவி சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனை விழுப்புரம் மாவட்டம்
எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக்கல்லூரியின் மாணவிகள் 3 பேர் மரண மடைந்துள்ளனர். அவர்களின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மூன்று பேருக்கும் ஒரே மாதிரியாக பின் மண்டையில் அடிப்பட்டு ரத்தம் வழிந்திருப்பது கொலையா என்ற சந்தேகத்தை கிளப்புகிறது என்று மாணவிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்திருக்கும் நிலையில், கல்லூரி முதல்வரை கைது செய்யும் வரை மாணவிகளின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப அனுமதிக்க மாட்டோம் என்று பொதுமக்கள் போராடிக்கொண்டிருந்த நிலையில், மாணவி சரண்யாவின் உடல் தற்போது பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.nakkheeran,in  இது கொலையாக இருக்க கூடும் என்றே கருதவேண்டி உள்ளது . இந்த கல்லூரி நிர்வாகம் எப்படிபட்டது என்பதை ஏற்கனவே வினவு இணையம் தெளிவாக பல மாதங்களுக்கு முன்பே அறியத்தந்தது .அடிப்படை வசதி கூட இல்லாத இந்த கல்லூரிக்கு அனுமதி கொடுத்த  அன்றைய மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாசை எந்த  பட்டியலில் முதல் குற்றவாளியாக சேர்க்கவேண்டும்?

கருத்துகள் இல்லை: