வியாழன், 31 டிசம்பர், 2015

ஆஸ்கர் அரிதான விருதாக தமிழ் சினிமா படைப்பாளிகள் ஏங்குவதை

puka desember back 1ஹாலிவுட் திரைப்படமான “டாப் கன்” ஓடிய திரையரங்குகள் அருகே ஆளெடுப்பு அலுவலகங்களை திறந்தது, அமெரிக்க இராணுவம். பதிலுக்கு அப்படத் தயாரிப்புக்கு இராணுவத்தின் பிரம்மாண்டமான தளவாடங்கள், படை வீரர்கள் திறந்து விடப்பட்டனர். இப்படி காசு கொடுத்தும், படம் காட்டியும் செய்யவில்லை என்றால் ஈராக்கிலோ, ஆப்கானிலோ சாவதற்கு ஏழை அமெரிக்கர்கள் கிடைக்க மாட்டார்கள். செவ்விந்தியர்களை ஒழித்து தோன்றிய அமெரிக்க ஏகாதிபத்தியம் களத்தில் செய்வதை ‘கலையில்’ செய்கிறது ஹாலிவுட். உலக அளவில் பயங்கரவாதிகள், கம்யூனிஸ்டுகள், வேற்று கிரக வில்லன்களை ஒழிக்கும் அமெரிக்க ஹீரோக்களின் பலம் கிராபிக்ஸினை மட்டும் சார்ந்திருக்கவில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்புக் கொள்கையின் விதிகளிலிருந்து ஆக்சன் ஹீரோக்கள் அஸ்திரங்களை உருவிக் கொள்கிறார்கள்.

இதே காலத்தில் வால் வீதியில் முதலாளித்துவம் ஒழிக என்ற மக்கள் முழக்கம் எழும்பியதையும் ஹாலிவுட் படைப்பாளிகள் கவனிக்கத் தவறவில்லை. அதையும் காசாக்குவதோடு இனி கதையில் பழைய டைப் வில்லன்களை தேறமாட்டார்கள் என முதலாளிகளும் கார்ப்பரேட்டுகளுமே ஹாலிவுட்டின் புதிய வில்லன்கள்.
puka desember wrapper 5ஒருக்கால் அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்க்காமல் கொஞ்சம் அனுதாபத்துடனாவது சொல்ல முடியுமா? நிச்சயம் ஹாலிவுட்டின் மூளை அப்படி சிந்திக்காது. மீறினால் கலை கொலை செய்யப்படும்.
ஆஸ்கர் விருதையே அரிதான விருதாக தமிழ் சினிமாக்களின் படைப்பாளிகள் ஏங்குவதை பார்த்திருப்போம். கூடவே இவர்களின் கண்ணோட்டத்தையும், கலையோட்டத்தையும் கூட ஹாலிவுட்டே தீர்மானிக்கிறது. காபி ஷாப்பில் காதல், பிட்சா கடையில் ஏழ்மை, ஐ.டி துறையில் குடும்பம், அமெரிக்காவில் பாடலென இவர்களின் உள்ளாடை கூட அமெரிக்காவின் தேசியக் கொடிதான்.
ஹாலிவுட்டின் இரகசிய விதிகளையும், பகிரங்க சாகசங்களையும், கலை அபத்தத்தையும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்த நூல்.
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
  1. THE AXE (2005): வேலை வேண்டுமா? கொலை செய்!
  2. BODY OF LIES (2008): ‘நாகரீக’ உலகின் போரும், உணர்ச்சியும்!
  3. The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !
  4. The Whistleblower (2010): அமெரிக்க, ஐ.நா அமைதிப்படையின் அட்டூழியங்கள்!
  5. The King’s Speech: ஆஸ்கர் விருதின் மற்றுமொரு அற்பத்தனம்!
  6. உலகப் போலீசின் உள்ளத்தை வெளிப்படுத்தும் 3 திரைப்படங்கள்!
  7. Salt of the Earth (1954) : மண்ணின் உப்பு! அமெரிக்க அரசின் வெறுப்பு!!
  8. ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை!
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 300
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1600
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com

கருத்துகள் இல்லை: