வியாழன், 31 டிசம்பர், 2015

ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம்...அனுமதிக்கப்பட்ட ஆடை - பட்டியலுடன் பலகை வைத்தது கோயில் நிர்வாகம்

ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடு விவரம் கொண்ட பலகை | படம்: சி.வெங்கடாசலபதி. ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடு விவரம் கொண்ட பலகை | படம்: சி.வெங்கடாசலபதி.
ஜனவரி 1 (நாளை) முதல் பக்தர்கள் என்ன மாதிரியான உடையணிந்து கோயிலுக்கு வரலாம் என்ற பட்டியலடங்கிய பலகைகளை தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில் நிர்வாகங்களும் வைத்துள்ளன. கோயிலுக்குள் லெக்கின்ஸ் அணிந்து பெண்கள் வரக்கூடாதாம்.
அந்த உடை ஆபாசம் என கலாச்சார காவலர்கள் சொல்கிறார்கள்.
சரி, இந்த இரண்டு படங்களில் எது ஆபாசமானது?

அம்மண சாமியார்களை ஆராதிக்கும் இந்து மதம்தான்,
பெண்களின் இந்த உடையை ஆபாசம் என சொல்கிறது.
இது ஏதோ இப்போது திடீரென நடக்கிறது என நினைத்தால் அது தவறு இந்து மதம் அடிப்படையிலேயே பெண்களை இழிவு படுத்தும் சனாதன மதம்.
இந்து மதம் ஏதோ பெண்களை மட்டும் இழிவு படுத்துகிறது என நினைத்தால் அது இன்னும் அறியாமை.

பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என கட்டளையிடும் அதே இந்து மதம் ஆண்களை அரை நிர்வாணமாக கோயிலுக்குள் வரச் சொல்லுகிறது.
இந்த வரிசையில் வேலூர் மாவட்டம் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலிலும் ஆடை கட்டுப்பாடு குறித்து விளக்கும் பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் ஆடவர் பேண்ட், சட்டை, வேட்டி போன்ற ஆடைகளையும், பெண்கள் சேலை, பாவாடை தாவனி, சுடிதார் துப்பட்டாவுடன் போன்ற ஆடைகளையும் அணிந்து வர வேண்டும். இதை கடைபிடிக்காத பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியது.
இந்த ஆடைக் கட்டுப்பாடு நாளை ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்.ஹிந்து.com

கருத்துகள் இல்லை: