செவ்வாய், 29 டிசம்பர், 2015

தாலிபன்களுடன் ரஷ்ய அதிபர் புட்டின் ரகசிய பேச்சு? ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில்....

தலிபான்களின் தற்போதையை தலைவர் முல்லா அக்தர் மன்சூரை ரஷ்ய
அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்ததாக  ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக ஊடுருவி உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்த நடத்தவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. முன்னாள் சோவியத் நாடுகளான துர்க்மெனிஸ்தான் மறு தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்., தீவிரவாதிகள் கால்பதித்துள்ளது புதினை கவலையில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, பிராந்திய அளவிலான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதின் கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் தஜிகிஸ்தான் தலைநகர் டஷன்பி சென்றிருந்தார். அப்போது இரண்டாம் நாள் இரவு விருந்தின் போது புதினும் தலிபான் தலைவரும் சந்தித்துக் கொண்டதாக தற்போது ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


ஆனால், புதினுடனான இந்த சந்திப்பை தலிபான் தரப்பு மறுத்துள்ளது. தங்களை சுற்றியுள்ள அண்டை நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும், ஆனால் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான்கள் கூறியுள்ளனர்  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: