வெள்ளி, 29 ஜனவரி, 2016

ஹேமமாலினி மும்பையில் சதுர மீட்டர் நிலம் வெறும் 35 ரூபாய்க்கு வாங்கிய கெட்டிக்காரி...அடுத்த டான்சி ராணி


For Hema Malini, land in Mumbai costs Rs 35 per square ... மும்பை : பாஜ எம்பி
ஹேமமாலினி மீது நில முறைகேடு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. பாஜ எம்பியும் பிரபல நடிகையுமான ஹேமமாலினி தான் தொடங்க இருக்கும் நடன பள்ளிக்காக விதிமுறைகளை மீறி நிலத்தை பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை மனு மூலம் பெறப்பட்ட தகவலையடுத்து சமூக ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளார். மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அனில் கல்காலி தகவல் அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட தகவலில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மும்பையி–்ன் மைய பகுதியான அந்தேரியில் நடன பள்ளி ஒன்றை தொடங்குவதற்காக நடிகை ஹேமமாலினிக்கு 2000 சதுர மீட்டர் நிலத்தை மகாராஷ்டிரா அரசு ஒதுக்கியுள்ளது. பல கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.70 ஆயிரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என அதில் தெரியவந்துள்ளது.


இதுகுறித்து அனில் கல்காலி கூறுகையில், ஹேமமாலினி முறைகேடாக நிலத்தை பெறுவது இதுவே முதல் முறையல்ல. கடந்த 1997ம் ஆண்டு இதே போல் பாஜ-சிவசேனா கூட்டணி ஆட்சியின் போது  மும்பை புறநகர் பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது. இது கடற்கரை ஒழுங்கு முறை விதிகளை மீறியதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து தற்போதுவரை அது நிலுவையில் உள்ளது. ஆனால் இன்றுவரை சர்ச்சைக்குரிய அந்த இடத்தை ஹேமமாலினி திருப்பி அளிக்கவில்லை. அதே நேரத்தில் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி ராஜிவ் சுக்லாவுக்கு அந்தேரியில் ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து பாஜ-சிவசேனா எதிர்ப்பு காரணமாக கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வலுக்கட்டாயமாக அதை அவர் திருப்பி அளிக்க நேர்ந்தது. தற்போது ஹேமமாலினிக்கு விதிமுறைகளை மீறி ஒரு சதுர மீட்டர் நகரின் மைய பகுதியில் வெறும் ரூ.35 க்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அனில் கல்காலி குற்றம் சாட்டியுள்ளார்.

நடன பள்ளி அமைக்க ரூ.18.49 கோடியில் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் இதில் அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து 25 சதவீத ஆவணங்களை மட்டுமே சமர்பித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனால் ரூ.3.5 கோடிக்கும் குறைவாக மட்டுமே சொத்துகளை காட்டியுள்ள ஹேமமாலினி மீதமுள்ள 75 சதவீதத்தி–்ற்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். எனவே இதுகுறித்து முதல்வர் பட்நவிசுக்கு புகார் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது இந்த விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  dinakara,com

கருத்துகள் இல்லை: